May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பொது

1 min read
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் எந்தளவுக்கு ஊடுருவி வேலை செய்து வருகிறார்கள் பாருங்கள்…. பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் விளக்குகிறார் கடந்த அதிமுக ஆட்சி மொத்தமாகவே RSS ஆட்சியாகவே நடந்திருக்கிறது. நான் கடந்த ஆறு மாதமாக நிர்வாகத்துக்குள் இருந்து வரும் நிலையில் அதை உணர்கிறேன். அவர்களின் பிடியில் இருந்து மீள்வதற்கு படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம். நாங்களும் மீளலாம் என்று என்னென்னமோ செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் குழிகளை வெட்டிக் கொண்டே இருக்கிறான். ஒரு ஸ்டெப் எடுத்து வச்சோம்னா அடுத்து எங்க குழிவெட்டிருக்கான்னு தெரியமாட்டேங்குது. இந்த பத்து வருடங்களில் அவர்களின் வலை அந்த அளவுக்கு நுட்பமாகவும், ஆழமாகவும் விரிக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்க்க அது தெரிவதே இல்லை. அந்த வலையை அறுக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. ஆனால் அது சாமானியமல்ல. ஏன் அப்படினு கேட்டீங்கன்னா, நமக்குனு இருக்கும் அதிகாரம் ரொம்பக் குறைவு. இப்ப தமிழ்நாட்டுல மட்டும் நமக்கு அதிகாரம் ஓரளவுக்கு இருக்கு. ஆனா, இந்த அதிகாரத்தின் இன்னொரு பகுதி, பல அங்கங்கள் அவர்களிடம் இருக்கிறது, டெல்லியில் செகரட்டரியேட் என்று ஒன்று இருக்கிறது. அவர்களோடு சேர்ந்துதான் நாம் இத்தனை வேலைகளை செய்ய வேண்டியிருக்கு. நாம் இங்கே வேலை செய்யும்போது அவர்கள் அங்கிருந்து போடக் கூடிய உத்தரவுகள், திட்டங்களை எல்லாம் எதிர்த்து இடைவிடாது போராடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. எல்லா உயர் கல்வி நிறுவனங்களையும் அவர்கள் கைப்பற்றிக்கொண்டுவிட்டார்கள், அதுமட்டுமல்ல… முன்பெல்லாம் அவர்களின் கொள்கைகளை மறைமுகமாக திணிப்பதாகக் கருதினோம். இப்போது மறைமுகமெல்லாம் கிடையாது, ஓப்பனா,நேரடியா இதைத்தான் செய்யணும்னு சொல்கிறார்கள். ரிவ்யூக்கு வர்ற அதிகாரிகளாக யாரை அனுப்புகிறார்கள்னு கேட்டீங்கன்னா சாஸ்திரிகளையும் மேஸ்திரிகளையும் அனுப்பறாங்க. அவர்கள் என்ன கேட்கிறாங்கன்னா, ‘பெரியார் பத்தியும் தமிழ் பத்தியும் எதுக்கு ஆராய்ச்சி பண்றீங்க? இதெல்லாம் நாட்டுக்குத் தேவையா? அர்த்த சாஸ்திரம் பத்தி ரிசர்ச் பண்ணுங்கனு நேரடியாம நம்ம ஊருக்கே வந்து சொல்றாங்க. அந்த அளவுக்கு மோசமாகிக் கொண்டிருக்கிறது. இப்படி பல்கலைக்கழகங்களில் வேர் விட முயற்சி செய்கிறார்கள், பாடத் திட்டங்களில் வேர் விட முயற்சி செய்கிறார்கள். நிதித் திட்டங்களில் வேர் விட முயற்சி செய்கிறார்கள். இப்படி பல தளங்களில் அவர்கள் வேர் விட முயற்சி செய்கிறார்கள்.  -பேராசிரியர் ஜெயரஞ்சன், ( தமுமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் ஜெ. ஹாஜாகனி அவர்களின் ‘சூடு’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையில்)
1 min read
எனது வாழ்க்கைப் பயணத்தில் நான் ரசித்த அனுபவங்கள்.. நகைச்சுவைத் துணுக்குகள் (சில நான் கூறியவை, வேறு சில மற்றவர்...
1 min read
ஆர்எஸ்எஸ் பரிவாரங்களைச் சேர்ந்த சாமியார்கள், பாஜக தலைவர்கள், கடந்த டிசம்பர் 17 முதல் 19-ஆம் தேதி வரை நாடு...
1 min read
ஏ ஜி நூரானி எழுதிய இந்த நூலின் தமிழ் மொழியாக்கத்தின் பிழை திருத்தும் பணியை முடித்து புத்தாண்டைத் துவக்குகிறேன். 25 அத்தியாயங்கள் 700 பக்கங்கள் இது தவிர 230 பக்கங்களில் 16 பின்னிணைப்புகள். அத்தனையும் வரலாற்று ஆவணங்கள். மொத்தம் 930 பக்கங்கள் இரண்டு வருட உழைப்பு விரைவில் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வரவிருக்கிறது. இந்த ஆண்டில் அதிகம் பேசப்படும் நூல்களில் ஒன்றாக இருக்கும் என்று இந்த கணத்தில் உணர்கிறேன். -விஜயசங்கர் ராமச்சந்திரன், ஆசிரியர், ஃப்ரண்ட்லைன்
1 min read
தாமஸ் ஃப்ராங்கோ (அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர்) அரசமைப்புச் சட்டத்தின் வலிமையானது, ஒவ்வொரு குடிமகனுக்கும் அதைப் பாதுகாப்பதில் உள்ள உறுதியிலேயே உள்ளது. ஒவ்வொரு குடிமகனும்...
பாஜக ஆளும் கர்நாடகத்தில் மதமாற்ற தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஜனநாயக விரோதச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுபான்மை கிறித்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தன. எனினும் மாநிலத்தில் எத்தனை யோ பிரச்சனைகள் இருக்க அவசர அவசரமாக இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது பசவராஜ் பொம்மை அரசு. கர்நாடகத்தில் இந்துக்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதாக பாஜக எம்எல்ஏ கூலிஹட்டி சேகர் கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறினார்.  மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வருவ தற்கான முன்னோட்டமாக இது கருதப்பட்டது. இந்நிலையில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது கர்நாடக அரசு.  ‘கட்டாய மத உரிமை சட்ட மசோதா 2021’ என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட மசோதாவில் மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச மாக 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அப ராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எந்தவொரு மதத்தையும் பின்பற்றவும், வழிபாடு நடத்தவும், பிரச்சாரம் செய்யவும் இந்திய அரசியல் சாசனம் உரிமை வழங்கி யுள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்க ளான உ.பி, குஜராத்தில் இத்தகைய சட்டம் கொண்டு வரப்பட்டது. முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் ம.பி.யிலும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.  இந்திய அரசமைப்புச் சட்டம் 25 மற்றும் 26ஆவது பிரிவுக்கெதிரானது இந்த மதமாற்ற தடைச் சட்டம். இத்தகைய சட்டத்தை ஒன்றிய அளவிலும் கொண்டு வரப்போவதாக அவ்வப்போது பாஜகவினர் மிரட்டி வருகின்றனர்.  சிறுபான்மை கிறித்துவ மற்றும் முஸ்லிம்க ளுக்கு எதிராக இந்துத்துவா வெறியர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். மாட்டிறைச்சி  சாப்பிட்டதாக கூறி யும், லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக கூறியும்   சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகின்ற னர். அத்தகைய அராஜகத்தில் ஈடுபடும் வெறி யர்களின் கையில் மேலும் ஒரு ஆயுதமாகவே இந்த கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் பாஜக ஆளும் மாநிலங்களில் தரப்படுகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் போன்ற உயர் பொறுப்புகளில் இருப்பவர்களே பேசி வருகின்றனர். இந்துத்துவா பரிவாரத்திற்கு இத்தகைய பேச்சுக்கள் ஊக்கமளிக்கின்றன.  உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நெருங்குவதையொட்டி மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் பிரச்சாரம் மீண்டும் வேகமாக கிளப்பி விடப்படுகிறது. ஹரித்துவாரில் மதங்களின் நாடாளுமன்றம் என்ற பெயரில் நடத்தப்பட்ட மூன்று நாள் கூட்டம் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வெறியைத் தூண்டுவதாக நடந்துள்ளது. தேசத்தின் மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து நிற்க வேண்டிய நேரம்இது. (தீக்கதிர் தலையங்கம்.. 25 டிசம்பர் 2021)
தில்லியில் நடந்த ஒரு சங் பரிவார கூட்டம்; ஜெர்மனி நாஜிக்கள் போல உறுதி மொழி எடுப்பு. உறுதி மொழி வாசகங்கள் : Ø இந்த உறுதி மொழி எங்கள் உயிர் இருக்கும் வரை! Ø இந்தியாவை இந்து தேசமாக மட்டுமே வைத்திருப்போம்! Ø அதற்காக உயிரை கொடுப்போம்! உயிரையும் எடுப்போம்!! Ø எந்த தியாகம் செய்யவும் ஒரு வினாடி கூட தயங்க மாட்டோம்! Ø எங்கள் குரு தேவ் அவர்களே! எங்களது முன்னோர்களே! பாரத மாதாவே இந்த உறுதி மொழியை அமலாக்க எங்களுக்கு வலிமை கொடுங்கள்! வெற்றியை தாருங்கள்!! Ø இந்து ராஷ்ட்ராவை உருவாக்கியே தீருவோம்! ——————————————————————————– இந்து ராஷ்ட்ராவை உருவாக்கியே தீருவோம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்....
இன்று காலை 6 மணிக்கு, சென்னையிலிருந்து மதுரை செல்லும் ‘தேஜஸ்’ ரயிலில் ஏறினேன். டிக்கெட் 920 ரூபாய். டிக்கெட் பரிசோதகர் கூடுதலாக ரூ.20 கொடுக்குமாறு கேட்டார்.  “எதற்கு” என்றேன்.  “பேப்பருக்கும் தண்ணீர் பாட்டிலுக்கும்” என்றார். ” நான் உங்களிடம் கேட்கவே இல்லையே. நீங்களாகவே கொடுத்து விட்டு, எப்படி விலைகேட்கிறீர்கள்?” அவர் கையிலிருந்த பயணிகள் பட்டியலைக் காண்பித்து, “ரயில்வே வசூலிக்கச் சொல்கிறது” என்றார். (நான் ரயில் பெட்டியில் ஏறும்போதே, எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் ‘தினமலர்’ பத்திரிகை கிடந்தது).  “தினமலருக்கு ரயில்வே ஏன் ஏஜென்ட் வேலைபார்க்கிறது. அந்தப் பேப்பரை நான் விலை கொடுத்து வாங்கியே தீரவேண்டும் என கட்டாயப்படுத்த ரயில்வேக்கு என்ன அதிகாரம்? பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். நான் பணம் தரமுடியாது” என உறுதியாகச் சொன்னேன். அவர் பேசாமல் நகர்ந்தார்.  ஆனால் மற்றவர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டே சென்றார்.  ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொண்ட குடும்பம் பக்கத்து இருக்கைகளில் பயணம் செய்தது.  மூன்று பேருக்கும் தினமலர் கொடுத்து, பேப்பர்களுக்கான விலையை வசூலித்தார். என்ன கொடுமை இது!  அனைவரும் வாய்பேசாமல் பணம் கொடுத்தது வியப்பாக உள்ளது!  தேஜஸ் ரயிலில் 14 பெட்டிகள். ஒரு பெட்டிக்கு எழுபத்தி எட்டு இருக்கைகள். (14×78=1092) இந்த ஒரு ரயிலில் மட்டும் 1092 தினமலர் இதழ்களை தினமும் விற்று தினமலருக்கு பணம் கொடுக்கிறது ரயில்வே! ...
1 min read
-சாவித்திரி கண்ணன்  கொஞ்சம் கூட கூச்ச, நாச்சமில்லாமல் ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு இன்று தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு சங்காராச்சாரியார் வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்! நேர்மையான விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளுக்கே இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மததுவேஷ கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் என பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மக்கள் சந்திக்கும் அடிப்படையான பல பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி சதா சர்வ காலமும் என்ன வேண்டுமானாலும் பேசுவது, அவதூறுகளை அள்ளிவிடுவது  என இயங்கி வருபவருக்கு எப்படிப்பட்ட பின்புலம் இருக்கிறது என்பதற்கு இன்றைக்கு அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு, நீதிபதியே அவரது வக்கீலாக மாறி கேள்வி கேட்டு இருப்பதே சாட்சியாகும். இந்தியாவின் மிகப் பெரிய முப்படைத் தளபதி ஒரு விபத்தில் இறந்த அதிர்ச்சியில் இந்த தேசமே உறைந்திருக்கும் வேளையில், ”திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்திற்கு எந்தப் பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்’’ என டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார் மாரிதாஸ். இது ஒரு விஷக் கருத்தா இல்லையா? இது விஷக் கருத்து என்பதால் தானே போட்ட சில நிமிடங்களில் அந்த டிவிட்டை மாரிதாஸ் எடுத்துவிட்டார்? அப்படியானால், அதற்கு வருத்தம் தெரிவித்து இருக்கலாமே! இந்த கருத்திற்கு எதிர்வினையாற்ற திமுகவினர் முனைந்தால் அது எவ்வளவு பெரிய கொந்தளிப்பில் சென்று முடியும்? இன்றைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, “அவரது ட்விட்டரில் முப்படைத் தளபதி குறித்த கருத்துகளின்போது தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இதைப் பார்த்தால் தவறாக நினைப்பார்கள். மாநிலத்தின் நேர்மை குறித்தே கேள்வியெழுப்பியுள்ளார். எந்த அடிப்படையில் இந்தக் கருத்தைப் பதிவுசெய்தார் என விசாரிக்கவேண்டியுள்ளது” என்ற வாதிட்டார். ஆனால், இந்த சப்ஜெக்டில் இருந்து வெளியேறியவராக திடீரென குறுக்கிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “சுப்பிரமணிய சுவாமியும் இது போன்ற கேள்வியை எழுப்பியிருந்தாரே, அவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டதா, ஜெயலலிதா மரணத்தின் போதும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டனவே” என்று கூறுகிறார் என்றால், என்ன பொருள்? ஒரு திருடனைப் பிடித்து கோர்ட்டில் நிறுத்தினால், அவன் திருடியது உண்மையா என்பதை தீர விசாரிக்காமல்,...
1 min read
திருச்சிராப்பள்ளி, டிச.12- திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவி லுக்குள் புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞரும் வைணவ சமய ஆராய்ச்சியாளரு...
1 min read
ஜென்னிங்கிஸ் ரண்டாலப் என்ற கல்லூரி மாணவன் 1922-ல் நெப்போலியன் ஹில் என்ற மாபெரும் எழுத்தாளருக்கு எழுதிய கடிதம் : ”...
இது ‘ஸ்டாண்ட் அப்’ காமெடியன்களின் காலம். தனிநபரால் ஆங்கிலத்தில் நடத்தப்படும் இந்த வகை நகைச்சுவை நிகழ்ச்சிகளை முன்பெல்லாம் ஐ.டி. துறையினர் மட்டுமே ரசிப்பார்கள் என்று நம்பப்பட்டது. தற்போது அவற்றின் உள்ளடக்கம் காரணமாகப் பரவலாகிவருகிறது. கூடவே, நகைச்சுவைக்கு அரசியல் சாயம் பூசும் வேலைகளும் நடக்கின்றன. ‘ஸ்டாண்ட் அப்’ காமெடியன் முனவர் ஃபரூக்கி, இந்து மதத்தையும் இந்துக் கடவுளர்களையும் தன்  நகைச்சுவை மூலம் இழிவுபடுத்திவிட்டார் என்று இந்து அமைப்பினர் சர்ச்சையைக் கிளப்பினர். இது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் ஜனவரி 1 அன்று இந்தூரில் கைது செய்யப்பட்டார் முனவர் ஃபரூக்கி. ஒரு மாதத்துக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு அதன் பிறகே நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் கிடைத்தது. பிறகு சூரத், அகமதாபாத், வதோதரா, மும்பை, ராய்ப்பூர் ஆகிய இடங்களில் முனவர் நடத்துவதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து தற்போது பெங்களூருவில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. முனவர் ஃபரூக்கி மீது பல மாநிலங்களிலும் வழக்குப் பதியப்பட்டுள்ளதால், பெங்களூரு நிகழ்ச்சியால் மக்களின் அமைதி கெடும் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.  தன்னுடைய நிகழ்வுகள் வலதுசாரிகளின் அச்சுறுத்தலால் ரத்து செய்யப்படுவதைப் பற்றி, ‘வெறுப்பு வென்றது; கலைஞன் தோற்றுவிட்டான். நான் விடைபெறுகிறேன். அநீதி’ என்று தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முனவர் ஃபரூக்கி மீதான வலதுசாரிகளின் நூதன தாக்குதல் குறித்து வருத்தம் தெரிவித்திருந்த சக நகைச்சுவைக் கலைஞரான குனால் கம்ரா, “கலைஞர்கள் தங்கள் நகைச்சுவைக்காக நிறைய விலைகொடுக்க வேண்டியுள்ளது. பல கலைஞர்கள் தாங்கள் நிகழ்த்தப்போகும் நிகழ்ச்சியின் உள்ளடக்கம் குறித்துத் தங்கள் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்டுவிட்டு அதன் பிறகே வீடியோவை வெளியிடுகின்றனர்” என்று ட்வீட் செய்திருந்தார். தற்போது குனாலின் நகைச்சுவை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. “இப்போது நான்தான் புதிய வேற்றுரு வைரஸ் போல” என்று பதிவிட்டுள்ளார்.
1 min read
அன்புள்ள நண்பர்களே மீண்டும் நினைவுபடுத்துகிறோம். இணைய இதழைப் பராமரிக்க நிதி தேவைப்படுகிறது. நன்கொடை தர விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கிக்...
1 min read
ஐந்து மாநிலத் தேர்தல்கள் நெருங்குகின்றன. தேர்தலில் எப்படியும் வென்றே ஆகவேண்டும் என்ற இலக்குடன்  யோகி ஆதித்யநாத், இபிஸ், ஓபிஎஸ்,...
1 min read
1992-ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாளன்று பாரதீய ஜனதா கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்துத்துவா அமைப்புகளின்...
1 min read
*RSS பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட பத்தனம்திட்டா தோழர்.சந்தீப் குடும்பத்தை மார்க்சிஸ்ட் கட்சி தத்தெடுத்துக் கொண்டது…* *அவரது மனைவிக்கு வேலை கொடுக்கப்படும்..  குழந்தைகளின் கல்விச் செலவை கட்சி ஏற்றுக் கொள்ளும்…* *தோழரின் இழப்பை இது ஈடு செய்யாது என்றபோதிலும்  அவரது குடும்பத்தைப் பாதுகாப்பது கட்சியின் கடமை என்ற அளவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.* 
1 min read
# என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!  பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்? ……………………………………………………………… # படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்யப் போறே? புக்கை மூடிடுவேன்! ……………………………………………………………… #காலில் என்ன காயம்? செருப்பு கடித்து விட்டது பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா! …………………………………………………….. # குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்? தெரியல, குளிக்கும்போதே துவட்ட முடியாதே! …………………………………………………………….....
திருவள்ளுவர் இன்று இருந்து தமிழகத்தை உலுக்கிய மழை வெள்ளத்தை அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார் என்று ஒரு...
1 min read
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்திற்குச் சென்றால் மிகவும் வித்தியாசமானதொரு காட்சி கிடைக்கும். பல பிளாஸ்டிக்-தார்...
1 min read
ஓராண்டு காலமாக பேசமறுத்த, விவசாயிகள் தொடர் மரணங்கள் ஏற்பட்ட பின்னரும் தடுத்து நிறுத்த தவறி, 703 விவசாயிகள்  வீரமரணத்திற்கு பின்னும்கூட...
1 min read
நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்கு எவ்வித வாக்குறுதியையும் அது கொடுத்துவிட்டு, ‘ஆறின கஞ்சி பழங் கஞ்சி’ எனும் நிலையில், கொடுத்த வாக்குறுதியைக்...
வரும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தில் இதற்கான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் ! போராட்டம் நடத்திய சம்யுக்தா கிஷான் மோர்ச்சாவின்  பத்திரிகைச்...
டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க “விவசாயிகள் மட்டுமே காரணம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள். காற்று மாசு அதிகரிக்க...
1 min read
தமுஎகச கண்டனம் ஜெய்பீம் படம் குறித்து அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் நடிகருமான சூர்யாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிச்...
சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மேகாலயா மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது சமீபத்திய செயல்பாடுகளில்  முக்கியமானவை புதுச்சேரி...
1 min read
“ஜெய்பீம் படம் பார்த்துவிட்டீர்களா?” என்று நேற்று முழுவதும் தோழர்கள் விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். உடனடியாக படத்தைப் பார்க்காமல் இருப்பதே ஒரு...
ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் சாப்பிட்டு முடித்தவுடன் பாக்கெட்டை தடவியபோது, அங்கு பர்ஸைக் காணவில்லை. யாரோ பிக்பாக்கெட்...
1 min read
ஐந்து மாநிலத் தேர்தல்கள் நெருங்குகின்றன. பிரதமர் மோடியும் அவரது சகா அமித் ஷாவும் சுறுசுறுப்பாகின்றனர். அவிழ்த்துவிட வேண்டிய பொய்களின் பட்டியல் தயாராகிறது. ஒத்திகையும் செய்து பார்க்கின்றனர். சங் பரிவாரத்தினரைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. ஊடகங்களை மிரட்டுவதற்கு செய்ய வேண்டியவை..சமூக ஊடகங்களில் செய்ய வேண்டிய கண்காணிப்பு வேலைகள், தயாரிக்க வேண்டிய காணொலிக் காட்சிகள்.. என ஏராளமான வேலைகள் காத்திருக்கின்றன. ஆர்எஸ்எஸ் “சர்சங்சாலக்” மோகன் பகவத்தும் வலம் வரத் தொடங்கிவிட்டார். மோடியும் ஷாவும் உரையாடுகின்றனர்.    மோடி : காஷ்மீர் போனீங்களே.. அங்கே என்ன பேசினீங்க?    ஷா : எல்லாம் நீங்க கத்துக் கொடுத்த வித்தைதான்.. 70 வருஷமா அங்கே வளர்ச்சிக்குக் குறுக்கே நின்னவங்களையெல்லாம் வெரட்டி விட்டுட்டோம். “நேருவின் பாதை-எங்கள் பாதை”ன்னு நின்ன தலைவர்களையெல்லாம் செமத்தியா கவனிச்சுட்டோம். எங்ககிட்ட யாராவது வாலாட்டினா தொலைச்சுப்பிடுவோம் ஜாக்கிரதைன்னு மிரட்டிட்டு வந்தேன். அது சரி.. கோவா போனீங்களே.. நீங்க என்ன பேசினீங்க?    மோடி : நாம வேற எதைப் பத்திப் பேசப் போறோம்? வளர்ச்சி பற்றித்தான். அதைப் புதுசா எப்படி சொல்லலாம்னு யோசிச்சேன். கோவா முன்னேறணும்னா அங்கே இரட்டை எஞ்சின் ஆட்சி தொடரணும்னு பேசினேன்,,    ஷா : இரட்டை எஞ்சின்னா ரெட்டை மாட்டு வண்டின்னு நெனச்சுர மாட்டாங்களா..?    மோடி : அப்படி நெனச்சாலும் தப்பில்லையே.? நம்மோட பாரம்பரிய ஆட்சி.. ராமபிரானோட ஆட்சின்னு நெனச்சா நல்லதுதானே? ...