September 29, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

Month: March 2022

சோழ. நாகராஜன்இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் காலமாகிவிட்டார்.செய்தியை அறிந்ததும் நடிகர் திலகம் சிவாஜியின் மகன் ராம்குமார் இப்படிச் சொன்னார்...
மாணவர்கள் அகல்யா, முகிலன், கிஷோர், யோகிதாஅருப்புக்கோட்டை வாசகர் வட்டம்1) நாட்டில் பூஜைகளும் கோவில்களை நோக்கிய பாதயாத்திரைகளும் கும்பாபிஷேகங்களும் பல...
நீரா சந்தோக்மோடியின் ‘கலப்பின’ மாடல் பூகோளத்தின் அடிப்படையிலும் தத்துவார்த்த அடிப்படையிலும் நாட்டின் அரசியல் வெளியை மாற்றிட விரும்புகிறது. மசூதிகளை...
சிதம்பரம் இரவிச்சந்திரன்கொளுத்தும் வெய்யிலில் நா வறண்டு தாகம் உயிர் போகிறது என்றால் நாம் என்ன செய்வோம்? திறந்தவெளியில் கதிரவனின்...
ஆசிரியர் : பிரகஸ்பதி, 54, பூரம் பிரகாசம் சாலை,ராயப்பேட்டை, சென்னை-14 விலை: ரூ.500/-சங்கக் கவிதைகள் சின்னஞ்சிறு பாடல்களில் பண்டைத்...
பேரா. ஆர்.சந்திராகடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, மார்ச் மாதம் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1857-ம்...
ஓ,பெண்ணே! பெண்ணே!பூமி என்றார் உனை, அவர்தம் தொல்லை நீ பொறுத்திடவேநதி என்றார் உனை, அவர்தம் பாவம் உன்னில் கரைத்திடவேமொழி...
கி.ரமேஷ்புத்தகங்கள் பற்றி நான் ஒன்றும் புதிதாகச் சொல்லி விடப் போவதில்லை. சிறு வயதிலிருந்து நான் பெற்ற அந்த இன்பத்தைப்...
விக்னேஷ்மதிய வெயில் கொஞ்சம் தணிந்திருந்தது. பல நாட்களாக திறக்கப்படாத கம்பெனியின் நிழல் அவளிடம் போவதா, இல்லையா என்று எண்ணி...
தியான மடம் …சுய ஆய்வுக்குரியதியான மடம்சவரக்கடை. ஆளற்ற நேரம் பார்த்து,நாற்காலியில் சாய்ந்துகண்களை மூடிக்கொண்டேன் புதராய் மண்டிய தாடியில்,சோப்புநுரை பரவினார்சவரத்தொழிலாளி....
மதுக்கூர் இராமலிங்கம்தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக...
சிதம்பரம் இரவிச்சந்திரன்கொளுத்தும் வெய்யிலில் நா வறண்டு தாகம் உயிர் போகிறது என்றால் நாம் என்ன செய்வோம்? திறந்தவெளியில் கதிரவனின்...
1 min read
 பாஜக வெல்ல முடியாத சக்தி அல்ல ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர்த்து 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதால், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த வெற்றி உறுதியாகி  விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை மாநில அளவிலான பிரச்சனைகளை முன்வைத்து மக்கள் தீர்ப்பளிக்கிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற  உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் வாக்கு சதவீதத்தில் 50 விழுக்காட்டைத் தாண்டவில்லை. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 254 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால் கடந்த சட்டப்பேரவையில் அக்கட்சி 312  இடங்களைக் கொண்டிருந்தது. தற்போது 58 இடங்களை இழந்துள்ளது. ஆனால் அம்மாநிலத்தில் அகிலேஷ் தலைமையிலான முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கடந்த தேர்தலில் 47 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. இந்தத் தேர்தலில் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் இதர மதச்சார்பற்ற சக்திகள் சமாஜ்வாதி கூட்டணியில் இடம்பெற்றிருந்தால் இன்று பாஜக அம்மாநிலத்தில் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர்ந்திருக்கும். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்கு 51.09 விழுக்காடாகும். எனவே வரும் மக்களவைத் தேர்தலில்  மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை வீழ்த்தமுடியும். மதச்சார்பற்ற சக்திகளின் பிளவை பாஜக பயன்படுத்திக் கொண்டு தன்னை தக்க வைத்துக்கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.    உத்தரப்பிரதேச வெற்றி பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளுக்கும் பாஜக கொள்கைகளுக்கும்  கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறுகிறார்கள். அப்படியே வைத்துக் கொண்டாலும் பஞ்சாபில் ஏன் வெற்றி கிடைக்கவில்லை? கோவாவில் தட்டுத் தடுமாறித்தான் பாஜக பிழைத்திருக்கிறது?. இந்த கதி ஏற்பட என்ன  காரணம்? எனவே 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒன்றிய பாஜக அரசு மீதான மதிப்பீடு அடிப்படையிலும் எதிர்க்கட்சிகள் அமைக்க உள்ள கூட்டணியைப் பொறுத்தும்தான் அமையும். இருப்பினும் மாநிலத் தேர்தல் வெற்றியை வைத்து ஒரு பதற்றத்தை உருவாக்குவது உளவியல் ரீதியாக மக்களைச் சலவை செய்யும் தந்திரமான முயற்சியைத் தவிர வேறு இல்லை.  பாஜக வெல்லமுடியாத சக்தி  அல்ல. அக்கட்சியின் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகவும் பெருநிறுவன ஆதிக்கத்திற்கு எதிராகவும் அதிகரித்துவரும் பாசிச எதேச்சதிகாரத்திற்கு எதிராகவும் போராட்டங்களை இருமடங்கு வீச்சில் மேற்கொள்ளவேண்டியது மதச்சார்பற்ற சக்திகளின் கடமையாகும். -தீக்கதிர் தலையங்கம் 12 மார்ச்...
1 min read
கே.ராஜு- முன்னாள் தலைவர், மூட்டா     # 1950-களில் நான் திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒன்பதாவது...
குஜராத்தில் ஒரு ரயில் பயணத்தில் இளம் பெண் ஒருத்தி தொடர்ந்து மோடியை பாராட்டி பேசிக்கொண்டு இருந்தாள்*… *மோடி அப்படி , மோடி இப்படி , மோடி அதை செய்தார், மோடி இதை செய்தார் என்று புகழ்ந்து கொண்டே வந்தாள்.* *சிறிது நேரம் அமைதியாக இதை எதிரில் அமர்ந்து  கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு பெண்மணி…* *மோடி மாதிரியே ஒரு கணவன் உனக்கு அமைய இறைவன் அருள் புரியட்டும்”  என்று வாழ்த்தினார்*…* *அவ்வளவு தான்….* *அந்த இளம் பெண் பயணம் முடியும் வரை வாயை திறக்கவே இல்லை…*
1 min read
# மோடி : தேசத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது.. இனி எல்லா மாநிலங்களிலும் இரட்டை எஞ்சின் ஆட்சிதான்.. புதிய இந்தியா பிறந்துவிட்டது..  உங்கள் வாழ்க்கை  இனி  பிரகாசமாக இருக்கும்… சப்கா சாத்.. சப்கா விகாஸ்! மக்கள் :  ஐயோ.. ஆளை  விடுங்களேன் ! .. என்று கதறிக் கொண்டே மக்கள் சிதறி ஓடுகின்றனர்.  ...
1 min read
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சன்னி வர்மாவுக்கு அளித்த நேர்காணலில் கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தொடர்ச்சியாக மாநில அரசுகளில் செலவழிக்கும் சக்தியின் மீது தனது கட்டுப்பாட்டை அதிகரித்துவருகிற போக்கு  பெரிய அளவிற்கு திறன் குறைபாட்டை உருவாக்குகிறது எனத் தெரிவித்தார்.  ஒன்றிய மாநில நிதி உறவுகள் குறித்து:- ஒன்றிய மாநில நிதி உறவுகளின் வரலாற்றை முதலில் கூறுகிறேன், டெல்லியிலிருந்து ஆள்பவர்களின் கூட்டாட்சிக்கு எதிரான, மாநிலங்களுக்கு எதிரான, சர்வாதிகார அணுகுமுறையே இப்பிரச்சனையின் தொடக்கம். அரசியலைப் பொறுத்தவரை ஒருவரின் நிலைப்பாடு என்பது அவர் எந்தப் பக்கம் அமர்ந்திருக்கிறார் என்பதை பொறுத்தது என்று ஒரு பழமொழி உண்டு. இதன் அடிப்படையில் பார்ப்போமேயானால் ஒரு பிரச்சினையில் உங்களது நிலைப்பாடு நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறீர்களா, சட்டமன்றத்தில் அமர்ந்து இருக்கிறீர்களா அல்லது வீதியில் நின்றுகொண்டு பேசுகிறீர்களா என்பதை பொறுத்தது.  அந்த பழமொழிக்கு மிக சிறந்த உதாரணமாக விளங்குபவர் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். ஏனெனில் அவர் முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமைகளுக்கான வலிமையான குரலாக விளங்கினார், சில சமயங்களில் அந்த விஷயத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மிஞ்சும் அளவிற்கு அவரது செயல்பாடு இருந்தது. ஆனால் அவர் பிரதமரானதும் அவரது செயல்பாடுகள் தலைகீழாக மாறியது. நிதி, நிர்வாகம், மாநில அரசுகளுக்கு அநீதி இழைக்கப்படும் ஒன்றிய அரசின் திட்டங்கள் என அனைத்து வகையிலும் மாநிலங்களின் உரிமைகளை முற்றிலும் பறிக்கும் அளவிற்கு இதவிட பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை. இதுவரையிலான இந்திய வரலாற்றில் இதுவே மிக மோசமான சர்வாதிகாரத் தன்மை மிக்க அதிகார பறிப்பு நடவடிக்கைகள் எனக் கூறலாம்.  பதிமூன்று ஆண்டுகள் குஜராத் முதல்வராக அவர் பதவிவகித்தபோது பேசியவற்றுக்கு மிக நேரடியாகவே தற்போது முற்றிலும் முரண்பட்டு செயல்படுகிறார்.  அடிப்படையான களசூழல் இதுதான்  அவர்கள் மெல்ல மெல்ல நயவஞ்சகமான முறையில் மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் ஊடுருவினர். அவர்கள் தொடங்கிய இடம் ஒன்றிய அரசால் நிதி அளிக்கப்படும் திட்டங்கள். நேரடி மானியம் வழங்குதல் மற்றும் ஒன்றிய அரசு  திட்டங்களுக்கு ரூபாய் 4-6 கோடி அளவிற்கு நிதியளித்தலை தாறுமாறாக அதிகரித்தனர். இதனை அவர்களுக்கு சாதகமாக விளம்பரப்படுத்திக் கொள்ளவும் தவறவில்லை. ஆனால் அவர்களிடம் விளம்பரம் செய்வதில் புத்திசாலித்தனம் இருக்கும் அதே சமயம் தார்மீக அறம் மிகவும் குறைவாகவே உள்ளது.  உதாரணமாக முதலில் அவர்கள் ஒரு திட்டத்தை அறிவித்து அதற்கு ஒன்றிய அரசு 70 சதவீதம் நிதி அளிக்கும் மாநிலங்கள் 30% நிதி பங்களிக்க வேண்டும் என்பார்கள் அத்திட்டத்திற்கு பிரதமரின் படத்தைப் போட்டு விளம்பரம் செய்வார்கள். அடுத்த ஆண்டு ஒன்றிய அரசு 50% நிதியும் மாநில அரசு 50 சதவீத நிதியை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பார்கள், மூன்றாவது ஆண்டு அவர்கள் 20 சதவீதம் மட்டுமே நிதி அளிப்பார்கள் மாநிலம் 80 சதவீதம் அத்திட்டத்திற்கு செலவு செய்யவேண்டும் என்பார்கள்.  இறுதியாக நான்காவது ஆண்டு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்காது ஆனால் மாநிலங்கள் தாமாகவே திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்கிற நிலைக்கு கொண்டு வருவார்கள்.  திட்டம் பிரதமரின் பெயரில் இருக்கும். இது அடுத்தவரின் செலவில் தன்னை விளம்பரம் செய்து கொள்ளும் விளையாட்டு.   அடுத்ததாக, பாலங்கள், துறைமுகங்கள், சாலைகள், மாநில எல்லைகள், கல்வி, சுகாதாரம், தேர்வுகள் மற்றும் கூட்டுறவு துறை ஆகியவற்றை நிர்வகிப்பது உண்மையில் 100% மாநில அரசுக்குரியது.  இவற்றில் சில அரசியல் அமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. எனவே ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் மேற்கொள்ளாமல், எந்த குழுவும் அமைக்காமல் இத்துறைகளில் சட்டம் இயற்றுகிறது. இதன்மூலம் அது தங்களுக்கு தொடர்பே இல்லாத மாநில அரசுக்கு உரிமையுள்ள துறைகளை கட்டுப்படுத்துகிறது. இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் ஜனநாயகத்தின் தவிர்க்கமுடியாத கொள்கை,  ஒரு நிர்வாக அமைப்பு மக்களுக்கு எவ்வளவு நெருக்கமானதாக இருக்கிறதோ அவ்வளவு பொறுப்புள்ளதாக இருக்கும் என்பதாகும்.   எனவே முடிவெடுக்கும் அதிகாரம் மக்களுக்கு மிக அருகாமையில் இருக்கும்போது நிர்வாகம் பொறுப்பு உள்ளதாகவும் நல்ல விளைவுகளை உருவாக்கக் கூடிய வாய்ப்பும் அதிகரிக்கும் என்பது அடிப்படை கோட்பாடு. ஒன்றிய அரசு தொடர்ந்து மாநிலங்களிடம் இருந்தும் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தும் அதிகாரங்களை தங்கள் வசம் எடுத்துக் கொள்ளும் போது இயல்பாகவே பல வழிகளில் சிக்கல்களை உருவாக்குகிறது. மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பங்களிப்பு இன்றி எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்த முடியாது. ஒன்றிய அரசிடம் போதுமான பணியாளர்கள் இல்லை, போதுமான தரவுகள் இல்லை, அவர்களுக்கு போதுமான அனுபவம் இல்லை.   அனைத்து தணிக்கை அறிக்கைகளையும் பாருங்கள், ஸ்வச் பாரத் கிரிஷி கல்யாண் என ஒன்றிய அரசின் திட்டங்களில் பணம் வீணாகிறது. இத் திட்டத்திற்கான நிதியைக் கொண்டு கழிப்பறைகள் கட்டப்படுகிறது ,ஆனால் அங்கு தண்ணீர் வசதி இல்லை. ஏனெனில், டெல்லியிலிருந்து கொண்டு நீங்கள் கழிப்பறைக்கு தண்ணீர் விடும் வேலையை கண்காணிக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் தண்ணீர் விநியோகம் மாநில அரசினுடையது கூட இல்லை,  உள்ளாட்சி அமைப்பின் அதிகாரத்துக்கு உட்பட்டது. எனவே எத்தனை கழிப்பறைகள் கட்டினாலும் தண்ணீர் இல்லை என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் செலவழித்த பணம் வீணாகிவிட்டது.    Source: Indian Express