September 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

puthiya aasiriyan

1 min read
# “திவ்யாங்” என்றால் தெய்வீகக் குழந்தை என்று பொருள். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மோடி மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து 35% குறைத்துள்ளார். தெய்வீகக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 35 விழுக்காடு நிதியை ஒருவர் குறைக்கிறார் என்றால், குறைக்கப்பட்டவர்கள் தெய்வீகக் குழந்தைகள் என்றால், குறைத்தவர் என்ன சாத்தானின் குழந்தையா? அதானிக்கும் அம்பானிக்கும் இந்த ஆண்டு மட்டும் 35 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்துள்ளது ஒன்றிய மோடி அரசு. மோடிக்கு தெய்வம் அதானியும் அம்பானியும்தான் ஆனால் மாற்றுத்திறனாளிகள்தான் தெய்வம் என்று வாய் கூசாமல் பொய் பேசுவார் மோடிஜி.. – சு. வெங்கடேசன், மதுரை எம்.பி. # பாஜக மேயர்கள், துணை மேயர்கள் தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு செயல்படக் கூடாது. ஆட்சி, அதிகாரம், பதவிக்காக நாம் அரசியலுக்கு வரவில்லை.  நம்மைப் பொறுத்தவரை ஆட்சி, அதிகாரத்தை மக்களுக்கு சேவையாற்றுவதற்கு கிடைத்த பாக்கியமாக கருத வேண்டும், தேர்தல் வெற்றியை கருத்தில் கொள்ளாமல் நகரங்களின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். – குஜராத் மேயர்கள் கூட்டத்தில் பிரதமர்...
எஸ். கண்ணன் இந்திய நாடாளுமன்றத்தில் அடிப்படை ஜனநாயக மாண்புகள் நசுக்கப்பட்டு, நிறைவேறிய தொழிலாளர் சட்ட தொகுப்புகள், இந்திய தொழிலாளர் மாநாட்டில், இந்திய தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற்பதை தடுத்துள்ளது. நிராகரிப்பதற்கான எழுதப்படாத சட்டம் திருப்பதியில் இந்திய தொழிலாளர் துறை அமைச்சகத்தால் அமலாக்கப்பட்டுள்ளது. 47 வது இந்திய தொழிலாளர் மாநாட்டில், மொத்தமாக தொழிலாளர் உரிமைகளை, கோரிக்கை வைக்கும் வாய்ப்பை பறிக்கும் நோக்கத்துடன், பாஜக ஆட்சியாளர்களால், தொழிற்சங்கங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இம்மாநாட்டில், முதலாளிகளின் பிரதிநிதிகளும், அரசு பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். ஆனால் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கு எந்த அழைப்பும் கிடையாது. 46 மாநாடுகள் நடந்துள்ளன 1942 முதல் இந்திய தொழிலாளர் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு 1919ல் துவங்கப்பட்டு ”ஜனநாயக ரீதியிலான செயல்பாடுகளை உறுதி செய்ய, தொழிலாளர்கள் தாங்கள் சந்திக்கும், சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து உரையாட அனுமதிக்க வேண்டும்” என்பதை தனது நோக்கமாக அறிவித்தது. அதன் உறுப்பினராக உள்ள நாடுகள் இந்த உரையாடலை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியது. அந்த பின்னணியில் இந்தியாவில் 1942 முதல் 2015 வரை 46 மாநாடுகள் நடந்துள்ளன. 47வது மாநாடு இந்த தொழிலாளர் மாநாடுகளில் “ஒன்றிய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் அமைச்சர், அதிகாரிகள், மாநில அரசின் பிரதிநிதிகள், இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் என முத்தரப்பினரும் பங்கேற்பர். இதன் காரணமாகவே இந்த மாநாடு, முத்தரப்பு மாநாடு என்று அழைக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கார், வி.வி. கிரி, குல்சாரி லால் நந்தா உள்ளிட்டோர் அமைச்சர்களாக இருந்த பலரும், வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், ஏ.பி. வாஜ்பாயி, மன்மோகன் சிங் போன்ற பிரதமர் பொறுப்பில் இருந்தோரும் மாநாட்டினை துவக்கி வைத்து அல்லது பங்கேற்று பேசி உள்ளனர். ஆகஸ்ட் 25 மற்றும் 26 தேதிகளில் நடைபெற்ற 47 வது தொழிலாளர் மாநாட்டை பிரதமர் மோடி, காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்துள்ளார். எது ஆற்றல்படுத்துதல்? பிரதமர் மோடி தனது துவக்க உரையில், தொழிலாளர் சட்ட திருத்தங்கள், தொழிலாளர்களை ஆற்றல்படுத்தும் என பேசி உள்ளார். தொழிற்சங்க பிரதிநிதிகள் அழைக்கப்படாதது, தொழிலாளர்களை ஆற்றல்படுவதற்கான செயல்தானா? ஆற்றல்படுத்துவது என்றால் என்ன? சமூக நிலையில் பின் தங்கி உள்ள ஒருவர் தனது கருத்தை எடுத்துரைக்கும் துணிவு பெறுவது; தனது சமூக நிலையை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை மற்றவர்களைப்போல் தொழிலாளரும் பெற அனுமதிப்பது; அவ்வாறு பெறுவதற்கான கூட்டு பேர உரிமை என்ற ஜனநாயக மாண்புகளுக்கான வாய்ப்பினை பெறுவது; ஒருவேளை அத்தகைய கூட்டு பேர உரிமை மறுக்கப்படுமாயின், அதை போராடிப் பெறும் உரிமையோடும், வலிமையோடும் செயல்பட அனுமதிப்பது. ஆனால் இவை அனைத்தும் இன்று மறுக்கப்படுகிறது. பின்னர் எப்படி பிரதமர் மோடியின் கூற்றுப்படி, தொழிலாளர்கள் ஆற்றல்படுத்தப்படுவார்கள்? தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வார விடுப்பு, மருத்துவ விடுப்பு, இதர சமூக பாதுகாப்பு சட்டங்கள் போன்ற எதுவும் தானாக கிடைக்கவில்லை. மாறாக போராடியும், வாதாடியும் பெற்றவை. வாதாடுவதற்கான வாய்ப்பு, இந்திய தொழிலாளர் மாநாடுகளில் கடந்த காலங்களில் வழங்கபட்டது. அது ஒரு சில பயன்களையும் அளித்தன. தற்போது பாஜக ஆட்சியின் தொழிலாளர் கொள்கை, வாதாடும் வாய்ப்பினை முற்றாக மறுத்துள்ளது. அரசரிடம் குறைகளை எடுத்துரைக்க அன்றைய மக்கள் தயங்கியது போல், இன்றைய கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்காக வாதாடும் அரசாங்க பிரதிநிதிகள் முன்பு, தொழிலாளர் என்ற நிலையில் உள்ள பொது மக்கள் வாதாடும் வாய்ப்பை இழக்கின்றனர். எனவே தான் ஜனநாயகம் இந்த பெரு நிறுவனங்களாலும், அதை ஆதரிக்கும் ஆட்சியாளர்களாலும் நூறாண்டுகள் பின்னுக்கு தள்ளப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் தொழிலாளர் சட்டங்கள் பற்றி விவாதிக்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பெரு நிறுவனங்களுக்கான அரசுதாராளமய கொள்கைகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கும், அரசு சொத்துக்களையும், இயற்கை வளங்களையும் சூறையாட தாராளமாக அனுமதிக்கிறது. அவ்வாறு அனுமதிக்க தடையாக இருக்கும் அமைப்புகளையும், குழுக்களையும், நபர்களையும் அழிக்கும் முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபடுகிறார்கள். ஜனநாயகம் பேசும் நாட்டில், மேற்படி ஜனநாயக உரிமைக்காக போராடும் அமைப்புகளின் வலிமையை குறைக்க சட்ட நடவடிக்கைகளில் உள்ள வாய்ப்புகள் கட்டுபடுத்தப்பட்டு பின் நிராகரிக்கப்பட்டு வருகிறது. முதலாளிகளுக்கு தாராள அனுமதியும், தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடும், தொடர்ந்த நிராகரிப்பும்தான் மூலதன குவிப்பிற்கு வழிவகை செய்யக் கூடியதாக இருக்கிறது. பெரு நிறுவனங்களின் இந்த தேவையை நிறைவேற்றும் வகையிலேயே, மேற்படி நகர்த்தல் அனைத்தையும் பாஜக ஆட்சி செய்து வருகிறது.நவ தாராளமய பொருளாதாரக் கொள்கையை அமுலாக்கும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான பல சட்டங்கள் ஆளும் கட்சியின் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படுகின்றன. மறுபக்கம் மேற்படி தாராள அனுமதியை தடுக்கும் சக்திகளாக உள்ள தொழிற்சங்கங்களின் ஜனநாயக செயல்பாடுகள் ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. அதாவது தொழிற்சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி, மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயல்படுகின்றன. வளர்ச்சி என்னும் மாயை வலைக்குள், அதிக எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்கத்தினர் சிக்கிக் கொள்கின்றனர். எனவே திருப்பதியில் தொழிற்சங்க அமைப்புகளுக்கு மூடப்பட்ட கதவு சாதாரணமான நிகழ்வல்ல என்பதை உணர வேண்டும். அரசியல் உணர்வாக வளர வேண்டும்அது தொழிற்சங்க உணர்வாக மட்டுமல்லாமல், அரசின் நவ தாரளமய கொள்கைகளுக்கு எதிராகவும், கொள்கைகளுக்கு பின் உள்ள அரசியலை அம்பலப்படுத்துவதாகவும் வளர வேண்டும். பிரிட்டிஷ் காலனியாதிக்க எதிர்ப்பு, 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் போராட்டங்களாக இருந்தன. அதன் விளைவு பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியாளர்களே, இந்திய தொழிற்சங்க சட்டம் 1926 ஐ இயற்ற வேண்டிய சூழலும், 1942 முதல் இந்திய தொழிலாளர் மாநாடு நடத்த வேண்டிய சூழலும் உருவாகியது. இதன் தொடர்ச்சியாக ஒரு கட்டத்தில் நாட்டை விட்டு வெளியேறவும் நிர்பந்திக்கப்பட்டனர். இன்று மீண்டும் நவ காலனியாதிக்கத்தை நோக்கி ஆட்சியாளர்கள் செல்கின்றனர். தொழிலாளர் உரிமை, உழைக்கும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது அதன் துவக்கமே என்பதை உணர்வதும், அதற்கெதிராக போராடுவதும் சமூக வளர்ச்சிக்கான அடிப்படை தேவையாகும்.
1 min read
# கவிஞர் பாரதிதாசன் “குயில்” என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்தி வந்தார். வேறொரு ஊருக்குப் போயிருந்தபோது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் “இங்கெல்லாம் குயில் கிடைக்குதா?” என்று கேட்டார். “குயில் எங்கே...
எம்.எஸ்.இராஜகோபால்(முகநூல் பதிவு) அப்போது மதானி, சம்பானி ஆகிய இருவரும் ஜம்புத்திவீபம் எனப்படும் தேசத்தில் மேற்கு கரையோரம் சென்று கொண்டிருந்தார்கள்.  பசியும் தாகமும் அவர்களை வாட்டியது.    “ஆண்டவரே எங்களை இரட்சியும்! எங்களுக்கு அளவு  கடந்த பசியும் தாகமுமாயிருக்கிறது.. இந்த ஜம்புத்வீபத்தில் உள்ள அனைத்து எண்ணெயைக்  குடித்தாலும் எங்கள் தாகம் தீராது போலிருக்கிறது… இந்த தேசத்தின் அனைத்து சொத்துகளை ஸ்வீகரித்துக் கொண்டாலும் எங்கள் பசி தீராது போலிருக்கிறது” என்றனர். அப்போது அவர்களின் ஆண்டவராகிய டீமோ கோடி சூரிய பிரகாசமாய் அவர்கள் முன் தோன்றினார். “விசுவாசமானவர்களே! நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள்! இதோ உங்கள்  பசியும் தாகமும் தீருவதாகுக… இனி நீங்களே என்னுடைய பெயரில் இந்த மண்ணை ஆள்வீர்கள் என வாக்குதத்தம் செய்து கொடுக்கிறேன்” என்றார்.   பின்னும் தன்னுடைய கையிலிருந்த கோலை எடுத்து மதானியை நோக்கி இந்த தேசத்தில் உள்ள துறைமுகங்கள் உனக்கு என்றார்.  துறைமுகங்கள் அவர் வசமாயின!  இந்த விமான நிலையங்கள் உனக்கு என்றார்!  அவையும் அவர் வசமாயின. இந்த இரயில் நிலையங்களும் இரயில்களும் உனக்கு என்றார்.  அப்படியே ஆயின. இந்த நிலக்கரி சுரங்கங்கள் உனக்கு என்றார். இது போதவில்லை என்றால் பரதேச சுரங்கங்களையும் உன்னுடையதாய் ஆக்கித் தருவேன் என்றார்.  இந்த தேசத்தின் கப்பல்களை உனக்குத் தருகிறேன்.. அவை உனக்கான நிலக்கரிகளை சுமந்து வருமென்றார்.. இந்த சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் உனக்கு அருளப்படும் என்றார். உடனே அருளப்பட்டது....
1 min read
ஜேப்பி குழந்தைகளுக்கு  மிட்டாய் கொடுத்து ஈர்ப்பது போல, அரசியல் கட்சிகள் மக்களிடம் வாக்கு பெறுவதற்கு “இது இலவசம், அது இலவசம்” என்று தேர்தல் வாக்குறுதிகளை வாரி வீசி “மிட்டாய் கலாச்சாரத்தைக்” கடைப்பிடித்து வருவதாக சமீபத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். பாரதிய ஜனதா நிலைபாடு மோடியின் பேச்சின் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர் உச்ச நீதி மன்றத்தில் “இலவசங்களுக்கு” எதிராகப் பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்தார். வாக்காளர்களைத் தங்களுக்குச் சாதகமாகக் கவர்ந்திழுக்க, தேர்தல் பிரச்சாரங்களின் போது “முறையற்ற இலவசங்கள் (irrational freebies)” மற்றும் “தனிநலப் பொருட்கள் (private goods)” வழங்க அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதைச் சட்ட விரோதமாக்க வேண்டுமென்றும், அத்தகைய அரசியல் கட்சிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமென்றும், அந்த கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும் அந்த வழக்கின் மனு கோருகிறது. இந்த மனுவை பாரதிய ஜனதா கட்சியும் ஆதரித்து இருக்கிறது. உச்ச நீதிமன்றத் தலையீடு இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதை தடுக்க முடியாது எனக் கூறினார். ஆனால், இத்துடன் வழக்கை முடிக்காமல் பொதுப் பணத்தை நலத் திட்டங்களுக்குச் செலவிடுவதற்கான சரியான வழி என்ன என்பதுதான் நீதிமன்றத்தின் கவலை என்றும் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களும், அரசுகளின் சமூக நலத் திட்டங்களும் வெவ்வேறானவை என விளக்கமளித்தார்.  இலவசங்கள் பற்றி ஆலோசனை வழங்க அரசு, நிதி ஆயோக், நிதி ஆணையம், சட்ட ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி, எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஜனநாயக மரபு இந்திய அரசியல் சட்டம் முகப்புரை “சமூக, பொருளாதார மற்றும் அரசியல் – நீதியை” குடிகளுக்கு உறுதி செய்கிறது. இதனடிப்படையில் மக்களுக்கு என்ன நலத் திட்டங்கள் தேவை அவற்றுக்கு எப்படி, எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதை கணக்கில் கொண்டு மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் தங்கள் நிதிக் கொள்கைகளை வகுக்க வேண்டும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை-இதைச் செயலாற்றுவோம் என வாக்குறுதி அளித்து அரசியல் கட்சிகள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக மரபு. தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சிகளின் இந்த நிதிக் கொள்கை முடிவுகளில், சமூகக் கடமையில், அரசியல் உரிமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத எவரும், அது நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ அல்லது வேறு எந்த நபரோ, நிறுவனமோ தலையிட முடியாது. அவ்வாறு தலையிட்டால் அங்கு ஜனநாயகம் மறுக்கப்படுகிறது மற்றும் மரபு மீறப்படுகிறது என்று பொருள். இலவசமா – முதலீடா? எதுவுமே இங்கு இலவசம் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் வரி செலுத்துகின்றனர். அந்த வரிப்பணத்தில்தான் அரசாங்கங்கள் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுகின்றன. அப்படி இருக்க, மோடி சொல்லும் இலவசம் எது? கல்வி, சுகாதாரம், சத்துணவு போன்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் வீண் பொருளாதாரச் செலவுகளா? ஆராய்ந்து பார்ப்போம். எந்த ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இயற்கை வளங்களும் மனித வளங்களும்தான் அடிப்படை. இவற்றைப் பயன்படுத்தியே முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி நடைபெறுகிறது. இதில் மனிதவள முன்னேற்றத்திற்கு செய்யும் செலவுகள் அனைத்தும் முதலீடுகளே. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் கூட பல காலமாக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பல சமயங்களில் பொருளாதாரம் மற்றும் பிற அதிர்ச்சிகளால் மக்கள் பாதிக்கப்படும் பொழுது உடனடி நிவாரணங்கள் வழங்குவது அவசரத் தேவை ஆகின்றது, கொரோனா காலத்தில் இலவச தடுப்பூசி, பண உதவிகள் போல. மற்ற காலங்களில் முதலாளித்துவ சந்தை இயங்குவதற்காக, மக்கள் பணப் புழக்கத்தை அதிகரிக்க, மனித வளத்தை மேம்படுத்த, அரசுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டி இருக்கின்றன. இவை இலவசங்கள் அல்ல. மாறாக இன்றி அமையாத முதலீடுகள்....
சோழ. நாகராஜன் நெல்லை கண்ணன் மறைந்துவிட்டார். தமிழின் வளங்களையெல்லாம் அள்ளிப்பருகி, அதனைக் கேட்போர் வியக்க உரைத்து வந்ததொரு காலப்...
சிறுகதைத் தொகுப்பு – வெளியீடு: பாரதி புத்தகலாயம், விலை : ரூ.95/-வகுப்பறை ஜனநாயகத்தை மையப்படுத்தும் சிறுகதைத் தொகுப்பு. தேனி...
1 min read
எஸ்.வி. வேணுகோபாலன் சிரித்த முகத்தோடு வரவேற்றார் அந்த எளிய உணவகத்தின் உரிமையாளர் திரு ராஜேந்திரன். நேரம் தப்பிய நேரத்தில்...
1 min read
டாக்டர் ஜி. ராமானுஜம்ஒரு நாள் காபி குடித்துவிட்டுக் காசு கொடுக்கலாம் எனப் பார்க்கிறேன். பர்சைக் காணவில்லை. வீட்டிலேயே வைத்துவிட்டு...
தேவராஜன் மறைவுதமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினைத் தோற்றுவித்து அயராது உழைத்த தோழர் கே.ஏ.தேவராஜன் (கே.ஏ.டி. என்று தோழர்களால்...
செல்வகதிரவன்அதிகாலைப் பொழுது. தெருவில ஜன நடமாட்டங்கள் தொடங்கி விட்டன. இரு சக்கர வாகனங்களின் ஓட்டம்.. அவை எழுப்பும் ஒலிகள்...
புதிய ஆசிரியன் இதழ் அளிக்கும் பரிந்துரைகள்உமா ஓராசிரியர் பள்ளிகளுக்கும் ஈராசிரியர் பள்ளிகளுக்கும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்க வேண்டும்...
அருப்புக்கோட்டை வாசகர் வட்டம் அகல்யா, மாரிஸ்வரி, கிஷோர் கண்ணா, சாத்வீகா, யோகிதா, கண்மணி 1 ) ஜனாதிபதி, துணை...
தேனி சுந்தர்பயிற்சிகள் நடைபெறும்போது இடையிடையே கருத்தாளர்களிடம் கேள்விகள், சந்தேகங்கள் கேட்பது வழக்கம்.. கொஞ்சம் கலந்துரையாடலும் இருந்தால்தான் பயிற்சியும் உயிரோட்டமாக...
நம்பினால் நம்புங்கள்…இன்னும் பத்தாண்டுகள்மோடியின் நல்லாட்சி தொடர்ந்தால்வல்லரசாகி விடுமாம் இந்தியா. ஆமாம், நம்பிட்டோம்;எட்டாண்டு மோடி ஆட்சியில்இந்தியா கடன் தொகையைமும்மடங்காக உயர்த்திவிட்டதிலிருந்தேநாடு...
தேசிய கல்விக் கொள்கை குறித்த ஆழ்ந்த விவாதம் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாடெங்கிலும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில்...
தமிழகத்தின் ஏதோ ஒரு ஆற்றில் இருந்து அள்ளப்பட்ட மணலே மாலத்தீவில் கட்டிடங்களாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. பாலைவன நாடுகள் என்று அழைக்கப்படும் வளைகுடா நாடுகளில் ஆற்று மணல் இல்லாததால் ஏதோ ஒரு நாட்டில் இருந்தே மணல் இறக்குமதி செய்யப்படுகின்றது.  நாம் வியந்து பார்க்கும் கட்டிடங்கள் அனைத்திலும் மணல் ஒளிந்து கொண்டு உள்ளது. ஒருவர் வீடு கட்டக்கூடாதா என்றால் கட்டலாம். வீடு என்பது வசிப்பவரின் தேவைக்கு போதுமானதாக இருக்க வேண்டும். ஆனால் மாளிகை என்பது செல்வ நிலையின் அடையாளம். இரண்டு பேர் வசிப்பதற்கும் 10 ஆயிரம் சதுர அடி மாளிகை கட்டப்படுவதை பார்க்கிறோம். முகேஷ் அம்பானி மும்பையில் கட்டி உள்ள 27 அடுக்கு மாளிகை ஏறக்குறைய ஐந்து லட்சம் சதுர அடி பரப்புடையது. ஆனால் அங்கிருந்த அவருடைய குடும்ப உறுப்பினர்களோ மொத்தம் ஐந்து பேர்தான்.  அதே மும்பையில்தான் வீடற்றுச் சேரிப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் குவிந்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்தியாவின் ஒன்பது கோடி நகர்ப்புற வீடுகளில் ஒரு கோடியே 10 லட்சம் வீடுகள் காலியாக இருந்தன என்கிற தகவலை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். ஆனாலும் வளர்ச்சித் திட்டங்கள் குறையவில்லை. யாருக்காக அந்த வளர்ச்சி என்பதுதான் கேள்வி.  இந்தியாவில் மட்டும் ஓராண்டில் ஏறத்தாழ 3 கோடி டன் வரை கட்டிடக்கழிவு உருவாகிறது. இவற்றில் ஐந்து விழுக்காடு மட்டுமே மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரில் இது 98% ஆக உள்ளது. நாம் எப்போது அந்த இடத்திற்கு முன்னேறப் போகிறோம்? (எழுத்தாளர் நக்கீரன் தமிழ் இந்துவில் எழுதிய கட்டுரையிலிருந்து)
1 min read
சாவர்கர் அந்தமான் செல்லுலர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது அவர் அறைக்கு வரும் புல் புல் என்ற பறவையின் மீது ஏறிப் பறந்து இந்தியாவிற்கு தினசரி வந்து போனாராம். இது கர்னாடகாவில் புதிதாக உருவாக்கப்பட்ட எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு பாடம். அந்தமானிலிருந்து அப்பப்ப இந்த புல்புல் பறவை மீது ஏறி பறந்துவந்து தனது பிரிட்டிஷ் எஜமானர்களிடம் மன்னிப்புக் கடிதம் மற்றும் பென்சன் விண்ணப்பம் கொடுத்துவிட்டு.சாவர்கர் அந்தமான் திரும்பிவிடுவார் போலும்!  தான் நினைத்ததை ஆணையிடும் அதிகாரம் புல்புல் பறவைக்கு உண்டு என்பதை...
1 min read
16 மாதங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நாளை ஒய்வு பெறுகிறார். எந்த தலைமை நீதிபதிக்கும் இல்லாத பெருமை ரமணாவுக்கு உண்டு. தலைமை நீதிபதியாக இருந்த இந்த 16 மாதத்தில் எந்த ஒரு முக்கிய வழக்கையும் விசாரித்து அவர் தீர்ப்பு வழங்கவே இல்லை.   1. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து 16/08/2019-ல் வழக்கு தொடரப்பட்டது. ஏறத்தாழ இரண்டரை வருடமாக அந்த வழக்கை விசாரிக்க இன்னும் அரசியல் சாசன அமர்வு கூட உருவாக்கப்படவில்லை.   2. தேர்தல் பத்திரங்களுக்கு ( Electoral Bonds) எதிராக தொடரப்பட்ட வழக்கு. இதை எதிர்த்து 5/04/2019-ல் உச்சநீதிமன்றத்தில் முதல் விசாரணை நடந்தது. இந்த வழக்கின் மீது கடந்த 3 ஆண்டுகளில் 8 முறை மட்டுமே விசாரணை நடந்துள்ளது. இந்த வழக்கு 1,816 நாட்கள் நிலுவையில் உள்ளது.   3. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் – தனி மனிதனின் சுதந்திரத்தை பறிக்கும் இந்த சட்டத்தால் யார் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். பத்திரிகையாளர் சித்திக் காப்பான் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 21 மாதங்களாக சிறையில் இருக்கிறார். 9/9/2019-ல்  உச்சநீதிமன்றத்தில் UAPA சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 35 மாதங்களாக இவ்வழக்கில் ஒரு முறை மட்டுமே விசாரணை நடந்திருக்கிறது. இச்சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்னும் பிணை கிடைக்கவில்லை. அதில் உமர் கலித்தும் ஒருவர்.  4.10% இட ஒதுக்கீடு வழக்கு- பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி இதை எதிர்த்து 12/03/2019-ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1,323 நாட்களாக நிலுவையில் இருக்கும் இவ்வழக்கில் இதுவரை 6 முறை மட்டுமே விசாரணை நடந்துள்ளது. EWS ஒதுக்கீடு மூலம் முற்பட்ட வகுப்பினருக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடந்த போட்டித்தேர்வுகளில் OBC வகுப்பினரை விட கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டு மாபெரும் சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இவ் வழக்கை விசாரிக்க இன்னும் அரசியல்சாசன அமர்வு உருவாக்கப்படவில்லை.  5. குடியுரிமை திருத்தச் சட்டம்-18/12/2019-ல் CAA சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 987 நாட்கள் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில் இதுவரை 2 முறை மட்டுமே விசாரணை நடந்துள்ளது....
1 min read
துணுக்குகள் : படித்ததில் ரசித்தவை.. # சீனா.. ஜப்பான்.. ஜெர்மனி.. பின்லாந்து ஆகிய நாடுகள் பள்ளிப் படிப்பு முதல் பல்கலைக்கழகப் படிப்பு.. ஆராய்ச்சி.. மருத்துவம்.. தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்தையும் தங்கள் தாய் மொழியில் அளித்து வருகின்றன. சீனா.. ஜப்பான் நாட்டின் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பார்த்தபோது நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் கூடங்கள் அனைத்துமே அவர்களின் தாய் மொழியிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. உலகத்தில் ஆங்கிலத்தில் வெளிவருகின்ற நூல்களும் பத்திரிகைகளும் வெளிவந்த அடுத்த இரண்டு நாட்களில் ஜப்பானிய மொழியில் அதற்கான மென்பொருள் மூலமாக மாற்றித் தரப்படுகின்றன. .. தமிழ் இந்துவில் க.திருவாசகம்.. சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் # பிரிக்ஸ் எனப்படும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பில் அறிவியலுக்கான நிதி ஒதுக்கீடு இந்தியாவில்தான் ஆகக் குறைவு..ஜிடிபி-யில் 0.69%..  தென் கொரியா 4.29%.. தென்னாப்பிரிக்கா 0.73%.. சீனா 2.05%.. பிரேசில் 1.24% # Uncle Volt-face Nitish kumar has...
1 min read
*“தமிக அரசின் கல்விக் குழுவிற்கு உயர்கல்வி தொடர்பாக நமது பரிந்துரைகள்”* *நாள்: 09-08-2022, (செவ்வாய்க்கிழமை) மாலை 6.00 மணி* கருத்துரையாளர்கள் *பேரா. ஏ.பி. அருண்கண்ணன்,* (லயோலா கல்லூரி) *பேரா. எஸ். சுபா* (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) *பேரா. ஆர். முரளி* (ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்புக் குழு) ZOOM LINK: Meeting...
சு.வெங்கடேசன் எம்.பி. ஒரு கழுதை தனது கஷ்டங்களை நினைத்து கண்ணீரோடு சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தது. அதைப்பார்த்த அரசு அதிகாரி ஒருவர் “இந்த கழுதையின் மீது வழக்கு போடுங்கள்” என்று கூறினார்.   “ நான் எந்த தவறும் செய்யவில்லையே, என் மீது ஏன் வழக்கு போடுகிறீர்கள்?,” என கழுதை கேட்டது. அதற்கு அந்த அதிகாரி “ நீ அரசுக்கும் அரசருக்கும் எதிரான செயலில் ஈடுபட்டாய்” என்று கூறினார். “இல்லை, நான் நமது அரசர் செய்த ஊழலைப் பற்றியோ, அவரது மோசடிகளைப் பற்றியோ, நாட்டில் கிரிமினல் பேர்வழிகள் அதிகமாகிவிட்டார்கள் என்றோ, ரவுடித்தனம் செய்யும் குண்டர்கள் அதிகமாகிவிட்டார்கள் என்றோ, அரசரைச் சுற்றி  இரட்டைவேடம் போடும் துதிபாடிகள் நிறைந்திருக்கிறார்கள் என்றோ எதுவும்  சொல்லவில்லை, என்னைப் போய் அரசுக்கு எதிரான செயலில் ஈடுபட்டதாக எப்படி சொல்கிறீர்கள்?” என்று கேட்டது.  “உன் மீது வழக்கு போட்டாகிவிட்டது. இனி நீ எது சொல்வதாக இருந்தாலும் நீதிமன்றத்தில் வந்து சொல்” என்று சொல்லி கழுதையைக் கைது செய்தனர்.  மறுநாள் நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது. கழுதையின் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் கூறினார். அதைக்கேட்டு பதட்டமான கழுதையின் தரப்பு வழக்கறிஞர், கழுதையை பார்த்து கேட்டார்:   “நீ நமது அரசரை  சகுனி என்றோ சர்வாதிகாரி என்றோ தவறாக பேசினாயா?” “இல்லை” “நாடகக்காரர் என்றோ பெருமை பீற்றிக் கொள்பவர் என்றோ உண்மையைப் பேசித்தொலைத்தாயா?”...
அஞ்சலி: பிரதாப் போத்தன்சோழ. நாகராஜன் முற்றிலும் மாறுபட்டதொரு கலைஞன் பிரதாப் போத்தன் மறைவு என்பது கலையுலகிற்கு ஈடுசெய்யமுடியாத இழப்புதான்....
ஆசிரியர் : சக.முத்துக்கண்ணன்வெளியீடு : பாரதி புத்தகாலயம் விலை:ரூ.110/- சக.முத்துக்கண்ணனின் கட்டுரைத் தொகுப்பு படித்து முடித்ததும் பிரமிப்பில் ஆழ்ந்தேன்....
லோ. விக்னேஷ் அன்று பள்ளியின் ஸ்டாஃப் ரூம் முழுக்க ஒரே பரபரப்பு… ஆள் ஆளுக்குத் தத்தம் கருத்துக்களை அள்ளி...
சக.முத்துக்கண்ணன் பள்ளிக்கு வெளியே செய்து பார்த்த கற்பித்தல் அனுபவங்கள் மறக்க முடியாதவை. கொரோனா காலத்தில் குழந்தைகளைச் சந்திக்க வீதிக்குப்...
நிறப்பிரிகை 7எஸ்.வி. வேணுகோபாலன் ப்ரீதா ’டான்ஸ் மூவ்மெண்ட் சைக்கோதெரபி’ எனும் படிப்பில் லண்டன் பல்கலைக்கழகத்தில் (கோல்ட்ஸ்மித் கல்லூரி) முதுநிலை...
ச.முத்துக்குமாரி “டீச்சர் கரட்டாண்டி எப்படி பிடிக்கணும்னு தெரியுமா?”“கரட்டாண்டினா என்னடா? ““கரட்டாண்டினா… அதோ அங்க பாருங்க மரத்துல.. தெரியுதா? மரக்கலர்ல...
1 min read
சிதம்பரம் இரவிச்சந்திரன். ஆஸ்திரேலியா தேனீக்களுக்கு லாக் டவுன் அறிவித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸில் ‘வரோவா’ என்ற ஒட்டுண்ணித் தொற்று...
தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு வடிவங்கள் தமிழகத்தின் பள்ளிக் கல்வியிலும் உயர்கல்வியிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன என்பதைத் தொடர்ந்து உரையாடி...
மதுக்கூர் இராமலிங்கம் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமை குறித்து இந்திய நாடாளுமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது....
மனச்சாட்சியே இல்லாதமரத்துப்போன நாக்குகளிலிருந்துஉதிரும் சொற்களுக்கு உயிரேது..? கடந்துபோன எட்டாண்டுகளில்குடிமக்கள் வெட்கித் தலைகுனியும்செயலேதும் செய்யவேயில்லையாம்நம் பாரதப் பிரதமர். ஆயிரங்களைக் கடந்துவிண்ணேறிப்...
ஒரு நாட்டின் உயர்கல்வியின் வளர்ச்சியே அந்நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளமாகும். நம் நாட்டின் உயர்கல்வியின் நிலைமை மிகவும் தரந்தாழ்ந்து போயுள்ளது....
ஜ தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை : அரசின் ஆணைகளையும், பல்கலைக்கழக மானியக் குழுவின் செயல் முறைகளையும் துச்சமென...
1 min read
சங் பரிவாரத்தைச் சேர்ந்தவங்க சுதந்திரப் போராட்டத்திலே ஏன் கலந்துக்கலைன்னு கேக்கறீங்க. சொல்றோம், கேட்டுக்குங்க. எங்களுக்குப் பிரிட்டிஷ்காரங்க மேலே கோபம்....
1 min read
மானுடம் மே-ஜுலை இதழில் தேனி சுந்தர் எழுதியுள்ள கட்டுரையைப் படித்துப் பாருங்கள். பள்ளிக்கு சிறிய சமூகம் என்றும் சமூகத்திற்கு பெரிய...
1 min read
ஒவ்வொரு மனிதருக்கும் தான் எத்தனை ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கப்போகிறோம் என்ற கேள்வி மனதுக்குள்ளாவது நிச்சயம் இருக்கும். “அதையெல்லாம் பிறக்கும்போதே ஆண்டவன் தலையிலே எழுதிவைத்துவிட்டான்” என்று எளிமையாக நம்புவோர் பலர். ஆதி காலத்தில் மனிதர்கள் முதிய வயது வரை வாழ்ந்தார்கள் என்று கல்வெட்டுகளிலிருந்து ஆதாரம் காட்டுவோர் உண்டு....
1 min read
“விடிந்தால் இந்த தேசம் விடுதலை அடையப் போகிறது. நாங்கள் சிறையில் இருந்தோம்.மாலை 6 மணிக்கு நாங்கள் இருந்த சிறைச்சாலைக்கு நீதிபதி அலீம் வந்து விசாரித்து விட்டு, இதுவொரு பொய்வழக்கு என எங்கள் அனைவரையும் விடுவிக்க உத்தரவிடுகிறார்.விடுதலையான அனைவரும் ஊர்வலமாக வந்து திலகர் திடல் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்த பிறகு, எல்லா கோவில்களிலும் சுதந்திர மணி ஒலிக்கிறது. சுதந்திரத்திற்காகப் போராடிய கம்யூனிஸ்டுகள் இப்போது அதைப் பாதுகாக்க போராடுகிறோம்” *-என்.சங்கரய்யா* 
1 min read
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியை பாஜக சதித்திட்டம் தீட்டிக் கவிழ்ந்து தனது குதிரை பேரத்தால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கைப்பாவை அரசை வெற்றி பெற வைத்திருக்கிறது. இது அப்பட்டமான அரசியல் அநாகரீகம். பணத்தைக் கொண்டு ஜனநாயகத்தைச் சிதைக்கும் அயோக்கியத்தனம். இது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் தார்மீக தோல்வி.    தேர்தல்களில் மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்கள் ஆட்சி அமைக்கிக்கின்றனர். ஆனால் பாசிச வெறி கொண்ட பாஜக அதனை ஏற்க மறுக்கிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய ஆபத்தாக முடியும். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 11 அரசு களைக் கவிழ்த்து, மிகக்கேவலமாகக் குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. 2016-ல் அருணாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில், வெறும் 11 தொகுதிகளில் மட்டும் வென்ற பாஜக, அப்பட்டமாகக் குறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜகவை நம்பி களம் இறங்கிய கலிகோபுல் தற்கொலை செய்து கொண்டதுதான் மிச்சம்.   2017ல் மணிப்பூர் மற்றும் கோவாவில் அதிக இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் வீழ்த்தி விலைக்கு வாங்கியதுடன், பல சிறுகட்சி எம்எல்ஏக்க ளையும் பேரம் பேசி ஆட்சியைக் கைப்பற்றியது.  2017-ல் பீகாரிலும் இது போன்ற தில்லுமுல்லு வேலையில் ஈடுபட்டே பாஜக ஆட்சி அமைத்தது.  2018ல் மேகாலயாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனாலும் குறுக்குவழியில் ஆட்சி அதிகாரத்தை பாஜக கைப்பற்றியது. அதே ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தைச் சட்டவிரோதமாகக் கலைத்து ஆளுநர் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.  2019-ல் சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜகவை மக்கள் ஏற்கவில்லை. ஆனால் பாஜக அதிகார வெறி கொண்டு சிக்கிம் ஜனநாயக முன்னணியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி,  சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.  இதே மோசடி வேலைகளால் 2019-ல் கர்நாடகாவிலும், 2020ல் மத்தியப்பிரதேசத்திலும் ஆட்சி அதிகாரத்தை பாஜக கைப்பற்றியது. 2021-ல் புதுச்சேரியில் மக்கள் பாஜவை நிராகரித்த நிலையில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்களை கொண்டும் ரங்கசாமியை மிரட்டியும் வளைத்தும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது பாஜக.   இப்படி மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே 11 முறை மாநிலங்களில் பாஜக ஆட்சி  ...
சோழ. நாகராஜன்மின்சாரக் கனவு என்றொரு நனவிலிப் படம். 1997-ல் வெளிவந்த தமிழ்ப் படம். அதில் ‘ஸ்டிராபரி கண்ணே…’ என்று...
நன்னிலம் ஆறுமுகம்திரையிசைப் பாடல்களில் முற்போக்கான கருத்துகளை எழுதியவர்களில் உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதாசன், வாலி,...