May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பொது

1 min read
க.சிவசங்கர் ஒரு தொழிலாளி தன் இளமைக் காலம் முழுவதும் செலுத்திய உழைப்பின் பலனை உடலில் வலு இல்லாத தன் இறுதிக் காலத்தில், தன் வாழ்க்கையை யாருடைய உதவியும் இன்றி குறைந்தபட்ச கௌரவத்துடன் அமைத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டமே (Social Security Scheme) ஓய்வூதியம். 1982-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்தியாவில் ஓய்வூதிய நடைமுறை குறித்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பில், “ஓய்வூதியம் என்பது அரசின் கருணைத்தொகையோ, நன்கொடையோ அல்ல. ஓர் அரசு ஊழியர் பல ஆண்டு காலம் அரசாங்கத்துக்கும், பொதுமக்களுக்கும் பணியாற்றியமைக்காக அவர் பெறும் உரிமைத் தொகையாகும். அரசு ஊழியர் ஓய்வுபெற்ற பின்னர் அவர் அமைதியாகவும், கௌரவமாகவும் வாழ்வதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. ஓய்வூதியம் வழங்குவதால் அரசிற்கு நட்டம் வருமா? ஓய்வூதியம் கொடுப்பதால் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் நொடிந்து போய் நட்டத்தில் சென்று விடும் என்று பரப்பப்படும் செய்திகளில் துளி உண்மையும் இல்லை. அந்த நிறுவனத்தின் லாபக் குவிப்பில் ஒரு சிறிய அளவு குறையும்; அவ்வளவே. மற்றபடி அது நட்டத்தில் போவதற்கு வேறு பல காரணங்கள் இருக்கலாமே ஒழிய, ஓய்வூதியம் கொடுக்கப்படுவதே காரணம் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மேலும் ஓய்வூதியம் வழங்குவதால் அரசிற்கு நட்டம் ஏற்படுகிறது என்ற கருத்தும் அதிகமாக முன்வைக்கப்படுகிறது. அரசிற்கு வருவாயை ஈட்டக்கூடிய லாபம் கொழிக்கும் கேந்திரமான துறைகளை ஒவ்வொன்றாக தனியாருக்குத் தாரை வார்த்து விட்டு, அரசிடம் பணம் இல்லை என்று சொல்வது எவ்வாறு சரியாக இருக்கும்? மாறாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வருவாய் ஈட்டும் துறைகள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் மிகச்சில தனி நபர்களிடம் குவிந்துள்ள செல்வம் அரசின் கஜனாவிற்கு வந்து சேரும். இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அல்ல, அமைப்பு சாரா பணிகளில் இருக்கும் வயது மூத்தோர்களுக்கும் கூட  ஓய்வூதியம் வழங்க இயலும். புதிய ஓய்வூதிய திட்டமா? பழைய ஓய்வூதிய திட்டமா? ஒரு தொழிலாளி ஓய்வு பெற்ற காலம் முதல் தான் இறக்கும் காலம் வரை மாதம்தோறும் முறைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட தொகையைப் (Defined pension) பெறுவதற்கு வழிவகுப்பது பழைய ஓய்வூதிய திட்டம் மட்டுமே. மாறாக தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி ஒரு தொழிலாளி பணியில் இருக்கும் காலம் முழுவதும் சேகரிக்கப்படும் பணத்தின் பெரும்பகுதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. எக்காலத்திலும் நிலையான மதிப்பைக் கொண்டிருக்காத, மதிப்பிழக்கும் ஆபத்தை அதிகம் கொண்ட பங்குச்சந்தையினால் தன் வாழ்நாள் முழுவதும் சேகரித்த பணம் எப்போது பறிபோகுமோ என்ற அச்சத்துடன், எந்த வகையிலும் தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத மிகக் குறைந்த அளவிலான மாதாந்திர தொகையை ஓய்வூதியம் என்ற பெயரில் வாங்க வேண்டிய அவல நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர். பாதுகாப்புத்துறை ஊழியர்கள் (Defense Employees) இத்தகைய நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்ற காரணத்தினால் தான் அரசு அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்கிறது....

2022 மே 11 பதிவுக்கு மூன்று படங்கள்…
*மூதாதையர்கள்  சிந்திய**ரத்தம் முழுவதையும்**முதலில் அளந்தவன் அவனே !**உற்பத்திப் பொருட்களின்**ஓரத்தில் படிந்த**ரத்தத்தை பார்த்த**முதல் மனிதன் அவனே !**அவன்**மின்சாரத்தைப்**புத்தகங்களில்* *அடைத்து**மனிதனிடம்* *கொடுத்தான்**பிடித்தவர்கள்* *தலைகளில்**பல்புகள் எரிந்தன ..**பனித்துளிகளை* *எல்லாம்**சேகரித்து**பாலருவியாய்* *ஓடவிடும்**பொறுமை* *அவனுக்கிருந்தது…**அவனுக்கு**விரக்தி வந்திருந்தால்**விரக்திக்கு மருந்து**கிடைத்திருக்காது ….**பழைய சமூக அமைப்பிற்கு**சவப்பெட்டி ஒன்றை**தன் கையாலேயே**செய்து முடித்த* *பின்தான்**மானுடம் அவனது* *சவப்பெட்டியில்**மங்காத* *ஒளிவிளக்கை**ஏற்றிவைத்தது ..**அவனுக்கு**இரண்டு பெயர்கள்**ஓன்று மார்க்ஸ்**மற்றொன்று உண்மை !!*                – *கவிஞர் கந்தர்வன்* 
1 min read
கே.ராஜு- முன்னாள் தலைவர், மூட்டா # What is evaporation? .. என்பது கேள்வி. எவாபரேஷன் கடினமான வார்த்தை. அதோட ஸ்பெல்லிங்க சரியா...
1 min read
புதிதாக வர இருக்கும் கழிப்பறைகள் அழகியலுடன் வடிவமைக்கப்பட்டவை.. சிறந்த பொறியியல் நுணுக்கத்தோடு தயாரிக்கப்பட்டவை.. திடக் கழிவுகளிலிருந்து சாம்பலைத் தவிர...
1 min read
எங்கள் தோழரின் அடுத்த நூல் தயாராகி விட்டது. ச. மாடசாமி  தோழரின் முகநூல் பதிவுகளில் நாம் கற்க  ஒன்று இருந்து கொண்டே இருக்கும். ஒன்றை தெரியப்படுத்துவார்; ஒன்றை பகுத்துக் காட்டியிருப்பார்; மிக முக்கியமாக ஒன்றைப் புரிய வைத்திருப்பார். இந்த மூன்றும் பாடநூலுக்கு முக்கியம்.  முகநூலிலிருந்து நூலாக அச்சாகியிருப்பதால் இவை அடையப் போகும் கைகள் ஆயிரமாயிரம். முகநூலே புழக்கமில்லாத கைகள் அதில் முக்கியமானவை.  இந்நூல் நமக்கு ஒரு மருந்துச் சீட்டு போல ;  கனக்காத ஒரு பாட நூல் போல.  சமகாலத்தை மேலும் புரிந்து கொள்ள வாசிப்போம். வாங்கிப் பகிர்வோம்.  -சக.முத்துக்கண்ணன். பாரதி புத்தகாலயம். வாட்சப் தொடர்பு எண்: 9443066449
1 min read
# மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி ஏற்பாடு செய்கிறார். நிகழ்ச்சியில் மோடிதான் பேசுவாரே தவிர, வேறு...
1 min read
கே.ராஜு- முன்னாள் தலைவர், மூட்டா    # உலகை வேகமாகச் சுற்றி வந்தவர் யார்.. என்று சில வருடங்களுக்கு...
1 min read
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்  2018-ம் ஆண்டில் சுகாதாரம் குறித்த ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள பீகிங் சென்றிருந்தார். நாம் பயன்படுத்தி வரும் ஃபிளஷ்-அவுட் கழிப்பறைகளை மீட்டுருவாக்கம் செய்து சுகாதாரத்தில் மேம்பட்ட கழிப்பறைகளை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது அவரது பயணத்தின் முக்கிய நோக்கம். இந்தக் கண்டுபிடிப்பு துப்புரவுச் சூழலை வேகமாகப் பரவலாக்கி வளரும் நாடுகளிலுள்ள குழந்தைகளை வளர்ச்சிக் குறைபாடுகளிலிருந்து காப்பாற்றி புத்துயிர் அளிக்கவல்லது என்கிறார் பில் கேட்ஸ். இந்தக் குழந்தைகள் பல இடங்களில் மனித மலம் உள்ள திறந்த வெளிகளில் விளையாடி ஊட்டச்சத்துக் குறைபாடு, வளர்ச்சிச் குன்றல் (stunting)  போன்ற பாதிப்புகளை வரவழைத்துக் கொள்வதற்கு ஒரு தீர்வாக புதிய கழிப்பறைகள் வர இருக்கின்றன. 200 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்து, கடந்த ஏழு வருடங்களாக பில் கேட்ஸ் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (பிஎம்ஜிஎஃப்) துப்புரவுச் சூழலை கணிசமாக மேம்படுத்தக் கூடிய புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய முயற்சி செய்துவருகிறது. இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் புதிய கழிப்பறை பரிசோதனைகளுக்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் மேலும் 200 மில்லியன் டாலர்களை அந்த அறக்கட்டளை ஒதுக்கீடு செய்திருக்கிறது. உலகில் 5 வயதுக்குட்பட்ட 22.2 சத குழந்தைகள்   (151 மில்லியன்) வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ளவை என ஐக்கியநாடுகள் சபையின் உலகநாடுகள் குழந்தைநல அவசர ஏற்பாட்டு நிதி (யுனிசெஃப்) 2017-ம் ஆண்டில் அறிவித்தது. வளரும் நாடுகளில் துப்புரவின்மை காரணமாக ஓர் ஆண்டில் உடல்நலப் பாதுகாப்பிற்காக 260 பில்லியன் டாலர்கள் செலவிட வேண்டிய தேவை இருப்பதாக உலக வங்கி கூறுகிறது. சுகாதார மேம்பாட்டை பரவலாக்குவது ஒரு சவால் மிகுந்த பணி என்கிறார் பில் கேட்ஸ். கணினி வரலாற்றின் தொடக்கத்தில் பெரிய இடத்தை அடைத்துக் கொண்டு இயங்கிவந்த தலைமைக் கணிப்பொறி (mainframe computer)  நாம் தற்போது பயன்படுத்தும் சிறிய அளவிலான தனிப்பட்டவர்களுக்கான கணினியாக (personal computer)  மாறி வந்ததற்கு இணையான சவால் அது என்கிறார் அவர். முதலில் தலைமைக் கணிப்பொறியை பணபலம் கொண்ட அரசும் பெரிய நிறுவனங்களும் மட்டுமே பயன்படுத்தும் வசதி பெற்றிருந்தன. இன்று சுமாரான வருமானம் உள்ளவரும் வாங்கும் செலிவில் தனிப்பட்டவர்களுக்கான கணினிகள் சந்தைக்கு வந்துவிடவில்லையா?...
1 min read
உடலின் பல பாகங்கள் பெருமளவு செயலிழந்த நிலையில், 2005-ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சி நிலையத்துக்கு, சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்டார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங்.”இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?” எனக் கேட்டார்கள். “முன்பைவிட மிகவும் சுவையாகவும், சவால்கள் நிறைந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது”என்றார் ஹாக்கிங். “இந்த உடல் நிலையுடன் உங்களால் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா?”என்று அடுத்த கேள்வி தயக்கத்தோடு கேட்கப்பட்டது. அதற்கு ஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன பதில்: “எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன ஆற்றல் உங்களிடம் மீதமிருக்கிறது என்பதே வாழ்க்கையில் முக்கியம்!”
1 min read
 பாஜக வெல்ல முடியாத சக்தி அல்ல ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர்த்து 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதால், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த வெற்றி உறுதியாகி  விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை மாநில அளவிலான பிரச்சனைகளை முன்வைத்து மக்கள் தீர்ப்பளிக்கிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற  உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் வாக்கு சதவீதத்தில் 50 விழுக்காட்டைத் தாண்டவில்லை. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 254 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால் கடந்த சட்டப்பேரவையில் அக்கட்சி 312  இடங்களைக் கொண்டிருந்தது. தற்போது 58 இடங்களை இழந்துள்ளது. ஆனால் அம்மாநிலத்தில் அகிலேஷ் தலைமையிலான முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கடந்த தேர்தலில் 47 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. இந்தத் தேர்தலில் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் இதர மதச்சார்பற்ற சக்திகள் சமாஜ்வாதி கூட்டணியில் இடம்பெற்றிருந்தால் இன்று பாஜக அம்மாநிலத்தில் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர்ந்திருக்கும். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்கு 51.09 விழுக்காடாகும். எனவே வரும் மக்களவைத் தேர்தலில்  மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை வீழ்த்தமுடியும். மதச்சார்பற்ற சக்திகளின் பிளவை பாஜக பயன்படுத்திக் கொண்டு தன்னை தக்க வைத்துக்கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.    உத்தரப்பிரதேச வெற்றி பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளுக்கும் பாஜக கொள்கைகளுக்கும்  கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறுகிறார்கள். அப்படியே வைத்துக் கொண்டாலும் பஞ்சாபில் ஏன் வெற்றி கிடைக்கவில்லை? கோவாவில் தட்டுத் தடுமாறித்தான் பாஜக பிழைத்திருக்கிறது?. இந்த கதி ஏற்பட என்ன  காரணம்? எனவே 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒன்றிய பாஜக அரசு மீதான மதிப்பீடு அடிப்படையிலும் எதிர்க்கட்சிகள் அமைக்க உள்ள கூட்டணியைப் பொறுத்தும்தான் அமையும். இருப்பினும் மாநிலத் தேர்தல் வெற்றியை வைத்து ஒரு பதற்றத்தை உருவாக்குவது உளவியல் ரீதியாக மக்களைச் சலவை செய்யும் தந்திரமான முயற்சியைத் தவிர வேறு இல்லை.  பாஜக வெல்லமுடியாத சக்தி  அல்ல. அக்கட்சியின் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகவும் பெருநிறுவன ஆதிக்கத்திற்கு எதிராகவும் அதிகரித்துவரும் பாசிச எதேச்சதிகாரத்திற்கு எதிராகவும் போராட்டங்களை இருமடங்கு வீச்சில் மேற்கொள்ளவேண்டியது மதச்சார்பற்ற சக்திகளின் கடமையாகும். -தீக்கதிர் தலையங்கம் 12 மார்ச்...
1 min read
கே.ராஜு- முன்னாள் தலைவர், மூட்டா     # 1950-களில் நான் திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒன்பதாவது...
குஜராத்தில் ஒரு ரயில் பயணத்தில் இளம் பெண் ஒருத்தி தொடர்ந்து மோடியை பாராட்டி பேசிக்கொண்டு இருந்தாள்*… *மோடி அப்படி , மோடி இப்படி , மோடி அதை செய்தார், மோடி இதை செய்தார் என்று புகழ்ந்து கொண்டே வந்தாள்.* *சிறிது நேரம் அமைதியாக இதை எதிரில் அமர்ந்து  கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு பெண்மணி…* *மோடி மாதிரியே ஒரு கணவன் உனக்கு அமைய இறைவன் அருள் புரியட்டும்”  என்று வாழ்த்தினார்*…* *அவ்வளவு தான்….* *அந்த இளம் பெண் பயணம் முடியும் வரை வாயை திறக்கவே இல்லை…*
1 min read
# மோடி : தேசத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது.. இனி எல்லா மாநிலங்களிலும் இரட்டை எஞ்சின் ஆட்சிதான்.. புதிய இந்தியா பிறந்துவிட்டது..  உங்கள் வாழ்க்கை  இனி  பிரகாசமாக இருக்கும்… சப்கா சாத்.. சப்கா விகாஸ்! மக்கள் :  ஐயோ.. ஆளை  விடுங்களேன் ! .. என்று கதறிக் கொண்டே மக்கள் சிதறி ஓடுகின்றனர்.  ...
1 min read
*காவிக்கொடி கோவிலில்தான் ஏற்றப்பட வேண்டும்.*                  *அரசு அலுவலகத்தில் தேசியக் கொடியை இறக்கி காவிக் கொடியை ஏற்றினார்கள் என்றால்…*                      *நாடு இருண்ட காலத்தில் உள்ளது என்றுதான் அர்த்தம்.*                               *அவரவர்களுக்கு பிடித்த உடையை அவரவர்கள் அணிகிறார்கள்.*          *அதை மதத்தின் பெயரால் நசுக்குகிறார்கள் என்றால்…நாடு கற்காலத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறது என்றுதான் அர்த்தம்.*                                     *இந்த உண்மையை எல்லோரும் உணர வேண்டுகிறேன்.*        *நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தால் அச்சமாக உள்ளது.*        *-குருமகாசந்நிதானம் பாலபிரஜாபதி அடிகளார்-* 
1 min read
கொல்லும் ஏற்றத்தாழ்வு!  ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெறுவது வழக்கம். கடந்த 50 ஆண்டுகளாக அம்மாநாடு நடைபெற்றுவருகிறது. உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள், சிந்தனைவாதிகள், பொருளாதார நிபுணர்கள், தொழில் அதிபர்கள், தொழில்முனைவோர்கள் என சமூகத்தை கட்டமைக்கும் பல தரப்பினரும் கலந்துகொண்டு உலகின் போக்கு குறித்து அம்மாநாட்டில் உரையாடுவார்கள். இந்த மாநாட்டையொட்டி, இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் அறிக்கை வெளியாவது வழக்கம். அந்த அறிக்கை உலகின் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலையைச் சுட்டிக்காட்டி, பொருளாதார கொள்கை ரீதியாக உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய விசயங்களை உணர்த்தும். இந்த ஆண்டு, ‘கொல்லும் ஏற்றத்தாழ்வு’ (Inequality Kills) என்ற தலைப்பில் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை வெளியிட்டுள்ளது  இந்தியாவின் நிலைமை 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கரோனா முதல் அலை மிக வேகமாக பரவத் தொடங்கியது. கரோனாவைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால், தொழில்கள் முடங்கின; பலர் வேலை இழந்தனர்; பலர் கடும் வருவாய் இழப்பைச் சந்தித்தனர்.கோடிக்கணக்கான மக்கள் வறுமைச் சூழலுக்குள் தள்ளப்பட்டனர். முதல் அலையின் தீவிரம் குறைந்து, ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டதை அடுத்து நாட்டின் பொருளாதாரம் சற்று மீளத் தொடங்கியது. இந்நிலையில் 2021-ம் ஆண்டு கரோனா இரண்டாம் அலை வேகம் கொள்ளத் தொடங்கியது. மீண்டும் ஊரடங்கு. மீண்டும் வருவாய் இழப்பு. ஆனால், இந்தக் காலகட்டத்தில் இந்திய பில்லியனர்கள் சொத்துமதிப்பு இருமடங்கு அளவில் அதிகரித்துள்ளது என்று இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. மார்ச் 2020 – நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.23.14 லட்சம் கோடியிலிருந்து  ரூ.53.16 லட்சம் கோடியாக  உயர்ந்துள்ளது. அதேசமயம் 4.6 கோடி இந்திய மக்கள் மிக மோசமான வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2021-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 84 சதவீத குடும்பங்களின் வருமானம் கடுமையாக சரிந்துள்ளது. அதேவேளையில் இந்தியாவில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை 102-லிருந்து 142-ஆக உயர்ந்துள்ளது என்கிறது இவ்வறிக்கை. பில்லியனர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது. இதே இந்தியாவில் வேலையின்மை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. பில்லினர்களுக்கு தனி வரி இந்தியாவில் உள்ள 98 பில்லினிய குடும்பங்களுக்கு 4 சதவீத சொத்துவரி விதித்தால் இரண்டு வருடங்கள் சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் செலவினங்களை கவனித்துக் கொள்ளலாம் அல்லது பதினேழு வருடங்களுக்கு நாட்டின் மதிய உணவு திட்டத்திற்கு அல்லது ஆறு ஆண்டுகளுக்கு சமக்ரா சிக்ஷா அபியான் போன்ற திட்டங்களுக்கு செலவிடலாம். இதேபோல அந்த குடும்பங்களுக்கு ஒரு சதவீத சொத்து வரி விதித்தால் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கோ அல்லது இந்திய அரசின் பள்ளிக் கல்வி எழுத்தறிவுத் துறைக்கு ஓர் ஆண்டு நிதி அளிக்க முடியும் என்ற தகவல்களை இவ்வறிக்கை தருகிறது. மேலும் இந்த மெகா பணக்கார குடும்பங்களுக்கு வெறும் ஒரு சதவீத சொத்துவரி விரித்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த தடுப்பூசி திட்டத்துக்கு நிதி உதவி அளிக்க முடியும் என்கிறது இந்த அறிக்கை....
1 min read
சமூகநீதியை இலக்காகக் கொண்ட தொழில்நுட்பப் புரட்சிகள் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன? குறிப்பாக, பரந்துபட்ட அளவில் சமூகப் பயன் தரும் தொழில்நுட்பச் சாதனைகள் என்ன என்று இந்த நூலில் டில்லிபாபு அற்புதமாக விவரிக்கிறார். வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி, தொலைத்தொடர்புப் புரட்சி, பொதுப் போக்குவரத்துப் புரட்சி, பாதுகாப்புத் துறைப் புரட்சி போன்ற முக்கியத் தொழில்நுட்ப புரட்சிகளின் உதவியோடுதான் எல்லா அவலங்களையும் ஓரளவேனும் ஒழிக்க முடிந்துள்ளது என இந்த நூலில் விவரிக்கிறார். வெறும் அறிவியல் தொழில்நுட்பத்தை மட்டுமே கொண்டு முன்னேற்றம் அடைந்துவிட்டோம் என்று தட்டையாகக் கூறாமல் வளர்ச்சித் திட்டங்களின் பின்புலமாக விளங்கிய சமூகநீதி சார்ந்த அரசியல் உறுதி குறித்தும் ‘அரசியல்-அறிவியல் புரட்சிகள்’ எனும் முதல் இயலில் விவரிக்கிறார். இந்தப் புரட்சிகளில் இந்திய அறிவியலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் பங்களிப்பு குறித்தும் விவரித்துத் தற்சார்புக் கொள்கை எப்படி நம்மை இதுவரை வழிநடத்தியது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். வாசிக்கத் தூண்டும் நடை இந்த நூலின் தனிச்சிறப்பு. பொதுவாக, அறிவியல் நூல்கள் என்றாலே பாடப் புத்தகம்போல இருக்கும் என்ற கருத்தை உடைத்து, சிறுகதைகளைப் படிப்பதுபோன்ற உணர்வை இந்த நூல் தருகிறது. ‘வந்தேண்டா பால்காரன்…’, ‘உணவதிகாரம்’ போன்ற தலைப்புகள் ஈர்க்கின்றன. ‘பிறந்து வளரும்போது திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்திய நான்… இரண்டு அரசுப் பள்ளிகளில் உயிரிக் கழிப்பறைகளை அமைத்திருக்கிறேன் என்பதில் மனநிறைவடைகிறேன்’ என்று கூறும் அறிவியலர் டில்லிபாபுவின் சமூகப் பார்வைதான் இந்த நூலின் அடிநாதம். நாம் கடந்து வந்த பாதையைக் காட்டுவதோடு, நமது எதிர்காலக் கவனம் சமூகப் பயன் நோக்கி இருக்க வேண்டும் என்பதையும் இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. -பிப்ரவரி 12, 2022 தமிழ் இந்துவில் வி.டில்லிபாபு எழுதிய சுதந்திர இந்தியாவின் பாரியியல்...
உடையும் – தடையும்  கர்நாடகாவில் தற்போது திட்டமிட்டு மதவெறி தீ பற்ற வைக்கப்பட்டு, அது பற்றி எரியத் துவங்கியிருக்கிறது. இதனை உரிய முறையில், உரிய நேரத்தில் அணைக்காவிட்டால் காட்டுத் தீயாய் பரவி தேசத்தையே நாசமாக்கிவிடும். கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு செல்வது திடீரென பிரச்சனையாக மாறுவதன் பின்னணியை புரிந்து கொண்டால்தான்; இதன் பின்னாலிருக்கும் மதவெறி அரசியலையும் புரிந்து கொள்ள முடியும்.  தற்போது பிரச்சனை வெடித்திருக்கும் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் 2013 லிருந்து பாஜக தனது ” மத வெறி கலவர அரசியல் ” மூலமே காலூன்றியி ருக்கிறது. பாஜக ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருந்தாலும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளைக் கூட தீர்க்க முடியவில்லை. அனைத்திலும் தோல்வியைத்தான் தழுவிநிற்கிறது. இதனால் பாஜக மீது மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.  சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் 42.06 விழுக் காடு வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. ஆளுங்கட்சியான பாஜக 36.90 சத விகித விழுக்காடு வாக்குகளைப் பெற்று பின்னடைவைச் சந்தித்தது. இந்நிலையிலேயே அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற விருக்கிறது.  தற்போதிருக்கும் சூழலில் பாஜக படு தோல்வியை தழுவும் என்பதே கள எதார்த்தம். இதனை மாற்றி மக்களைத் திசை திருப்பி வழக்கம்போல் தனது மதவெறி கலவர அரசியல் மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே தற்போதைய ஹிஜாப் விவகாரம். இந்திய அரசியலமைப்பு சட்டம் சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்து கொள்ளவும், கிறித்தவர்கள் சிலுவை அணியவும், இந்துக்கள் பல வகையான திலகங்கள், திருநீறு பூசிக் கொள்ளவும் அனுமதிக்கிறது.  அதன் நீட்சியாகவே ஹிஜாப் அணியும் முறையும் இருக்கிறது. கர்நாடக அரசின் சீருடை குறித்த உத்தரவு எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பதாகவே இருக்கிறது. காரணம் உத்தரவில் சமத்துவத்தை, பொது அமைதியைக் குலைக்கும் உடைகள் வேண்டாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது.  இத்தனை காலமும் சமத்துவத்தையும், பொது அமைதியையும் ஏற்படுத்திய அதே உடை இப்போது மட்டும் எப்படி அதற்கு நேர் எதிராக மாறியது.? அப்படி மாற்றியவர்கள் யார்.? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்.? மேலும் கல்லூரி வளர்ச்சிக் குழுக்கள் நிர்ணயிக்கும் சீருடையை ஏற்க வேண்டும் என்கிறது அந்த உத்தரவு. கல்லூரி வளர்ச்சிக் குழுவில் பெரும்பாலும் பாஜக எம்.எல்.ஏ – க்களே தலைவராக இருக்கின்றனர்.  அப்படியிருக்கையில் எப்படி ஓநாய் ஆட்டை பாதுகாக்கும் என்பதை நம்ப முடியும்.?  ஹிஜாப் பெயரைச்சொல்லி இஸ்லாமிய மாணவிகளிடமிருந்து கல்வியைப் பறிப்பதுதான் பாஜகவின் நோக்கம். இது ஹிஜாப் மீதான வெறுப்பல்ல , இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பே ஆகும். இதனை ஒரு போதும் மக்கள் அனுமதிக்கக் கூடாது . இந்தியாவின் மதநல்லிணக்கத்தை  பாது காக்க பாஜகவைத் தனிமைப்படுத்திட வேண்டும்.. நன்றி.. தீக்கதிர்  10.02.2022
1 min read
விவசாயிகள் பற்றி மோடி ஏன், உ.பி. பிரச்சாரத்தில் பேசுவதில்லை? லக்னோ, பிப்.7- “உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை ஒரு வார்த்தை கூட, விவசாயிகளைப் பற்றி பேசாதது ஏன்?” என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கேள்வி எழுப்பியுள்ளார். சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அனைவரும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள், முகம்மது அலி ஜின்னாவின் வாரிசுகள் என்று பிரதமர் மோடி துவங்கி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கு பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ஜின்னாவா, கொண்டுவந்தார்? குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காததற்கு ஜின்னாவா காரணம்? என்று கேள்விகளை எழுப்பினார். எனினும், பாஜக மத ரீதியான பிரச்சாரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேற்கு உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரில், கடந்த 2013-ஆம் ஆண்டு சங்-பரிவாரங்கள் பெரும் வன்முறையைத் தூண்டிவிட்டனர். இதில், 42 முஸ்லிம்கள், 20 இந்துக்கள் பலியாகினர். இந்த கலவரத்தை வைத்து, 2014 மக்களவைத் தேர்தல், 2017 சட்டமன்றத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தலில் வென்ற பாஜக, தற்போது 2022 சட்டமன்றத் தேர்தலிலும் முசாபர் நகரை நினைவூட்டி மீண்டும் மத அடிப்படையில் வாக்குகளைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், ‘’முசாபர் நகர் இந்து முஸ்லிம் மேட்ச் நடக்கும் இடம் கிடையாது’’ என்று திகாயத், மீண்டும் பாஜகவை காட்டமாக விமர்சித்துள்ளார்.   ‘’மேற்கு உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சி குறித்து பேச வேண்டும். ஆனால் பாஜக இந்து, முஸ்லிம், ஜின்னா என்று மதம் குறித்து பேசி வருகிறது. வேளாண் மசோதாக்களைக் கொண்டுவந்து விவசாயிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய பாஜக, பின்னர் அதைத் திரும்பப் பெற்றது. எனவே, இந்தத் தேர்தலில் பாஜக‌ விவசாயிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதைப் பார்க்கத்தான் போகிறோம். ஆனால், பிரதமர் மோடி விவசாயிகள் குறித்து வாய் திறப்பதே
1 min read
காங்கிரஸ் கட்சியின் ஆணவம் குறையவில்லை .. பிரதமர் கடும் விமர்சனம் மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 7 அன்று பதில் அளித்தார்.     கொரோனா தொற்றுக்குப் பிறகு உலக நாடுகளின் அளவுகள் மாறி வருகின்றன. நாங்கள் ஒரு தலைவராக அங்கீகரிக்கப்படுகிறோம். உலகத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கத் தயாராகி வருகிறது. ஏழைகளின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக சென்று சேர்கிறது. மத்திய அரசின் திட்டங்களால் ஏழைகள் லட்சாதிபதிகளாகி  உள்ளனர். அரசுத் திட்டங்கள் மூலம் ஏழைகள் வீடுகளைக் கட்டி   லட்சாதிபதிகள் ஆக மாறி வருகின்றனர்.     ஏழைத் தாய்கள் சமையல் எரிவாயு திட்டம் மூலம் பயன் அடையும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சியினரில் சிலர் இன்னும் 2014 ஆம் ஆண்டு இருந்த மன நிலையிலேயே உள்ளனர். அவர்கள் யதார்த்தத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளனர் என்று நினைக்கிறேன்.  ...
1 min read
சிலை வைப்பதும் சித்தாந்தத்தின் மீது தாக்குதலும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் வேளாண் சட்டங்களை ரத்து செய்தது ஏன்?புதுதில்லி, பிப்.5- வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்தாததற்கான காரணங்கள் என்ன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா கேள்வி எழுப்பினார்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125 ஆவது ஆண்டு தினத்தையொட்டி ‘இந்தியா கேட்’ முன்பு அவருக்கு சிலை வைத்திட இருக்கிறீர்கள். நான் வரவேற்கிறேன். ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திர போசின் சித்தாந்தத்தை நீங்கள் வரவேற்கவில்லை.   நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சிறுபான்மையினர் மதிக்கப்பட வேண்டும் என்று மட்டும் கூறவில்லை, அவர்களுக்கு சம பங்கு அளித்திட வேண்டும் என்றும் கூறினார். அதனை அவர் நடைமுறைப்படுத்தினார். நீங்கள் நடைமுறைப்படுத்துகிறீர்களா? வெறுமனே சிலையை நிறுவுவதன் மூலம்  மட்டும், அவர் உயர்த்திப்பிடித்த சித்தாந்தங்களை நீங்கள் மறு தலித்திட முடியாது. அவருக்கு உண்மையிலேயே நீங்கள் மதிப்பு அளித்திட விரும்பினால் அவர் நடைமுறைப் படுத்திய சித்தாந்தங்களையும் பின்பற்றுங்கள்.   ஓர் உதாரணத்தை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர் கொல்கத்தா மாநகராட்சியின் தலைமை அதிகாரியாக இருந்தபோது, வேலை வாய்ப்பில் முஸ்லீம்கள் எவரும் இல்லாததைக் கண்டார். வேலைவாய்ப்பில் 50 சதவீதத்தினர் முஸ்லீம்களாக இருந்திட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி னார். ஏனெனில் அவர்களும் இந்நாட்டின் ஓர் அங்கமாகும். அவர் எந்தக்காலத்திலும் சிறுபான்மையினரை, அவர்கள் முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, அல்லது கிறித்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது ஜைனர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தேசத்திற்கு விரோதமானவர்கள் என்று  கருதிடவில்லை.  அவர்கள் அனைவருமே இந்தியர்கள்தான். அதுதான் நேதாஜி போதனை செய்த சித்தாந்தம். துரதிர்ஷ்டவசமாக அந்த சித்தாந்தத்தின்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இது இந்தக் குடியரசுத்தலைவர் உரையில் பிரதிபலித்திடவில்லை. 
1 min read
*“சாதிகள் இல்லையடி பாப்பா”**நாள்: 08-02-2022, (செவ்வாய்க்கிழமை) மாலை 6.00 மணி*கருத்துரையாளர்*கா. சாமுவேல்ராஜ்,*(பொதுச் செயலாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி)ZOOM...
1 min read
நமது நிருபர் பல்வேறு அரசியல் பிரபலங்களைச் சந்திக்கிறார்… நிருபர்:  “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” ஒன்று தொடங்கப் போவதாகவும் அதில் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தும் 37 தலைவர்களுக்கு நீங்க கடிதம் எழுதியிருக்கிறதாப் படிச்சேன். பாராட்டுகள். முதல்வர் ஸ்டாலின்:  நன்றிநிருபர்:  மத்தவங்களுக்கு அழைப்பு விடுத்தது சரி.. ஓபிஎஸ் அண்ணனுக்கும் அழைப்பு விடுத்து அவரை மாட்டிவிடப் பாக்கறீங்களே..?ஸ்டாலின்: அப்படியெல்லாம் இல்லியே.. அவரும் கூட்டமைப்பில சேரணும்னுதான் நினைக்கிறேன்.நிருபர்:  உங்க கூட்டத்துக்கு வந்தா  ரெய்டு விடப்போறேன்னு  அமித் ஷா  மிரட்டுவாரு.. சேரலைன்னா அண்ணா திமுக சமூக நீதிக்கு எதிரானதுன்னு எல்லாரும் சொல்வீங்க.. அவர் எந்தப் பக்கம் போவார் பாவம்.. உங்க கூட்டத்துக்கு வந்திட்டு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வெளிநடப்பு செய்ய வேண்டிய நெருக்கடியில அவரைத் தள்ளிவிடறீங்களா இல்லியா? ஸ்டாலின்:  நீங்களே நெருக்கடியில இருந்து தப்பிக்கிற வழியையும் அவருக்கு சொல்லிக் குடுத்துடுவீங்க போலருக்கே… (சிரிக்கிறார்)    அடுத்து நிருபர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைச் சந்திக்கிறார்நிருபர்: தஞ்சாவூர் மாணவி லாவண்யா…அண்ணாமலை (இடைமறித்து) : தமிழகத்தில மதமாற்றம் நடந்தா கையைக் கட்டிக்கிட்டு சும்மா உட்கார்ந்திருப்பமா..? அதை ஊதிப் பெரிதாக்கி அகில பாரதப் பிரச்சனையாக்கலைன்னா நான் தலைவரா இருந்து என்ன பிரயோசனம்? தில்லியிலிருந்து தகவல் அறியும் குழுவை வரவழைப்போம். இங்கே மதசகிப்பின்மை பலூன் வெடிக்கணும்.. நாங்க இன்னும் சில மாவட்டங்கள்ல பரவணும்.. இதை செஞ்சு முடிச்சாத்தான் நான் என் தலைவர் போஸ்டைக் காப்பாத்திக்க முடியும். நாங்க 17 மாநிலங்கள்ல ஆட்சியில இருக்கோம்.. அடுத்து வர்ர ஐந்து மாநிலத் தேர்தல்கள்ல..நிருபர்:  எனக்கு பல கேள்விகள் இருக்கு. ஆனா நீங்க நான் சொல்றதைக் கேக்கவே தயாரா இல்லே. அப்ப நான் வரேன்.. (கிளம்புகிறார்) அடுத்து எச்.ராஜா…நிருபரைப் பார்த்ததும் ராஜா :  பெகாசஸ் பத்தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில வந்திருக்கறதைக் கேக்கப் போறீங்க.. நாட்டை ஆள்பவர்கள் நாங்க.. அடுத்தவங்க பேசறதை ஒட்டுக் கேக்கற உரிமையை எங்களுக்கு அரசியல் சட்டம் குடுத்திருக்கு.. நியூயார்க் டைம்ஸ்க்கு வேற வேலை இல்லை.. உங்களுக்கும் வேற வேலை இல்லை. யு ஆர் ஆல் ஆன்ட்டி இன்டியன்ஸ்.. நான் உங்க கூடல்லாம் பேசத் தயாரா இல்லே.. நீங்க போகலாம்… அடுத்து நிதியமைச்சர் நிர்மலா...
புதிய ஆசிரியன் நடத்திய 13-வது இணையவழிக் கருத்தரங்கில் நமக்கு நன்கு அறிமுகமான மனநல மருத்துவர் டாக்டர் ராமானுஜம் கொரோனா சூழலில்...
1 min read
இது ஒரு இளைஞர் விரோத பட்ஜெட். # 20 கோடி வேலைகளைக் காணவில்லை. நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் இல்லை. # கிராமப்புற உழைப்பாளிகளின் உயிர்நாடியான  MGNREGA திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு சென்ற ஆண்டு ரூ. 73,000 கோடி என்பது அதிகரிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட மேலும் ரூ. 50,000 கோடிக்கான பணிகளுக்கு உழைப்பாளிகள் பதிவு செய்திருந்தனர். அது நிறைவேற்றப்படவில்லை. # இளம் தலைமுறையினருக்கான எந்த உருப்படியான திட்டமும் இல்லை. இந்த பட்ஜெட் இளம் தலைமுறையினரின் வாழ்வாதாரம் மீது கடும் தாக்குதல்! இது ஒரு விவசாயி விரோத பட்ஜெட். # விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு என வாயால் வடை சுடுகிறது இந்த பட்ஜெட். # இந்த ஆண்டு 2.37 லட்சம் கோடி விவசாயிகளின் நேரடி கணக்கில் நெல் மற்றும் கோதுமைக்காக குறைந்தபட்ச ஆதாரவிலை போடப்பட்டது என கூறுகிறார் நிதி அமைச்சர். ஆனால் சென்ற ஆண்டு அளிக்கப்பட்ட 2.478 லட்சம் கோடியைவிட இது குறைவு. குறைந்தபட்ச ஆதார விலை என்பதை சட்டபூர்வமாக்க மறுக்கும் இந்த பட்ஜெட் ஒரு விவசாயி விரோத பட்ஜெட். இது ஒரு மக்கள் விரோத பட்ஜெட். கடந்த இரு வருடங்களாக பெருந்தொற்று காரணமாக மக்கள் சொல்ல முடியாத துன்பத்தில் உள்ளனர். ஆனால் இந்த பட்ஜெட் # உணவு மானியத்தை ரூ 2,86,469 கோடியிலிருந்து  2,06,831 லட்சம் கோடியாக குறைக்கிறது. # உர மானியத்தை 1,40,122 கோடியிலிருந்து 1,05,222 கோடியாக குறைக்கிறது # பெட்ரோல் மானியத்தை 6,517 கோடியிலிருந்து 5813 கோடியாக குறைக்கிறது. மக்கள் வாழ்வாதாரத்தின் மீது கொடூரமான தாக்குதல். இந்த பட்ஜெட் யாருக்கானது? # முதல் பணக்கார 10% பேர் தேசத்தின் செல்வத்தில் 64.6% அபகரித்துள்ளனர்....
1 min read
கடந்த சில நாட்களில் வந்த இரண்டு செய்திகள் பெரிதும் கவனம் பெறாமல் போயின , ஒன்று திவாலாகி (bankrupt) ஆகி விட்ட வீடியோகான் நிறுவனத்தை விற்பது  குறித்தது. மற்றொன்று மத்திய பொதுத்துறை நிறுவனமான CEL ( Central Electronics Limited ) ஐ தனியார் மயமாக்குவது குறித்தது .  வீடியோக்கான் நிறுவனம் சரியாக நடத்த முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வந்திருக்கிறது .தற்சமயம் பல்வேறு வங்கிகளிடம் 65,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி வைத்திருக்கிறது . கடனை கட்ட முடியாமல் வீடியோகான் திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது . அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்த நிறுவனத்தை விற்று அதில் வரும் பணத்தை கடன் வழங்கிய வங்கிகளுக்கு பிரித்து அளிக்க வேண்டும் .  வீடியோகான் நிறுவனத்தை  தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT ) Twin Star technologies எனும் நிறுவனத்துக்கு விற்பதாக முடிவு செய்கிறது  65  ஆயிரம் கோடி கடன் வாங்கிய ஒரு நிறுவனத்தை வெறும் 3 ஆயிரம் கோடிக்கு விற்கலாம் என்று NCLT முடிவு செய்கிறது .  வங்கிகள் இழக்கும் ஒவ்வொரு ரூபாயும் எப்படியோ சுற்றி வளைத்து பொது மக்கள் தலையில்தான் விடியும், வரிகளாக....
1 min read
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒன்றாக ஞெகிழி ஒழிப்பைக் கையில் எடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஞெகிழிப் பைக்கு மாற்றாகத் துணிப்பையைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தும் வகையில் ‘மஞ்சப் பை இயக்கம்’ திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த முன்னோடி திட்டம் தொடங்கப்படுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ‘மஞ்சள் பை’ இயக்கத்தைத் தொடங்கியவர் மதுரையைச் சேர்ந்த கௌரி. இவரும் இவருடைய கணவர் கிருஷ்ணனும் சேர்ந்து இதைச் செயல்படுத்திவருகிறார்கள். இயற்கைக்குத் திரும்புவோம்! கௌரி, கிருஷ்ணன் இருவரும் சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவர்கள். 2014இல் இவர்களுடைய மகளுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சில நேரம் மூச்சிரைப்பு அதிகமானது. அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது ஞெகிழியை எரிப்பதால் உருவாகும் நச்சு காற்றில் கலப்பது தெரியவந்தது. காற்று மாசு குழந்தைகளை மட்டுமல்லாமல், பெரியோரையும் பாலூட்டும் தாய்மார்களையும் அதிகமாகப் பாதிப்பதாகத் தெரிந்துகொண்டார்கள். அதன் பின் ஞெகிழியின் சீர்கேடுகள் குறித்த தேடலில் இறங்கினார்கள். அதிக ஞெகிழி பயன்பாட்டால் காற்று மட்டுமல்ல, மண்ணும் மலடாகிறது; அவை மக்குவதும் இல்லை என்பது புரிய, முதல்கட்டமாக ஞெகிழிப் பை பயன்பாட்டைக் குறைப்பது என முடிவெடுத்தனர். அவற்றுக்கு மாற்றாகத் துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்க நினைத்தவர்கள், சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ‘ஐந்திணை விழா’வில் ஞெகிழி பயன்பாட்டின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள். பிறகு முதல்கட்டமாக 200 துணிப்பைகளைத் தைத்து வாங்கி விற்பனை செய்தனர். “இதற்காகவே என் வேலையை விட்டுவிட்டேன். 2014 இறுதியில் இந்தத் துணிப்பை திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினோம். மதுரையில் துணிப்பை உற்பத்தியாளர்கள் அதிகம் என்பதால் சென்னையிலிருந்து மதுரைக்குக் குடியேறினோம். துணிப்பைகள் நீடித்து உழைக்கும், அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம், எல்லாவற்றுக்கும் மேலாக மக்கும் தன்மை கொண்டவை என்பதைத்தான் மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்” என்று சொல்லும் கௌரி, ‘யெல்லோ பேக்’ (theyellowbag.org) அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர்.  “நாங்கள் எடுத்து வைத்திருப்பது மிகச் சிறிய அடிதான். மாற்றவும் சீர்படுத்தவும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. சானிட்டரி நாப்கின்களுக்குப் பதிலாக துணியிலான நாப்கின்களைப் பயன்படுத்தலாம். மக்காத குப்பைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். கூடுமானவரைக்கும் இயற்கைக்கு உகந்த பொருட்களையே பயன்படுத்தலாம். இவற்றில் பெண்களின் பங்களிப்பு அவசியம். வீட்டைத் தாண்டி வெளியே வந்தால்தான் பார்வையும் சிந்தனையும் விசாலமடையும். அது காலத்தின் கட்டாயம்” என்கிறார் கௌரி. (2022 ஜனவரி 2 தமிழ் இந்து “பெண் இன்று” இணைப்பில் பிரதிமா எழுதிய கட்டுரையிலிருந்து)