September 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

Month: April 2022

1 min read
புதிதாக வர இருக்கும் கழிப்பறைகள் அழகியலுடன் வடிவமைக்கப்பட்டவை.. சிறந்த பொறியியல் நுணுக்கத்தோடு தயாரிக்கப்பட்டவை.. திடக் கழிவுகளிலிருந்து சாம்பலைத் தவிர...
1 min read
எங்கள் தோழரின் அடுத்த நூல் தயாராகி விட்டது. ச. மாடசாமி  தோழரின் முகநூல் பதிவுகளில் நாம் கற்க  ஒன்று இருந்து கொண்டே இருக்கும். ஒன்றை தெரியப்படுத்துவார்; ஒன்றை பகுத்துக் காட்டியிருப்பார்; மிக முக்கியமாக ஒன்றைப் புரிய வைத்திருப்பார். இந்த மூன்றும் பாடநூலுக்கு முக்கியம்.  முகநூலிலிருந்து நூலாக அச்சாகியிருப்பதால் இவை அடையப் போகும் கைகள் ஆயிரமாயிரம். முகநூலே புழக்கமில்லாத கைகள் அதில் முக்கியமானவை.  இந்நூல் நமக்கு ஒரு மருந்துச் சீட்டு போல ;  கனக்காத ஒரு பாட நூல் போல.  சமகாலத்தை மேலும் புரிந்து கொள்ள வாசிப்போம். வாங்கிப் பகிர்வோம்.  -சக.முத்துக்கண்ணன். பாரதி புத்தகாலயம். வாட்சப் தொடர்பு எண்: 9443066449
அசல் வாழ்க்கையிலிருந்துஒரு அசல் சினிமா அனுபவம்…சோழ. நாகராஜன்சினிமாத்தனம் எதுவும் இல்லாத சினிமா ஒன்று வந்தால் எப்படியிருக்கும்? அண்மையில் வெளியான...
மாணவர்கள் அகல்யா, மாரிஸ்வரி, கிஷோர் கண்ணன், யோகிதாஅருப்புக்கோட்டை வாசகர் வட்டம்சதாம் உசேன் இராக்கில் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கின்றார் என்று...
ஆசிரியர்: உமா மகேஸ்வரிவெளியீடு: சுவடு பதிப்பகம், சேலையூர், சென்னை- 73 விலை: ரூ.300/-9551065500, 9791916936அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியராகத் தமிழகத்தில்...
நிறப்பிரிகை 3எஸ்.வி. வேணுகோபாலன்நண்பர் ஓர் ஆங்கில வாக்கியம் அனுப்பிவைத்து அதைத் தமிழில் மொழி பெயர்த்து அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார்....
டாக்டர் ஜி. ராமானுஜம்கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு எல்லாம் ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டோ, புத்தகங்களைப் படித்தோ...
பிரியதர்ஷினி வலங்கைமான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ( திருவாரூர் மாவட்டம்) 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.கொரோனா விடுமுறை முடிந்து அனைத்துப்...
முதல்வர் ஸ்டாலின் உரைஇந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு சார்பில் தென் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு கோவை பாரதியார் பல்கலைக்...
மதுக்கூர் இராமலிங்கம்உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் பல்வேறு...
ஆடைக்குத் தீர்ப்பு சொல்லப்போய்நிர்வாணமாகிவிட்டதுநீதிமன்றம் காவி முதல்வர்காவி பிரதமர்அரசு அலுவலகங்களில்ஆன்மீகக் கூட்டங்கள்இதெல்லாம் எந்த சட்டத்தில்? தலைப்பாகைகூடாது என்றுசீக்கியரிடம் சொல்லிப்பாருங்கள்..
உடலின் பல பாகங்கள் பெருமளவு செயலிழந்த நிலையில், 2005-ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சி நிலையத்துக்கு, சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்டார்...
கோவிலில் சாமிகள்குடியிருக்கின்றனவோ என்னவோவெளவால்களோடு சேர்த்துஅத்தனை சாதிகளும் குடியிருக்கின்றன சாதி இரண்டொழிய வேறில்லைஎன்று பாடிய மூதாட்டி இன்றிருந்திருந்தால்சாதி இரண்டாயிரமொழிய வேறில்லைஎன்று...

புதிய ஆசிரியன் இதழ் 10-ம் தேதிக்குள் கிடைக்கவில்லையெனில் நிர்வாக ஆசிரியருக்கு ஃபோன் செய்யுங்கள் (94430 37138). இதழை நீங்கள்...
சிதம்பரம் இரவிச்சந்திரன்60 முதல் 130 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூங்கில் பூக்கும். ஒரே நேரத்தில் கூட்டமாக வளரும் இவை...
உமாஒன்றரை வருடங்கள் கழித்து புதிதாக குழந்தைகள் பள்ளிச் சூழலுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் தமிழகம் முழுமைக்கும் இயல்பான கல்விச்சூழல்...
வேண்டாத கேள்விகளை விட்டுத் தள்ளுங்க;இப்ப நான்கு மாநிலத் தேர்தல் முடிவைக் கொண்டாடுங்க.. உ.பி-யிலே பொங்கியெழுந்துச்சே விவசாயிங்க போராட்டம்;வேடிக்கை மட்டும்...
உக்ரைன், ரஷ்யா நாடுகளிடையிலான போர் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. போர் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையிலேதான் என்றாலும் போருக்குப் பின்னணியில் அனைத்தையும்...
1 min read
# மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி ஏற்பாடு செய்கிறார். நிகழ்ச்சியில் மோடிதான் பேசுவாரே தவிர, வேறு...
1 min read
கே.ராஜு- முன்னாள் தலைவர், மூட்டா    # உலகை வேகமாகச் சுற்றி வந்தவர் யார்.. என்று சில வருடங்களுக்கு...
1 min read
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்  2018-ம் ஆண்டில் சுகாதாரம் குறித்த ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள பீகிங் சென்றிருந்தார். நாம் பயன்படுத்தி வரும் ஃபிளஷ்-அவுட் கழிப்பறைகளை மீட்டுருவாக்கம் செய்து சுகாதாரத்தில் மேம்பட்ட கழிப்பறைகளை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது அவரது பயணத்தின் முக்கிய நோக்கம். இந்தக் கண்டுபிடிப்பு துப்புரவுச் சூழலை வேகமாகப் பரவலாக்கி வளரும் நாடுகளிலுள்ள குழந்தைகளை வளர்ச்சிக் குறைபாடுகளிலிருந்து காப்பாற்றி புத்துயிர் அளிக்கவல்லது என்கிறார் பில் கேட்ஸ். இந்தக் குழந்தைகள் பல இடங்களில் மனித மலம் உள்ள திறந்த வெளிகளில் விளையாடி ஊட்டச்சத்துக் குறைபாடு, வளர்ச்சிச் குன்றல் (stunting)  போன்ற பாதிப்புகளை வரவழைத்துக் கொள்வதற்கு ஒரு தீர்வாக புதிய கழிப்பறைகள் வர இருக்கின்றன. 200 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்து, கடந்த ஏழு வருடங்களாக பில் கேட்ஸ் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (பிஎம்ஜிஎஃப்) துப்புரவுச் சூழலை கணிசமாக மேம்படுத்தக் கூடிய புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய முயற்சி செய்துவருகிறது. இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் புதிய கழிப்பறை பரிசோதனைகளுக்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் மேலும் 200 மில்லியன் டாலர்களை அந்த அறக்கட்டளை ஒதுக்கீடு செய்திருக்கிறது. உலகில் 5 வயதுக்குட்பட்ட 22.2 சத குழந்தைகள்   (151 மில்லியன்) வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ளவை என ஐக்கியநாடுகள் சபையின் உலகநாடுகள் குழந்தைநல அவசர ஏற்பாட்டு நிதி (யுனிசெஃப்) 2017-ம் ஆண்டில் அறிவித்தது. வளரும் நாடுகளில் துப்புரவின்மை காரணமாக ஓர் ஆண்டில் உடல்நலப் பாதுகாப்பிற்காக 260 பில்லியன் டாலர்கள் செலவிட வேண்டிய தேவை இருப்பதாக உலக வங்கி கூறுகிறது. சுகாதார மேம்பாட்டை பரவலாக்குவது ஒரு சவால் மிகுந்த பணி என்கிறார் பில் கேட்ஸ். கணினி வரலாற்றின் தொடக்கத்தில் பெரிய இடத்தை அடைத்துக் கொண்டு இயங்கிவந்த தலைமைக் கணிப்பொறி (mainframe computer)  நாம் தற்போது பயன்படுத்தும் சிறிய அளவிலான தனிப்பட்டவர்களுக்கான கணினியாக (personal computer)  மாறி வந்ததற்கு இணையான சவால் அது என்கிறார் அவர். முதலில் தலைமைக் கணிப்பொறியை பணபலம் கொண்ட அரசும் பெரிய நிறுவனங்களும் மட்டுமே பயன்படுத்தும் வசதி பெற்றிருந்தன. இன்று சுமாரான வருமானம் உள்ளவரும் வாங்கும் செலிவில் தனிப்பட்டவர்களுக்கான கணினிகள் சந்தைக்கு வந்துவிடவில்லையா?...
1 min read
*1) துறைச் சங்க மாநில நிர்வாகி என்பதாலா?* *2) பொதுச் சங்க மாவட்ட நிர்வாகி எனபதாலா?* *இதைத் தாண்டி இந்த தேசத்தின் குடிமகன் என்ற அடிப்படையில் நடப்புகள் என்னை இப்போராட்டத்தில் பங்கேற்க தள்ளியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.* *நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நான் எனது நிர்ணயிக்கப்பட்ட வருமானத்திற்குள் திட்டமிட்டு வாழ வேண்டிய நிலையில் வாழ்கிறேன்.* *எனக்கு நிர்ணயிக்கப்பட்ட காலமுறை ஊதியத்தில் ஊதியம் பெறுகிறேன்,பழைய பென்சன் திட்டத்தின்படி ஓய்வுக்கு பிறகும் ஓய்வூதியம் பெறுவேன் என நம்பிக்கொண்டிருக்கிறேன்.* *ஆனால் என்னால் பொருளாதாரச் சுமையை ஈடுகொடுப்பதற்கு கடும் போராட்டத்தைச் செய்ய வேண்டியுள்ளது.* *இந்நிலையில் காலிப்பணியிடங்களை நிரந்தர ஏற்பாட்டில் பூர்த்தி செய்ய முன் வராத நிலையில் இலட்சகணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்களே அதில் ஒருவராக எனது எதிர்கால சந்ததியர் இனைய மாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதம் ஏதேனும் உண்டா.* *அத்துக் கூலியில் அஞ்சுக்கும் பத்துக்கும் தாம் படித்த படிப்பிற்கு தொடர்பில்லாத பணிகளை 24 மணி நேரமும் செய்ய முன்வரும் இளைஞர்கள் பட்டாளத்தை பார்க்கும்போது மனசு வலிக்கிறது.பதைபதைக்கிறது.* *மாதம் ஒருமுறை ஏற்றப்படும் எரிவாயு விலையும் தினந்தோறும் ஏறும் பெட்ரோல் டீசல் விலையும் விலைவாசியை சாமானியனிடமிருந்து எட்டாத தூரத்திற்கு இட்டுச் சென்ற பிறகு அன்றாடம் பல இலட்சக்கணக்கான மக்களின் உணவும் உறைவிடமும் கேள்விக்குறியாகும் நிலையில் நான் மட்டும் கிடைத்தவரை உண்டு கொழுத்து காலம் தள்ளிவிடலாம் என நினைக்க மனம் குற்ற உணர்ச்சியில் குன்றுகிறது.* *விவசாயமும் விவசாயியையும் முழுமையாக அழித்தொழித்த பின்பு காகிதங்களையா திங்க முடியும்.*-? *எனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஊதிய மாற்ற மற்றும் அகவிலைபடி நிலுவையையே அரசு என்னிடமிருந்து பறித்துவிட்டது. பிசாத்து இரண்டு நாள் ஊதியம் எம்மாத்திரம்…ஏதோ வியாதி வெக்கைக்கு செலவிட்டதாக நினைத்துக் கொள்வேன்.*  *என் தேசம் காக்கும்,கருத்தாலும்,கரத்தாலும் உழைக்கும் இலட்சக்கணக்கானதொழிலாளர் கோரிக்கையைப் போற்றும்  போராட்டத்தில் பெருமையுடன் பங்கு கொள்வேன். என்னோடு இணைபவர்களுக்கு வந்தனம்,வாழ்த்துக்கள்.*  *ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால் நீயும் என் தோழனே என்ற சே வின் வார்த்தைகளோடு அழைக்கிறேன்.*  *ஒன்றுபடுவோம்,வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுவோம்,தேசத்தையும் மக்களையும் காப்போம்.* ...
1 min read
உடலின் பல பாகங்கள் பெருமளவு செயலிழந்த நிலையில், 2005-ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சி நிலையத்துக்கு, சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்டார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங்.”இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?” எனக் கேட்டார்கள். “முன்பைவிட மிகவும் சுவையாகவும், சவால்கள் நிறைந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது”என்றார் ஹாக்கிங். “இந்த உடல் நிலையுடன் உங்களால் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா?”என்று அடுத்த கேள்வி தயக்கத்தோடு கேட்கப்பட்டது. அதற்கு ஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன பதில்: “எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன ஆற்றல் உங்களிடம் மீதமிருக்கிறது என்பதே வாழ்க்கையில் முக்கியம்!”
1 min read
1990- களின் தொடக்கத்தில் பாஜக ஆதரவுடன் வி.பி. சிங் பிரதமர் ஆக இருந்தபோது பயங்கரவாதிகளின் மிரட்டலால் காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியே விரட்டப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்தவர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பட்ட துன்பங்களை நினைவுபடுத்தி முஸ்லிம்கள் மேல் வெறுப்பை விசிறி விட எடுக்கப்பட்ட படம்தான் “காஷ்மீர் ஃபைல்ஸ்”.  பாஜக ஆளும் மாநிலங்களில் திரையிடப்பட்டு இந்துத்வா அரசியல் பரப்பப்படுகிறது. காங்கிரஸ் அரசுகள் காஷ்மீர் பண்டிதர்களைக் காப்பாற்ற ஒன்றும் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம். வாஜ்பாய் அரசோ மோடி அரசோ அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்தி இருக்கலாமே.. ஏன் செய்யவில்லை? 
1 min read
உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் *மதுரை* தான் என்று ஆய்வாளர்கள் பிரமிக்கிறார்கள். நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை “The World’s only living civilization” என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் “The Story of India” ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்....
துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்த இல்க்கர் ஆயசி, டாட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் அவர்மீது மதரீதியான பாசிசத் தாக்குதலால் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.  மறுப்பை வெளியிட்டுள்ள ஆயசி, “நான் ஒரு தொழில்முறையாளன். என்னால் இந்த மோசமான சூழலில் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது மரியாதைக்குரிய செயலாகாது என்பதால் இதை ஏற்கவில்லை” என்றார்.  இந்த நாட்டை யாராவது காப்பாற்ற முடியுமா? ஆ.வி. வலைபாயுதே பகுதியில் இருந்து..