August 5, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

Month: January 2022

1 min read
கடந்த சில நாட்களில் வந்த இரண்டு செய்திகள் பெரிதும் கவனம் பெறாமல் போயின , ஒன்று திவாலாகி (bankrupt) ஆகி விட்ட வீடியோகான் நிறுவனத்தை விற்பது  குறித்தது. மற்றொன்று மத்திய பொதுத்துறை நிறுவனமான CEL ( Central Electronics Limited ) ஐ தனியார் மயமாக்குவது குறித்தது .  வீடியோக்கான் நிறுவனம் சரியாக நடத்த முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வந்திருக்கிறது .தற்சமயம் பல்வேறு வங்கிகளிடம் 65,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி வைத்திருக்கிறது . கடனை கட்ட முடியாமல் வீடியோகான் திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது . அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்த நிறுவனத்தை விற்று அதில் வரும் பணத்தை கடன் வழங்கிய வங்கிகளுக்கு பிரித்து அளிக்க வேண்டும் .  வீடியோகான் நிறுவனத்தை  தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT ) Twin Star technologies எனும் நிறுவனத்துக்கு விற்பதாக முடிவு செய்கிறது  65  ஆயிரம் கோடி கடன் வாங்கிய ஒரு நிறுவனத்தை வெறும் 3 ஆயிரம் கோடிக்கு விற்கலாம் என்று NCLT முடிவு செய்கிறது .  வங்கிகள் இழக்கும் ஒவ்வொரு ரூபாயும் எப்படியோ சுற்றி வளைத்து பொது மக்கள் தலையில்தான் விடியும், வரிகளாக....
1 min read
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒன்றாக ஞெகிழி ஒழிப்பைக் கையில் எடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஞெகிழிப் பைக்கு மாற்றாகத் துணிப்பையைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தும் வகையில் ‘மஞ்சப் பை இயக்கம்’ திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த முன்னோடி திட்டம் தொடங்கப்படுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ‘மஞ்சள் பை’ இயக்கத்தைத் தொடங்கியவர் மதுரையைச் சேர்ந்த கௌரி. இவரும் இவருடைய கணவர் கிருஷ்ணனும் சேர்ந்து இதைச் செயல்படுத்திவருகிறார்கள். இயற்கைக்குத் திரும்புவோம்! கௌரி, கிருஷ்ணன் இருவரும் சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவர்கள். 2014இல் இவர்களுடைய மகளுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சில நேரம் மூச்சிரைப்பு அதிகமானது. அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது ஞெகிழியை எரிப்பதால் உருவாகும் நச்சு காற்றில் கலப்பது தெரியவந்தது. காற்று மாசு குழந்தைகளை மட்டுமல்லாமல், பெரியோரையும் பாலூட்டும் தாய்மார்களையும் அதிகமாகப் பாதிப்பதாகத் தெரிந்துகொண்டார்கள். அதன் பின் ஞெகிழியின் சீர்கேடுகள் குறித்த தேடலில் இறங்கினார்கள். அதிக ஞெகிழி பயன்பாட்டால் காற்று மட்டுமல்ல, மண்ணும் மலடாகிறது; அவை மக்குவதும் இல்லை என்பது புரிய, முதல்கட்டமாக ஞெகிழிப் பை பயன்பாட்டைக் குறைப்பது என முடிவெடுத்தனர். அவற்றுக்கு மாற்றாகத் துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்க நினைத்தவர்கள், சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ‘ஐந்திணை விழா’வில் ஞெகிழி பயன்பாட்டின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள். பிறகு முதல்கட்டமாக 200 துணிப்பைகளைத் தைத்து வாங்கி விற்பனை செய்தனர். “இதற்காகவே என் வேலையை விட்டுவிட்டேன். 2014 இறுதியில் இந்தத் துணிப்பை திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினோம். மதுரையில் துணிப்பை உற்பத்தியாளர்கள் அதிகம் என்பதால் சென்னையிலிருந்து மதுரைக்குக் குடியேறினோம். துணிப்பைகள் நீடித்து உழைக்கும், அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம், எல்லாவற்றுக்கும் மேலாக மக்கும் தன்மை கொண்டவை என்பதைத்தான் மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்” என்று சொல்லும் கௌரி, ‘யெல்லோ பேக்’ (theyellowbag.org) அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர்.  “நாங்கள் எடுத்து வைத்திருப்பது மிகச் சிறிய அடிதான். மாற்றவும் சீர்படுத்தவும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. சானிட்டரி நாப்கின்களுக்குப் பதிலாக துணியிலான நாப்கின்களைப் பயன்படுத்தலாம். மக்காத குப்பைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். கூடுமானவரைக்கும் இயற்கைக்கு உகந்த பொருட்களையே பயன்படுத்தலாம். இவற்றில் பெண்களின் பங்களிப்பு அவசியம். வீட்டைத் தாண்டி வெளியே வந்தால்தான் பார்வையும் சிந்தனையும் விசாலமடையும். அது காலத்தின் கட்டாயம்” என்கிறார் கௌரி. (2022 ஜனவரி 2 தமிழ் இந்து “பெண் இன்று” இணைப்பில் பிரதிமா எழுதிய கட்டுரையிலிருந்து)
1 min read
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் எந்தளவுக்கு ஊடுருவி வேலை செய்து வருகிறார்கள் பாருங்கள்…. பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் விளக்குகிறார் கடந்த அதிமுக ஆட்சி மொத்தமாகவே RSS ஆட்சியாகவே நடந்திருக்கிறது. நான் கடந்த ஆறு மாதமாக நிர்வாகத்துக்குள் இருந்து வரும் நிலையில் அதை உணர்கிறேன். அவர்களின் பிடியில் இருந்து மீள்வதற்கு படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம். நாங்களும் மீளலாம் என்று என்னென்னமோ செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் குழிகளை வெட்டிக் கொண்டே இருக்கிறான். ஒரு ஸ்டெப் எடுத்து வச்சோம்னா அடுத்து எங்க குழிவெட்டிருக்கான்னு தெரியமாட்டேங்குது. இந்த பத்து வருடங்களில் அவர்களின் வலை அந்த அளவுக்கு நுட்பமாகவும், ஆழமாகவும் விரிக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்க்க அது தெரிவதே இல்லை. அந்த வலையை அறுக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. ஆனால் அது சாமானியமல்ல. ஏன் அப்படினு கேட்டீங்கன்னா, நமக்குனு இருக்கும் அதிகாரம் ரொம்பக் குறைவு. இப்ப தமிழ்நாட்டுல மட்டும் நமக்கு அதிகாரம் ஓரளவுக்கு இருக்கு. ஆனா, இந்த அதிகாரத்தின் இன்னொரு பகுதி, பல அங்கங்கள் அவர்களிடம் இருக்கிறது, டெல்லியில் செகரட்டரியேட் என்று ஒன்று இருக்கிறது. அவர்களோடு சேர்ந்துதான் நாம் இத்தனை வேலைகளை செய்ய வேண்டியிருக்கு. நாம் இங்கே வேலை செய்யும்போது அவர்கள் அங்கிருந்து போடக் கூடிய உத்தரவுகள், திட்டங்களை எல்லாம் எதிர்த்து இடைவிடாது போராடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. எல்லா உயர் கல்வி நிறுவனங்களையும் அவர்கள் கைப்பற்றிக்கொண்டுவிட்டார்கள், அதுமட்டுமல்ல… முன்பெல்லாம் அவர்களின் கொள்கைகளை மறைமுகமாக திணிப்பதாகக் கருதினோம். இப்போது மறைமுகமெல்லாம் கிடையாது, ஓப்பனா,நேரடியா இதைத்தான் செய்யணும்னு சொல்கிறார்கள். ரிவ்யூக்கு வர்ற அதிகாரிகளாக யாரை அனுப்புகிறார்கள்னு கேட்டீங்கன்னா சாஸ்திரிகளையும் மேஸ்திரிகளையும் அனுப்பறாங்க. அவர்கள் என்ன கேட்கிறாங்கன்னா, ‘பெரியார் பத்தியும் தமிழ் பத்தியும் எதுக்கு ஆராய்ச்சி பண்றீங்க? இதெல்லாம் நாட்டுக்குத் தேவையா? அர்த்த சாஸ்திரம் பத்தி ரிசர்ச் பண்ணுங்கனு நேரடியாம நம்ம ஊருக்கே வந்து சொல்றாங்க. அந்த அளவுக்கு மோசமாகிக் கொண்டிருக்கிறது. இப்படி பல்கலைக்கழகங்களில் வேர் விட முயற்சி செய்கிறார்கள், பாடத் திட்டங்களில் வேர் விட முயற்சி செய்கிறார்கள். நிதித் திட்டங்களில் வேர் விட முயற்சி செய்கிறார்கள். இப்படி பல தளங்களில் அவர்கள் வேர் விட முயற்சி செய்கிறார்கள்.  -பேராசிரியர் ஜெயரஞ்சன், ( தமுமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் ஜெ. ஹாஜாகனி அவர்களின் ‘சூடு’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையில்)
1 min read
எனது வாழ்க்கைப் பயணத்தில் நான் ரசித்த அனுபவங்கள்.. நகைச்சுவைத் துணுக்குகள் (சில நான் கூறியவை, வேறு சில மற்றவர்...
மதுக்கூர் இராமலிங்கம்சைவ உணவு சமைப்பது எப்படி என்ற மாநாட்டிற்கு ஓநாய் தலைமையேற்பது போல, அமெரிக்கா தலைமையில் ஜனநாயகத்திற்கான உச்சி...
டாக்டர் ஜி. ராமானுஜம்ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி ஸ்வீட் ஸ்டால் வைத்திருப்பார். செந்தில் அங்கு வேலைக்குச் சேர்ந்திருப்பார். சுத்தப்படுத்துவதாக நினைத்து...
எஸ்.வி. வேணுகோபாலன்எல்லோரது வாழ்க்கையிலும் உறவுகளோடு கொஞ்சம் சிறிதாகவோ, பெரிதாகவோ உரசல், விரிசல் இருக்கக் கூடும். ’ஊருண்டு பேருண்டு உறவுண்டு...
பேரா.பொ.ராஜமாணிக்கம்தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ, ஒன்றிய அரசு ஜூலை 2020 முதல் அமல்படுத்த தீவிரமாக முனைப்பு எடுத்து வருகிறது....
பள்ளி மாணவர்களிடம் பாடநூல்களுக்கு வெளியே மற்ற நூல்களையும் வாசிக்கும் வழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காகப் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் எடுத்துவரும்...
பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட தேர்தல் காலத்தின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவேண்டும் என்று...
செல்வகதிரவன்மதுரை-இராமேஸ்வரம் நான்கு வழிப்பாதை முழுமையாக முடிவடைந்து விட்டது. பேருந்துகள், வாடகை ஊர்திகள், இருசக்கர வாகனங்கள் இத்தியாதிகளை புதிய சாலையைப்...
ஜோல்னா ஜவஹர்வெளியீடு: பாரதி புத்தகாலயம்- பக்கம்: 112-விலை: ரூ.100/-புத்தகம் வாங்கியே குவிப்போருக்கு அதிலிருந்து விடுதலை கிடைப்பது அரிது. எங்கே...
ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் நலன் பேணும் வகையில்...
முனைவர் ச.சீ. இராஜகோபாலன்தரம் என்ற சொல் நிர்வாகவியலில் அதிகம் புழங்கும் வார்த்தை. தரத்தைத் துல்லியமாக அளவிடுவது கடினம். எனவே...
வேதவல்லி சுகுமாரன்இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்படுகையில் அடிப்படை உரிமைகளை அரசே மீறும்போது அது குறித்த மனுவை ஒரு...
இரா. நடராசன்சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கல்வி கருத்தரங்கம் ஒன்றில் கியூபாவின் ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது....
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!மாநாட்டில் கலந்துகொண்ட மாண்புமிகு முதல்வர்...
சிதம்பரம் இரவிச்சந்திரன்இந்தியாவில் முதல்முறையாக ஒரு மாநில அரசு விவசாயிகளுக்காக சமூக வானொலி சேவையைத் தொடங்கியுள்ளது. கேரள மாநில ஆலப்புழை...
சொன்னதெல்லாம் நாங்க மறந்திடுவோம்…இனி, புதுசா செய்யக் கிளம்பிடுவோம்… விவசாயிக்கு வருமானம் இரட்டிப்பு,விதை, உரம் வாங்க மானியம்,பயிர்ப் பாதிப்புக்கு இழப்பீடு…சத்தியமாகச்...
சோழ. நாகராஜன்அவரது இயற்பெயர் திருவையாறு பஞ்சாபகேச ராஜலட்சுமி எனும் டி.பி. ராஜலட்சுமி. ஆனால், அந்நாளைய தமிழ் சினிமா ரசிகர்கள்...
பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் ரூ.33,000 கோடியில் ரூ. 31,000 கோடி சம்பளத்திற்கே செலவாகிவிடுகிறது.. அப்புறம் எப்படி கட்டமைப்புக்குச் செலவிட...
மாணவர்கள் மாரிஸ்வரி, கண்மணி, சுவேதா, மகாலட்சமி, அகல்யா, கிஷேர், யோகிதா-அருப்புக்கோட்டை வாசகர் வட்டம்1) தென்அமெரிக்காவில் சிவப்புக் காற்று வீசுகிறது...
1 min read
ஆர்எஸ்எஸ் பரிவாரங்களைச் சேர்ந்த சாமியார்கள், பாஜக தலைவர்கள், கடந்த டிசம்பர் 17 முதல் 19-ஆம் தேதி வரை நாடு...
1 min read
ஏ ஜி நூரானி எழுதிய இந்த நூலின் தமிழ் மொழியாக்கத்தின் பிழை திருத்தும் பணியை முடித்து புத்தாண்டைத் துவக்குகிறேன். 25 அத்தியாயங்கள் 700 பக்கங்கள் இது தவிர 230 பக்கங்களில் 16 பின்னிணைப்புகள். அத்தனையும் வரலாற்று ஆவணங்கள். மொத்தம் 930 பக்கங்கள் இரண்டு வருட உழைப்பு விரைவில் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வரவிருக்கிறது. இந்த ஆண்டில் அதிகம் பேசப்படும் நூல்களில் ஒன்றாக இருக்கும் என்று இந்த கணத்தில் உணர்கிறேன். -விஜயசங்கர் ராமச்சந்திரன், ஆசிரியர், ஃப்ரண்ட்லைன்
1 min read
தாமஸ் ஃப்ராங்கோ (அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர்) அரசமைப்புச் சட்டத்தின் வலிமையானது, ஒவ்வொரு குடிமகனுக்கும் அதைப் பாதுகாப்பதில் உள்ள உறுதியிலேயே உள்ளது. ஒவ்வொரு குடிமகனும்...
பாஜக ஆளும் கர்நாடகத்தில் மதமாற்ற தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஜனநாயக விரோதச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுபான்மை கிறித்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தன. எனினும் மாநிலத்தில் எத்தனை யோ பிரச்சனைகள் இருக்க அவசர அவசரமாக இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது பசவராஜ் பொம்மை அரசு. கர்நாடகத்தில் இந்துக்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதாக பாஜக எம்எல்ஏ கூலிஹட்டி சேகர் கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறினார்.  மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வருவ தற்கான முன்னோட்டமாக இது கருதப்பட்டது. இந்நிலையில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது கர்நாடக அரசு.  ‘கட்டாய மத உரிமை சட்ட மசோதா 2021’ என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட மசோதாவில் மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச மாக 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அப ராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எந்தவொரு மதத்தையும் பின்பற்றவும், வழிபாடு நடத்தவும், பிரச்சாரம் செய்யவும் இந்திய அரசியல் சாசனம் உரிமை வழங்கி யுள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்க ளான உ.பி, குஜராத்தில் இத்தகைய சட்டம் கொண்டு வரப்பட்டது. முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் ம.பி.யிலும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.  இந்திய அரசமைப்புச் சட்டம் 25 மற்றும் 26ஆவது பிரிவுக்கெதிரானது இந்த மதமாற்ற தடைச் சட்டம். இத்தகைய சட்டத்தை ஒன்றிய அளவிலும் கொண்டு வரப்போவதாக அவ்வப்போது பாஜகவினர் மிரட்டி வருகின்றனர்.  சிறுபான்மை கிறித்துவ மற்றும் முஸ்லிம்க ளுக்கு எதிராக இந்துத்துவா வெறியர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். மாட்டிறைச்சி  சாப்பிட்டதாக கூறி யும், லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக கூறியும்   சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகின்ற னர். அத்தகைய அராஜகத்தில் ஈடுபடும் வெறி யர்களின் கையில் மேலும் ஒரு ஆயுதமாகவே இந்த கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் பாஜக ஆளும் மாநிலங்களில் தரப்படுகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் போன்ற உயர் பொறுப்புகளில் இருப்பவர்களே பேசி வருகின்றனர். இந்துத்துவா பரிவாரத்திற்கு இத்தகைய பேச்சுக்கள் ஊக்கமளிக்கின்றன.  உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நெருங்குவதையொட்டி மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் பிரச்சாரம் மீண்டும் வேகமாக கிளப்பி விடப்படுகிறது. ஹரித்துவாரில் மதங்களின் நாடாளுமன்றம் என்ற பெயரில் நடத்தப்பட்ட மூன்று நாள் கூட்டம் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வெறியைத் தூண்டுவதாக நடந்துள்ளது. தேசத்தின் மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து நிற்க வேண்டிய நேரம்இது. (தீக்கதிர் தலையங்கம்.. 25 டிசம்பர் 2021)
தில்லியில் நடந்த ஒரு சங் பரிவார கூட்டம்; ஜெர்மனி நாஜிக்கள் போல உறுதி மொழி எடுப்பு. உறுதி மொழி வாசகங்கள் : Ø இந்த உறுதி மொழி எங்கள் உயிர் இருக்கும் வரை! Ø இந்தியாவை இந்து தேசமாக மட்டுமே வைத்திருப்போம்! Ø அதற்காக உயிரை கொடுப்போம்! உயிரையும் எடுப்போம்!! Ø எந்த தியாகம் செய்யவும் ஒரு வினாடி கூட தயங்க மாட்டோம்! Ø எங்கள் குரு தேவ் அவர்களே! எங்களது முன்னோர்களே! பாரத மாதாவே இந்த உறுதி மொழியை அமலாக்க எங்களுக்கு வலிமை கொடுங்கள்! வெற்றியை தாருங்கள்!! Ø இந்து ராஷ்ட்ராவை உருவாக்கியே தீருவோம்! ——————————————————————————– இந்து ராஷ்ட்ராவை உருவாக்கியே தீருவோம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்....
இன்று காலை 6 மணிக்கு, சென்னையிலிருந்து மதுரை செல்லும் ‘தேஜஸ்’ ரயிலில் ஏறினேன். டிக்கெட் 920 ரூபாய். டிக்கெட் பரிசோதகர் கூடுதலாக ரூ.20 கொடுக்குமாறு கேட்டார்.  “எதற்கு” என்றேன்.  “பேப்பருக்கும் தண்ணீர் பாட்டிலுக்கும்” என்றார். ” நான் உங்களிடம் கேட்கவே இல்லையே. நீங்களாகவே கொடுத்து விட்டு, எப்படி விலைகேட்கிறீர்கள்?” அவர் கையிலிருந்த பயணிகள் பட்டியலைக் காண்பித்து, “ரயில்வே வசூலிக்கச் சொல்கிறது” என்றார். (நான் ரயில் பெட்டியில் ஏறும்போதே, எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் ‘தினமலர்’ பத்திரிகை கிடந்தது).  “தினமலருக்கு ரயில்வே ஏன் ஏஜென்ட் வேலைபார்க்கிறது. அந்தப் பேப்பரை நான் விலை கொடுத்து வாங்கியே தீரவேண்டும் என கட்டாயப்படுத்த ரயில்வேக்கு என்ன அதிகாரம்? பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். நான் பணம் தரமுடியாது” என உறுதியாகச் சொன்னேன். அவர் பேசாமல் நகர்ந்தார்.  ஆனால் மற்றவர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டே சென்றார்.  ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொண்ட குடும்பம் பக்கத்து இருக்கைகளில் பயணம் செய்தது.  மூன்று பேருக்கும் தினமலர் கொடுத்து, பேப்பர்களுக்கான விலையை வசூலித்தார். என்ன கொடுமை இது!  அனைவரும் வாய்பேசாமல் பணம் கொடுத்தது வியப்பாக உள்ளது!  தேஜஸ் ரயிலில் 14 பெட்டிகள். ஒரு பெட்டிக்கு எழுபத்தி எட்டு இருக்கைகள். (14×78=1092) இந்த ஒரு ரயிலில் மட்டும் 1092 தினமலர் இதழ்களை தினமும் விற்று தினமலருக்கு பணம் கொடுக்கிறது ரயில்வே! ...
1 min read
-சாவித்திரி கண்ணன்  கொஞ்சம் கூட கூச்ச, நாச்சமில்லாமல் ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு இன்று தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு சங்காராச்சாரியார் வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்! நேர்மையான விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளுக்கே இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மததுவேஷ கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் என பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மக்கள் சந்திக்கும் அடிப்படையான பல பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி சதா சர்வ காலமும் என்ன வேண்டுமானாலும் பேசுவது, அவதூறுகளை அள்ளிவிடுவது  என இயங்கி வருபவருக்கு எப்படிப்பட்ட பின்புலம் இருக்கிறது என்பதற்கு இன்றைக்கு அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு, நீதிபதியே அவரது வக்கீலாக மாறி கேள்வி கேட்டு இருப்பதே சாட்சியாகும். இந்தியாவின் மிகப் பெரிய முப்படைத் தளபதி ஒரு விபத்தில் இறந்த அதிர்ச்சியில் இந்த தேசமே உறைந்திருக்கும் வேளையில், ”திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்திற்கு எந்தப் பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்’’ என டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார் மாரிதாஸ். இது ஒரு விஷக் கருத்தா இல்லையா? இது விஷக் கருத்து என்பதால் தானே போட்ட சில நிமிடங்களில் அந்த டிவிட்டை மாரிதாஸ் எடுத்துவிட்டார்? அப்படியானால், அதற்கு வருத்தம் தெரிவித்து இருக்கலாமே! இந்த கருத்திற்கு எதிர்வினையாற்ற திமுகவினர் முனைந்தால் அது எவ்வளவு பெரிய கொந்தளிப்பில் சென்று முடியும்? இன்றைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, “அவரது ட்விட்டரில் முப்படைத் தளபதி குறித்த கருத்துகளின்போது தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இதைப் பார்த்தால் தவறாக நினைப்பார்கள். மாநிலத்தின் நேர்மை குறித்தே கேள்வியெழுப்பியுள்ளார். எந்த அடிப்படையில் இந்தக் கருத்தைப் பதிவுசெய்தார் என விசாரிக்கவேண்டியுள்ளது” என்ற வாதிட்டார். ஆனால், இந்த சப்ஜெக்டில் இருந்து வெளியேறியவராக திடீரென குறுக்கிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “சுப்பிரமணிய சுவாமியும் இது போன்ற கேள்வியை எழுப்பியிருந்தாரே, அவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டதா, ஜெயலலிதா மரணத்தின் போதும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டனவே” என்று கூறுகிறார் என்றால், என்ன பொருள்? ஒரு திருடனைப் பிடித்து கோர்ட்டில் நிறுத்தினால், அவன் திருடியது உண்மையா என்பதை தீர விசாரிக்காமல்,...