August 6, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

Month: July 2022

1 min read
சங் பரிவாரத்தைச் சேர்ந்தவங்க சுதந்திரப் போராட்டத்திலே ஏன் கலந்துக்கலைன்னு கேக்கறீங்க. சொல்றோம், கேட்டுக்குங்க. எங்களுக்குப் பிரிட்டிஷ்காரங்க மேலே கோபம்....
1 min read
மானுடம் மே-ஜுலை இதழில் தேனி சுந்தர் எழுதியுள்ள கட்டுரையைப் படித்துப் பாருங்கள். பள்ளிக்கு சிறிய சமூகம் என்றும் சமூகத்திற்கு பெரிய...
1 min read
ஒவ்வொரு மனிதருக்கும் தான் எத்தனை ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கப்போகிறோம் என்ற கேள்வி மனதுக்குள்ளாவது நிச்சயம் இருக்கும். “அதையெல்லாம் பிறக்கும்போதே ஆண்டவன் தலையிலே எழுதிவைத்துவிட்டான்” என்று எளிமையாக நம்புவோர் பலர். ஆதி காலத்தில் மனிதர்கள் முதிய வயது வரை வாழ்ந்தார்கள் என்று கல்வெட்டுகளிலிருந்து ஆதாரம் காட்டுவோர் உண்டு....
1 min read
“விடிந்தால் இந்த தேசம் விடுதலை அடையப் போகிறது. நாங்கள் சிறையில் இருந்தோம்.மாலை 6 மணிக்கு நாங்கள் இருந்த சிறைச்சாலைக்கு நீதிபதி அலீம் வந்து விசாரித்து விட்டு, இதுவொரு பொய்வழக்கு என எங்கள் அனைவரையும் விடுவிக்க உத்தரவிடுகிறார்.விடுதலையான அனைவரும் ஊர்வலமாக வந்து திலகர் திடல் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்த பிறகு, எல்லா கோவில்களிலும் சுதந்திர மணி ஒலிக்கிறது. சுதந்திரத்திற்காகப் போராடிய கம்யூனிஸ்டுகள் இப்போது அதைப் பாதுகாக்க போராடுகிறோம்” *-என்.சங்கரய்யா* 
1 min read
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியை பாஜக சதித்திட்டம் தீட்டிக் கவிழ்ந்து தனது குதிரை பேரத்தால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கைப்பாவை அரசை வெற்றி பெற வைத்திருக்கிறது. இது அப்பட்டமான அரசியல் அநாகரீகம். பணத்தைக் கொண்டு ஜனநாயகத்தைச் சிதைக்கும் அயோக்கியத்தனம். இது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் தார்மீக தோல்வி.    தேர்தல்களில் மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்கள் ஆட்சி அமைக்கிக்கின்றனர். ஆனால் பாசிச வெறி கொண்ட பாஜக அதனை ஏற்க மறுக்கிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய ஆபத்தாக முடியும். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 11 அரசு களைக் கவிழ்த்து, மிகக்கேவலமாகக் குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. 2016-ல் அருணாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில், வெறும் 11 தொகுதிகளில் மட்டும் வென்ற பாஜக, அப்பட்டமாகக் குறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜகவை நம்பி களம் இறங்கிய கலிகோபுல் தற்கொலை செய்து கொண்டதுதான் மிச்சம்.   2017ல் மணிப்பூர் மற்றும் கோவாவில் அதிக இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் வீழ்த்தி விலைக்கு வாங்கியதுடன், பல சிறுகட்சி எம்எல்ஏக்க ளையும் பேரம் பேசி ஆட்சியைக் கைப்பற்றியது.  2017-ல் பீகாரிலும் இது போன்ற தில்லுமுல்லு வேலையில் ஈடுபட்டே பாஜக ஆட்சி அமைத்தது.  2018ல் மேகாலயாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனாலும் குறுக்குவழியில் ஆட்சி அதிகாரத்தை பாஜக கைப்பற்றியது. அதே ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தைச் சட்டவிரோதமாகக் கலைத்து ஆளுநர் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.  2019-ல் சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜகவை மக்கள் ஏற்கவில்லை. ஆனால் பாஜக அதிகார வெறி கொண்டு சிக்கிம் ஜனநாயக முன்னணியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி,  சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.  இதே மோசடி வேலைகளால் 2019-ல் கர்நாடகாவிலும், 2020ல் மத்தியப்பிரதேசத்திலும் ஆட்சி அதிகாரத்தை பாஜக கைப்பற்றியது. 2021-ல் புதுச்சேரியில் மக்கள் பாஜவை நிராகரித்த நிலையில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்களை கொண்டும் ரங்கசாமியை மிரட்டியும் வளைத்தும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது பாஜக.   இப்படி மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே 11 முறை மாநிலங்களில் பாஜக ஆட்சி  ...
சோழ. நாகராஜன்மின்சாரக் கனவு என்றொரு நனவிலிப் படம். 1997-ல் வெளிவந்த தமிழ்ப் படம். அதில் ‘ஸ்டிராபரி கண்ணே…’ என்று...
நன்னிலம் ஆறுமுகம்திரையிசைப் பாடல்களில் முற்போக்கான கருத்துகளை எழுதியவர்களில் உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதாசன், வாலி,...
சிதம்பரம் இரவிச்சந்திரன், பிரான்சில் பர்கண்டி பிரதேசத்தில் சாப்லிஸ் பகுதிக்கு அருகில் இருக்கும் திராட்சைத் தோட்டங்களுக்குச் சென்றால் அங்கு உங்களுக்கு...
செல்வகதிரவன், காலை பத்துமணி. அந்த தாலுகா அலுவலகம் பரபரப்புடன் இயங்கத் தொடங்கியது. ஒரு விசாரணை நிமித்தம் ஆர்டிஓ அங்கு...
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில்பத்து இலட்சம் பேருக்குவேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றபாரதப் பிரதமரின் வாக்குறுதி கேட்டு,உதடு பிதுக்கிச் சிரிக்கிறது…எட்டாண்டுகளுக்கு முன்பு2 கோடி...