மதுக்கூர் இராமலிங்கம்உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.இது நாடாளுமன்ற...
அரசியல்
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சன்னி வர்மாவுக்கு கடந்த மாதம் அளித்த பேட்டி இன்றும் பொருத்தமாகவே உள்ளது.கடந்த...
மதுக்கூர் இராமலிங்கம்உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் பல்வேறு...
பிரதமர் மோடி மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்று பேசுகிறார். சர்க்கரை என பேப்பரில் எழுதி வைத்திருந்தால் போதாது....
*1) துறைச் சங்க மாநில நிர்வாகி என்பதாலா?* *2) பொதுச் சங்க மாவட்ட நிர்வாகி எனபதாலா?* *இதைத் தாண்டி இந்த தேசத்தின் குடிமகன் என்ற அடிப்படையில் நடப்புகள் என்னை இப்போராட்டத்தில் பங்கேற்க தள்ளியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.* *நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நான் எனது நிர்ணயிக்கப்பட்ட வருமானத்திற்குள் திட்டமிட்டு வாழ வேண்டிய நிலையில் வாழ்கிறேன்.* *எனக்கு நிர்ணயிக்கப்பட்ட காலமுறை ஊதியத்தில் ஊதியம் பெறுகிறேன்,பழைய பென்சன் திட்டத்தின்படி ஓய்வுக்கு பிறகும் ஓய்வூதியம் பெறுவேன் என நம்பிக்கொண்டிருக்கிறேன்.* *ஆனால் என்னால் பொருளாதாரச் சுமையை ஈடுகொடுப்பதற்கு கடும் போராட்டத்தைச் செய்ய வேண்டியுள்ளது.* *இந்நிலையில் காலிப்பணியிடங்களை நிரந்தர ஏற்பாட்டில் பூர்த்தி செய்ய முன் வராத நிலையில் இலட்சகணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்களே அதில் ஒருவராக எனது எதிர்கால சந்ததியர் இனைய மாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதம் ஏதேனும் உண்டா.* *அத்துக் கூலியில் அஞ்சுக்கும் பத்துக்கும் தாம் படித்த படிப்பிற்கு தொடர்பில்லாத பணிகளை 24 மணி நேரமும் செய்ய முன்வரும் இளைஞர்கள் பட்டாளத்தை பார்க்கும்போது மனசு வலிக்கிறது.பதைபதைக்கிறது.* *மாதம் ஒருமுறை ஏற்றப்படும் எரிவாயு விலையும் தினந்தோறும் ஏறும் பெட்ரோல் டீசல் விலையும் விலைவாசியை சாமானியனிடமிருந்து எட்டாத தூரத்திற்கு இட்டுச் சென்ற பிறகு அன்றாடம் பல இலட்சக்கணக்கான மக்களின் உணவும் உறைவிடமும் கேள்விக்குறியாகும் நிலையில் நான் மட்டும் கிடைத்தவரை உண்டு கொழுத்து காலம் தள்ளிவிடலாம் என நினைக்க மனம் குற்ற உணர்ச்சியில் குன்றுகிறது.* *விவசாயமும் விவசாயியையும் முழுமையாக அழித்தொழித்த பின்பு காகிதங்களையா திங்க முடியும்.*-? *எனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஊதிய மாற்ற மற்றும் அகவிலைபடி நிலுவையையே அரசு என்னிடமிருந்து பறித்துவிட்டது. பிசாத்து இரண்டு நாள் ஊதியம் எம்மாத்திரம்…ஏதோ வியாதி வெக்கைக்கு செலவிட்டதாக நினைத்துக் கொள்வேன்.* *என் தேசம் காக்கும்,கருத்தாலும்,கரத்தாலும் உழைக்கும் இலட்சக்கணக்கானதொழிலாளர் கோரிக்கையைப் போற்றும் போராட்டத்தில் பெருமையுடன் பங்கு கொள்வேன். என்னோடு இணைபவர்களுக்கு வந்தனம்,வாழ்த்துக்கள்.* *ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால் நீயும் என் தோழனே என்ற சே வின் வார்த்தைகளோடு அழைக்கிறேன்.* *ஒன்றுபடுவோம்,வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுவோம்,தேசத்தையும் மக்களையும் காப்போம்.* ...
1990- களின் தொடக்கத்தில் பாஜக ஆதரவுடன் வி.பி. சிங் பிரதமர் ஆக இருந்தபோது பயங்கரவாதிகளின் மிரட்டலால் காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியே விரட்டப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்தவர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பட்ட துன்பங்களை நினைவுபடுத்தி முஸ்லிம்கள் மேல் வெறுப்பை விசிறி விட எடுக்கப்பட்ட படம்தான் “காஷ்மீர் ஃபைல்ஸ்”. பாஜக ஆளும் மாநிலங்களில் திரையிடப்பட்டு இந்துத்வா அரசியல் பரப்பப்படுகிறது. காங்கிரஸ் அரசுகள் காஷ்மீர் பண்டிதர்களைக் காப்பாற்ற ஒன்றும் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம். வாஜ்பாய் அரசோ மோடி அரசோ அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்தி இருக்கலாமே.. ஏன் செய்யவில்லை?
உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் *மதுரை* தான் என்று ஆய்வாளர்கள் பிரமிக்கிறார்கள். நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை “The World’s only living civilization” என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் “The Story of India” ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்....
துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்த இல்க்கர் ஆயசி, டாட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் அவர்மீது மதரீதியான பாசிசத் தாக்குதலால் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். மறுப்பை வெளியிட்டுள்ள ஆயசி, “நான் ஒரு தொழில்முறையாளன். என்னால் இந்த மோசமான சூழலில் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது மரியாதைக்குரிய செயலாகாது என்பதால் இதை ஏற்கவில்லை” என்றார். இந்த நாட்டை யாராவது காப்பாற்ற முடியுமா? ஆ.வி. வலைபாயுதே பகுதியில் இருந்து..
மதுக்கூர் இராமலிங்கம்தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக...
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சன்னி வர்மாவுக்கு அளித்த நேர்காணலில் கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தொடர்ச்சியாக மாநில அரசுகளில் செலவழிக்கும் சக்தியின் மீது தனது கட்டுப்பாட்டை அதிகரித்துவருகிற போக்கு பெரிய அளவிற்கு திறன் குறைபாட்டை உருவாக்குகிறது எனத் தெரிவித்தார். ஒன்றிய மாநில நிதி உறவுகள் குறித்து:- ஒன்றிய மாநில நிதி உறவுகளின் வரலாற்றை முதலில் கூறுகிறேன், டெல்லியிலிருந்து ஆள்பவர்களின் கூட்டாட்சிக்கு எதிரான, மாநிலங்களுக்கு எதிரான, சர்வாதிகார அணுகுமுறையே இப்பிரச்சனையின் தொடக்கம். அரசியலைப் பொறுத்தவரை ஒருவரின் நிலைப்பாடு என்பது அவர் எந்தப் பக்கம் அமர்ந்திருக்கிறார் என்பதை பொறுத்தது என்று ஒரு பழமொழி உண்டு. இதன் அடிப்படையில் பார்ப்போமேயானால் ஒரு பிரச்சினையில் உங்களது நிலைப்பாடு நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறீர்களா, சட்டமன்றத்தில் அமர்ந்து இருக்கிறீர்களா அல்லது வீதியில் நின்றுகொண்டு பேசுகிறீர்களா என்பதை பொறுத்தது. அந்த பழமொழிக்கு மிக சிறந்த உதாரணமாக விளங்குபவர் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். ஏனெனில் அவர் முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமைகளுக்கான வலிமையான குரலாக விளங்கினார், சில சமயங்களில் அந்த விஷயத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மிஞ்சும் அளவிற்கு அவரது செயல்பாடு இருந்தது. ஆனால் அவர் பிரதமரானதும் அவரது செயல்பாடுகள் தலைகீழாக மாறியது. நிதி, நிர்வாகம், மாநில அரசுகளுக்கு அநீதி இழைக்கப்படும் ஒன்றிய அரசின் திட்டங்கள் என அனைத்து வகையிலும் மாநிலங்களின் உரிமைகளை முற்றிலும் பறிக்கும் அளவிற்கு இதவிட பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை. இதுவரையிலான இந்திய வரலாற்றில் இதுவே மிக மோசமான சர்வாதிகாரத் தன்மை மிக்க அதிகார பறிப்பு நடவடிக்கைகள் எனக் கூறலாம். பதிமூன்று ஆண்டுகள் குஜராத் முதல்வராக அவர் பதவிவகித்தபோது பேசியவற்றுக்கு மிக நேரடியாகவே தற்போது முற்றிலும் முரண்பட்டு செயல்படுகிறார். அடிப்படையான களசூழல் இதுதான் அவர்கள் மெல்ல மெல்ல நயவஞ்சகமான முறையில் மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் ஊடுருவினர். அவர்கள் தொடங்கிய இடம் ஒன்றிய அரசால் நிதி அளிக்கப்படும் திட்டங்கள். நேரடி மானியம் வழங்குதல் மற்றும் ஒன்றிய அரசு திட்டங்களுக்கு ரூபாய் 4-6 கோடி அளவிற்கு நிதியளித்தலை தாறுமாறாக அதிகரித்தனர். இதனை அவர்களுக்கு சாதகமாக விளம்பரப்படுத்திக் கொள்ளவும் தவறவில்லை. ஆனால் அவர்களிடம் விளம்பரம் செய்வதில் புத்திசாலித்தனம் இருக்கும் அதே சமயம் தார்மீக அறம் மிகவும் குறைவாகவே உள்ளது. உதாரணமாக முதலில் அவர்கள் ஒரு திட்டத்தை அறிவித்து அதற்கு ஒன்றிய அரசு 70 சதவீதம் நிதி அளிக்கும் மாநிலங்கள் 30% நிதி பங்களிக்க வேண்டும் என்பார்கள் அத்திட்டத்திற்கு பிரதமரின் படத்தைப் போட்டு விளம்பரம் செய்வார்கள். அடுத்த ஆண்டு ஒன்றிய அரசு 50% நிதியும் மாநில அரசு 50 சதவீத நிதியை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பார்கள், மூன்றாவது ஆண்டு அவர்கள் 20 சதவீதம் மட்டுமே நிதி அளிப்பார்கள் மாநிலம் 80 சதவீதம் அத்திட்டத்திற்கு செலவு செய்யவேண்டும் என்பார்கள். இறுதியாக நான்காவது ஆண்டு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்காது ஆனால் மாநிலங்கள் தாமாகவே திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்கிற நிலைக்கு கொண்டு வருவார்கள். திட்டம் பிரதமரின் பெயரில் இருக்கும். இது அடுத்தவரின் செலவில் தன்னை விளம்பரம் செய்து கொள்ளும் விளையாட்டு. அடுத்ததாக, பாலங்கள், துறைமுகங்கள், சாலைகள், மாநில எல்லைகள், கல்வி, சுகாதாரம், தேர்வுகள் மற்றும் கூட்டுறவு துறை ஆகியவற்றை நிர்வகிப்பது உண்மையில் 100% மாநில அரசுக்குரியது. இவற்றில் சில அரசியல் அமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. எனவே ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் மேற்கொள்ளாமல், எந்த குழுவும் அமைக்காமல் இத்துறைகளில் சட்டம் இயற்றுகிறது. இதன்மூலம் அது தங்களுக்கு தொடர்பே இல்லாத மாநில அரசுக்கு உரிமையுள்ள துறைகளை கட்டுப்படுத்துகிறது. இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் ஜனநாயகத்தின் தவிர்க்கமுடியாத கொள்கை, ஒரு நிர்வாக அமைப்பு மக்களுக்கு எவ்வளவு நெருக்கமானதாக இருக்கிறதோ அவ்வளவு பொறுப்புள்ளதாக இருக்கும் என்பதாகும். எனவே முடிவெடுக்கும் அதிகாரம் மக்களுக்கு மிக அருகாமையில் இருக்கும்போது நிர்வாகம் பொறுப்பு உள்ளதாகவும் நல்ல விளைவுகளை உருவாக்கக் கூடிய வாய்ப்பும் அதிகரிக்கும் என்பது அடிப்படை கோட்பாடு. ஒன்றிய அரசு தொடர்ந்து மாநிலங்களிடம் இருந்தும் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தும் அதிகாரங்களை தங்கள் வசம் எடுத்துக் கொள்ளும் போது இயல்பாகவே பல வழிகளில் சிக்கல்களை உருவாக்குகிறது. மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பங்களிப்பு இன்றி எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்த முடியாது. ஒன்றிய அரசிடம் போதுமான பணியாளர்கள் இல்லை, போதுமான தரவுகள் இல்லை, அவர்களுக்கு போதுமான அனுபவம் இல்லை. அனைத்து தணிக்கை அறிக்கைகளையும் பாருங்கள், ஸ்வச் பாரத் கிரிஷி கல்யாண் என ஒன்றிய அரசின் திட்டங்களில் பணம் வீணாகிறது. இத் திட்டத்திற்கான நிதியைக் கொண்டு கழிப்பறைகள் கட்டப்படுகிறது ,ஆனால் அங்கு தண்ணீர் வசதி இல்லை. ஏனெனில், டெல்லியிலிருந்து கொண்டு நீங்கள் கழிப்பறைக்கு தண்ணீர் விடும் வேலையை கண்காணிக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் தண்ணீர் விநியோகம் மாநில அரசினுடையது கூட இல்லை, உள்ளாட்சி அமைப்பின் அதிகாரத்துக்கு உட்பட்டது. எனவே எத்தனை கழிப்பறைகள் கட்டினாலும் தண்ணீர் இல்லை என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் செலவழித்த பணம் வீணாகிவிட்டது. Source: Indian Express
Lata Mangeshkar, the greatest singer of India and a Bharat Ratna, died recently(2022). Here...
An Uppuma Story Democracy and Divided Majority A hostel had 100 inmates and Uppuma...
ஆரோக்கிய வாழ்வு முக்கியம் சமூகத்தில் ஒருவரின் மதிப்பை எப்படி அவர் வாழ்ந்த வாழ்க்கை நிர்ணயிக்கின்றதோ, அதுபோல ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு, மன அமைதி, ஆழ்ந்த உறக்கம் ஆகிய காரணிகள் ஒருவருக்கு வலுவான நோய் எதிர்ப்புத் திறனை அளிக்கின்றன. நோய் எதிர்ப்புத் திறனால் மட்டுமே கரோனா,ஒமைக்ரான் வைரஸ் போன்றவை மட்டுமல்ல, வருங்காலத்தில் வரப்போகிற இன்னும் பல வைரஸ்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வழியமைக்கும். நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றிக் கொள்வது காலத்தின் கட்டாயம். -j மருத்துவர் செந்தில்குமார், தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்.
புதிய ஆசிரியன் இதழ் நடத்திய 2021 டிசம்பர் 14 அன்று நடந்த 14-வது கருத்தரங்கில் “பழங்குடியினர் துயரம்….. தீர்வுதான் என்ன?” என்ற தலைப்பில் த.நா.அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் நிகழ்த்திய நா.மணி உரையை கேளுங்கள்
மதுக்கூர் இராமலிங்கம்சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது என பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கப்பட்டுள்ளார்....
எனது எண்ணங்களை வெளிப்படுத்த புதிய ஆசிரியன் இதழ் எனக்கு சிறப்பான வாய்ப்பினை நல்கியது. தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி...
மதுக்கூர் இராமலிங்கம்சைவ உணவு சமைப்பது எப்படி என்ற மாநாட்டிற்கு ஓநாய் தலைமையேற்பது போல, அமெரிக்கா தலைமையில் ஜனநாயகத்திற்கான உச்சி...
என்று நினைவிருக்கிறதா..? # தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்.. # தற்கொலைகள் நின்றுவிடும்., # சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவை விட 50 சதவீதம் கூடுதலாக விலை நிர்ணயிப்போம்., # விதை உரம் வாங்க மானியம் கொடுப்போம்., # பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு கொடுப்போம்.. # விவசாய தொழிலாளர் கிராமப்புற வேலை திட்டத்தை இரு நூறு நாட்களுக்கு அதிகரிப்போம்.. # அதிக கூலி தருவோம்.. # பெண்களுக்கு எதிரான அக்கிரமங்களுக்கு முடிவு கட்டுவோம்.. # ஆகாயத்தை எட்டும் விலைவாசியைக் குறைப்போம்.. # ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம்.. # எல்லோருக்கும் நல்ல காலம் பிறக்கும்.....
மதுக்கூர் இராமலிங்கம்கடந்த ஓராண்டுக்கும் மேலாக 500-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற கூட்டமைப்பின்...
பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல்ஆணையம், சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை எல்லாம் கூட்டணி அமைத்து ஜனநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது… நாம் என்ன செய்யப் போகிறோம்? அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக் காலத்தை நீட்டிக்க ஒன்றிய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்துள்ளது. அடுத்ததாக, பிரதமர் பதவி காலத்தை 5-லிருந்து 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அவசரச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வரலாம். பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல்ஆணையம், சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை எல்லாம் கூட்டணி அமைத்து ஜனநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது… நாம் என்ன...
கடலூர் சுகுமாரன் ‘அப்பா ஜான்’ என அழைக்கப்படும் மக்கள் மட்டுமே முந்தைய மாநில அரசுகளின் மலிவு விலை பொருட்களால்...
மதுக்கூர் இராமலிங்கம் பிரதமர் மோடிக்கு நகைச்சுவை உணர்ச்சியே கிடையாது என்று யாரும் கூறிவிட முடியாது. அவர் முடிந்தளவிற்கு நகைச்சுவையாகப்...
மதுக்கூர் இராமலிங்கம் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட பொதுவான கருத்தியல் அவசியம் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் மாநாட்டில் பேசிய...
ஆகஸ்ட் இதழில் 29-ம் பக்கத்தில் கீழே உள்ள பெட்டிச் செய்தி 2-வது வரியில் ‘கார்ப்பரேட் வருமான வரி ரூ.1722...
மதுக்கூர் இராமலிங்கம் இந்தியாவின் முதல் சுதந்திரத் திருநாள் அன்று கொடியேற்றி உரையாற்றிய நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு...
புதிய ஆசிரியன் நடத்தும் 11-வது இணையவழிக் கருத்தரங்கில் செப்டம்பர் 14 செவ்வாய் அன்று மாலை 6 மணிக்கு எழுத்தாளர்-பேச்சாளர்-திரைப்பட...
புதிய ஆசிரியன் இதழை இனி நீங்கள் ஆன்லைனிலும் படிக்கலாம். முகவரி : றறற.யீரவாலையயளசைலையn.உடிஅதபாலில் இதழ் கிடைக்காதவர்கள் வழக்கம்போல் நிர்வாக...
மதுக்கூர் இராமலிங்கம். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசனுக்கு ஒன்றிய அமைச்சரிடமிருந்து ஒரு கடிதம் இந்தி மொழியில் வந்திருந்தது....
மதுக்கூர் இராமலிங்கம் ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று இரண்டு அமர்வுகளில் உரையாற்றியுள்ளார்....
தேர்தல் முடிவுகளும், தேசத்தின் தேவைகளும்… ...