September 29, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

Month: May 2022

1 min read
கே.ராஜு- முன்னாள் தலைவர், மூட்டா # மூட்டா மாநாட்டில் பேச ஒரு தொழிற்சங்கத் தலைவரை அழைத்திருந்தோம். மதியம் 12 மணிக்குப்...
ஆபத்தான ஆயுதங்களைக் கைகளில் ஏந்தி சமூகத்திற்கெதிராக வன்முறையைப் பிரயோகிப்போரை பயங்கரவாதிகள் என்கிறோம். அப்படி ஏதும் ஆயுதங்களைக் கைகளில் ஏந்தாமலேயே...
1 min read
அரசுப் பள்ளிகளைப் பழிப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று நாம் உணர வேண்டும். அரசுப் பள்ளிகளில் குறைகள் உண்டு. அவற்றைக் களைவதில் நம் அனைவருக்கும் பங்கும் உண்டு. எளிய மக்களின் ஒரே பற்றுக்கோடான அரசுப் பள்ளிகள் பலமிழந்தால், அவர்களின் வறுமையுடன் கல்லாமையும் சேர்ந்துகொள்ளும். கல்வியின் சாத்தியங்களை அறியாததால்தான் இந்தப் பிள்ளைகள் பெஞ்சுகளை உடைக்கிறார்கள், வன்முறையை நாடுகிறார்கள். அடுத்து, எல்லோரும் அவரவர் பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்குப் பங்களிக்க வேண்டும். மாணவர்களின் வளர்ச்சிக்கு அவரவரால் இயன்ற அளவுக்கு உதவ வேண்டும். ஆசிரியர்-பெற்றோர் உரையாடலை வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கு உள்ளூர்க்காரர்களால் உதவ முடியும். நம் கல்வி, நம் உரிமை, நம் சமூகம், நம் பள்ளி என்கிற உணர்வு மேலெழும்ப வேண்டும். – மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: [email protected]  (2022 மே 13 அன்று தமிழ் இந்துவில் வந்த கட்டுரையின் இறுதிப் பகுதி)
1 min read
க.சிவசங்கர் ஒரு தொழிலாளி தன் இளமைக் காலம் முழுவதும் செலுத்திய உழைப்பின் பலனை உடலில் வலு இல்லாத தன் இறுதிக் காலத்தில், தன் வாழ்க்கையை யாருடைய உதவியும் இன்றி குறைந்தபட்ச கௌரவத்துடன் அமைத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டமே (Social Security Scheme) ஓய்வூதியம். 1982-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்தியாவில் ஓய்வூதிய நடைமுறை குறித்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பில், “ஓய்வூதியம் என்பது அரசின் கருணைத்தொகையோ, நன்கொடையோ அல்ல. ஓர் அரசு ஊழியர் பல ஆண்டு காலம் அரசாங்கத்துக்கும், பொதுமக்களுக்கும் பணியாற்றியமைக்காக அவர் பெறும் உரிமைத் தொகையாகும். அரசு ஊழியர் ஓய்வுபெற்ற பின்னர் அவர் அமைதியாகவும், கௌரவமாகவும் வாழ்வதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. ஓய்வூதியம் வழங்குவதால் அரசிற்கு நட்டம் வருமா? ஓய்வூதியம் கொடுப்பதால் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் நொடிந்து போய் நட்டத்தில் சென்று விடும் என்று பரப்பப்படும் செய்திகளில் துளி உண்மையும் இல்லை. அந்த நிறுவனத்தின் லாபக் குவிப்பில் ஒரு சிறிய அளவு குறையும்; அவ்வளவே. மற்றபடி அது நட்டத்தில் போவதற்கு வேறு பல காரணங்கள் இருக்கலாமே ஒழிய, ஓய்வூதியம் கொடுக்கப்படுவதே காரணம் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மேலும் ஓய்வூதியம் வழங்குவதால் அரசிற்கு நட்டம் ஏற்படுகிறது என்ற கருத்தும் அதிகமாக முன்வைக்கப்படுகிறது. அரசிற்கு வருவாயை ஈட்டக்கூடிய லாபம் கொழிக்கும் கேந்திரமான துறைகளை ஒவ்வொன்றாக தனியாருக்குத் தாரை வார்த்து விட்டு, அரசிடம் பணம் இல்லை என்று சொல்வது எவ்வாறு சரியாக இருக்கும்? மாறாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வருவாய் ஈட்டும் துறைகள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் மிகச்சில தனி நபர்களிடம் குவிந்துள்ள செல்வம் அரசின் கஜனாவிற்கு வந்து சேரும். இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அல்ல, அமைப்பு சாரா பணிகளில் இருக்கும் வயது மூத்தோர்களுக்கும் கூட  ஓய்வூதியம் வழங்க இயலும். புதிய ஓய்வூதிய திட்டமா? பழைய ஓய்வூதிய திட்டமா? ஒரு தொழிலாளி ஓய்வு பெற்ற காலம் முதல் தான் இறக்கும் காலம் வரை மாதம்தோறும் முறைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட தொகையைப் (Defined pension) பெறுவதற்கு வழிவகுப்பது பழைய ஓய்வூதிய திட்டம் மட்டுமே. மாறாக தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி ஒரு தொழிலாளி பணியில் இருக்கும் காலம் முழுவதும் சேகரிக்கப்படும் பணத்தின் பெரும்பகுதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. எக்காலத்திலும் நிலையான மதிப்பைக் கொண்டிருக்காத, மதிப்பிழக்கும் ஆபத்தை அதிகம் கொண்ட பங்குச்சந்தையினால் தன் வாழ்நாள் முழுவதும் சேகரித்த பணம் எப்போது பறிபோகுமோ என்ற அச்சத்துடன், எந்த வகையிலும் தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத மிகக் குறைந்த அளவிலான மாதாந்திர தொகையை ஓய்வூதியம் என்ற பெயரில் வாங்க வேண்டிய அவல நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர். பாதுகாப்புத்துறை ஊழியர்கள் (Defense Employees) இத்தகைய நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்ற காரணத்தினால் தான் அரசு அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்கிறது....

2022 மே 11 பதிவுக்கு மூன்று படங்கள்…
நமது மண்வாசம் இன்றைய ஒரு பொழுது ஒரு பதிவு பகுதியில் கடந்த நமது மண்வாசம் இதழில் 21ஆம் நூற்றாண்டுக்கான...
*மூதாதையர்கள்  சிந்திய**ரத்தம் முழுவதையும்**முதலில் அளந்தவன் அவனே !**உற்பத்திப் பொருட்களின்**ஓரத்தில் படிந்த**ரத்தத்தை பார்த்த**முதல் மனிதன் அவனே !**அவன்**மின்சாரத்தைப்**புத்தகங்களில்* *அடைத்து**மனிதனிடம்* *கொடுத்தான்**பிடித்தவர்கள்* *தலைகளில்**பல்புகள் எரிந்தன ..**பனித்துளிகளை* *எல்லாம்**சேகரித்து**பாலருவியாய்* *ஓடவிடும்**பொறுமை* *அவனுக்கிருந்தது…**அவனுக்கு**விரக்தி வந்திருந்தால்**விரக்திக்கு மருந்து**கிடைத்திருக்காது ….**பழைய சமூக அமைப்பிற்கு**சவப்பெட்டி ஒன்றை**தன் கையாலேயே**செய்து முடித்த* *பின்தான்**மானுடம் அவனது* *சவப்பெட்டியில்**மங்காத* *ஒளிவிளக்கை**ஏற்றிவைத்தது ..**அவனுக்கு**இரண்டு பெயர்கள்**ஓன்று மார்க்ஸ்**மற்றொன்று உண்மை !!*                – *கவிஞர் கந்தர்வன்* 
சினிமாத்தனமே இல்லாத அனுபவமாகஒரு போலீஸ் சினிமா…சோழ. நாகராஜன்எளிய மக்களின் மனங்களில் நீண்ட நெடுங்காலமாகப் பதிந்துவிட்ட போலீஸ் எனும் பெரும்...
ஆசிரியர்: சேது ஆனந்தன்செல்: 94420 22301 விலை: ரூ.175/-தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் திரு....
சி.அ.முருகன், திருவண்ணாமலை1)ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித் ஷாவின் கருத்து பற்றி…?அட்டைப்படக் கட்டுரையில் மதுக்கூர் இராமலிங்கம்...
எஸ்.வி. வேணுகோபாலன்அன்பர்கள் சிலர் அடுத்தவர்களிடம் நிறைய கேட்டுக் கொண்டிருப்பார்கள். துருவித் துருவிக் கூடக் கேட்பார்கள். ஆனால் தாங்கள் எதுவும்...
கணினித் துறையில் முதன்முதலாக நுழைந்தவர்களில் தலையானவர் அசீம் பிரேம்ஜி அவர்கள். அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தை நிறுவியவரும் அவரே, அப்பல்கலைக்கழகம்...
ம. மணிமாறன்எல்லாம் சரியாகத்தான் போகிறது. பழுதில்லை.. முன்ன பின்ன இல்லாமலா இருக்கும்? .. அப்படியே இருந்தாலும் சரியாகிவிடும்.. என்ன...
லோ. விக்னேஷ்கால்களால் பூமியை மிதித்துப் பிளக்க வேண்டுமென்று துடிப்பவள் போல் தரையை ஓங்கி அடித்து வேகமாக நடந்து கொண்டிருந்தாள்...
உமாமத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையின் கூறுகள் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்து சுமார் 3 வருடங்கள் ஆகிவிட்டன....
மதுக்கூர் இராமலிங்கம்உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.இது நாடாளுமன்ற...
கே. பாலபாரதி1995-களில் கேரளாவின் அரசுப் பள்ளிகளில் 4000 ஆசிரியர்கள் பணியிழந்தார்கள்.காரணம், எந்தக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத அரசுப் பள்ளிகளில்...
சமீபத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் திமுக தென்சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்...
மனிதன் அறிவியல் வளர்ச்சி.. முன்னேற்றம் என்ற பெயரில் எத்தனையோ வேண்டாதவற்றைச் செய்கிறான். அவற்றில் ஒன்று.. மிதமிஞ்சிய பிளாஸ்டிக் பயன்பாடு.பிளாஸ்டிக்...
ஜனநாயகத்தின் வெற்றி சிறுபான்மைச் சமூகத்தின் பாதுகாப்பில் உள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மைச்...
1 min read
கே.ராஜு- முன்னாள் தலைவர், மூட்டா # What is evaporation? .. என்பது கேள்வி. எவாபரேஷன் கடினமான வார்த்தை. அதோட ஸ்பெல்லிங்க சரியா...