June 23, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

Year: 2022

1 min read
ஜூன் 8 அன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கூட்டத்தில் (Monetary Policy Committee) ரெப்போ ரேட் விகிதத்தை 4.4 சதவீதத்திலிருந்து 0.50 சதவீதம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்ற மாத துவக்கத்தில் ரெப்போ ரேட் 0.40 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது முறையாக இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர வங்கிகளின் ரொக்க கையிருப்பு வரம்பு விகிதத்தையும் (CRR) 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. 1. ரெப்போ ரேட் என்றால் என்ன? ரெப்போ ரேட் என்பது வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடனாகப் பெறும் பணத்திற்கான வட்டி விகிதமாகும். எனவே இதன் அளவு அதிகரிக்கும்போது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த வட்டி விகித உயர்வை அறிவிப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு நிதியாண்டின் மொத்த பணவீக்‍கம் 6.7 சதவீதம் இருக்‍கும் என்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (GDP) 7.2 சதவீதம் இருக்‍கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2. பணவீக்கம் என்றால் என்ன? பணவீக்கம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை களின் பொதுவான நிலை அதிகரித்து, அதன் விளைவாக, நாண யத்தின் வாங்கும் திறன் (மதிப்பு) குறைவது. பொருட்களின் விலைக ளுடன் வருமானம் அதிகரிக்கவில்லை என்றால், ஒரு நபரின் வாங்கும் திறன் குறைகிறது. இதுவே பணவீக்கம். 3. ரெப்போ ரேட் உயர்வால் பணவீக்கம்  எவ்வாறு கட்டுக்குள் வரும்? “ரிசர்வ் வங்கி தனது கடனுக்கான வட்டியை உயர்த்தும்போது வணிக வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக் கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மக்கள் வங்கியில் வாங்கும் புதிய கடன்களின் அளவு குறையும். மக்கள் தங்கள் செலவினங்களை சுருக்கத் தொடங்குவார்கள். மறுபுறம் இந்த அறிவிப்பின் மூலம் வங்கியில் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் உயரும். இதனால் மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் பணத்தை வங்கிகளில் சேமிப்பாக மாற்று வார்கள். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளின் விளைவாக நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பணம் கணிசமான அளவில் குறைந்து வங்கிக்கு திரும்பும் எனவும், இதன் மூலம் பணவீக்கம் குறையும்” என்றும் ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. ஆனால் இது உண்மையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்தாது. ஏனெனில் வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை வணிக வங்கிகள் ரெப்போ ரேட் உயர்வதற்கு ஏற்றாற்போல் உயர்த்துவது இல்லை. மறுபுறம் ஏற்கனவே 70 சதவீத மக்கள் கையில் சேர்த்து வைக்க எதுவும் இல்லை. அவர்களின் வாழ்க்கை கைக்கும் வாய்க்குமாகவே உள்ளது. அவர்கள் பெரும்பாலும் கடனை நம்பியே வாழ்கிறார்கள். வட்டி விகிதம் உயரும்போது, தவணைத் தொகை உயரும். இதனால் அவர்கள் புதிதாக கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். 4. இந்த வட்டி உயர்வு சாமானிய மக்கள் மற்றும் தொழிலாளிகளை எவ்வாறு பாதிக்கும்? ஓரளவிற்கு மேல் பொருட்களின் விலையை உயர்த்த முடியாமல் போகும்போது, வணிகர்கள் தங்களின் செலவீனங்களைக் குறைக்கத் துவங்கி, தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதி யத்தில் கை வைப்பார்கள். ஏற்கனவே கொரோனா பாதிப்பில் வேலை யிழப்பு மற்றும் சம்பள குறைப்பில் தவித்த சாமானிய தொழிலாளர்கள், இப்போது மேலும் இன்னலுக்கு உள்ளாவார்கள். இதனால் அவர்களின் வாங்கும் சக்தி மேலும் வீழ்ச்சியடையும். இதனால் சந்தையின் பொதுவான கிராக்கி குறைந்து உற்பத்தியான பொருட்களின் விற்பனையில் ஒரு பெரிய தேக்கம் உருவாகும். இது நாட்டின் பொருளாதாரச் சுழற்சியை மேலும் மேலும் வெளிவர முடியாத சுழலுக்குள் சிக்க வைக்கும். 5. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?...
# செல்லாத நோட்டு திட்டத்தின் மூலம் குடிமக்கள் அனைவரையும் நடு ரோட்டில் நிற்கவைத்தீர்களே.. அதில் உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா? # கருப்புப் பணத்தை பிடிக்கப் போறேன்னு பொய் சொல்லி அடித்தட்டு மக்களை கண்ணீரோடு  அலைக்கழித்தீர்களே.. அதில் உங்களுக்கு வெட்கம் இல்லையா? # நான்கு மணி நேர  இடைவெளியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து பல்லாயிரம் தொழிலாளர்களை குடும்பம் குடும்பமாக தலையில் சுமையுடன் பல கிலோமீட்டர்   தூரம்...
பார்த்திபனின் இரவின் நிழலை முன்வைத்து..சோழ. நாகராஜன்இயக்குநர் பார்த்திபன் தொடர்ந்து மாறுபட்ட சினிமா முயற்சிகளைச் செய்தவண்ணமிருப்பவர். அவரது ‘ஒற்றைச் செருப்பு’...
மாணவர்கள் அகல்யா, மாரிஸ்வரி, கிஷோர் கண்ணன், யோகிதாஅருப்புக்கோட்டை வாசகர் வட்டம்1) பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றது எவ்வாறு?ஓராண்டுக்கு...
1 min read
இயல்பாகவே சிறப்பாக இருப்பதுஎஸ் வி வேணுகோபாலன்இது நடந்து நாற்பது ஆண்டுகளுக்குமேல் இருக்கும். ’அந்தப் பையன் பெயர் கூடத் தெரியலியே!’...
டாக்டர் ஜி. ராமானுஜம்எவெரெஸ்ட் மலையில் டென்சிங்கும் ஹில்லாரியும் ஏறியபோது அங்கு ஒரு நாயர் டீக்கடை போட்டிருந்தார். ‘சாரே சாயா...
சி.ராம்மனோகர் ரெட்டிகடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு படம் இந்தியாவின் இன்றைய நிலையை உள்ளது உள்ளபடி சித்தரிப்பதாக...
ஜனநேசன்இராமேஸ்வரம்-புவனேஸ்வரம் விரைவு ரயில் பத்து நிமிடம் தாமதமாக காரைக்குடி சந்திப்புக்குள் நடுப்பகல் பனிரெண்டு மணிக்கு நுழைந்தது. வண்டி இரண்டே...
தூய்மை இந்தியா இயக்கம் –முழக்கங்களும், உண்மைகளும்செ. நடேசன்‘திறந்தவெளி மலம் கழிப்பு’… கேட்கும்போதே மனதில் ஓர் அருவருப்பை ஏற்படுத்துகிறது இச்சொல்லடுக்கு....
தேனி சுந்தர்சமீபத்தில் தொடக்க வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒன்று நடைபெற்றது. தமிழ், ஆங்கில மொழித் திறன் குறித்த...
ஆசிரியர்: மு.முருகேஷ்அகநி வெளியீடு, வந்தவாசி. விலை: ரூ.120/-முப்பதாண்டுகளுக்கும் மேலாக படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வரும் மு.முருகேஷ் புதிய...
மூதாதையர்கள் சிந்தியரத்தம் முழுவதையும்முதலில் அளந்தவன் அவனே ! உற்பத்திப் பொருட்களின்ஓரத்தில் படிந்தரத்தத்தை பார்த்தமுதல் மனிதன் அவனே ! அவன்...
மதுக்கூர் இராமலிங்கம்உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ள சில தீர்ப்புகள் ஜனநாயகத்தை நேசிப்போருக்கும், மாநில உரிமைகளை வலியுறுத்துவோருக்கும் ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளன....
75 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்தியாவுக்கு 54 நாடுகளினுடைய பகையை சேர்த்துள்ள பெருமை மோடி அரசுக்கே. ஒன்றிய அரசு அரசியல் சட்டத்தை இடைவெளி இல்லாமல் அமல்படுத்தியிருந்தால் மதக்கலவரங்கள் நடந்திருக்காது. * *இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, அதன் அரசியலமைப்புச் சட்ட விதிகளை  அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றங்கள் நீதி வழங்கியிருந்தால் மதக்கலவரங்கள் நடந்திருக்காது. * *ஆர்எஸ்எஸ், பிஜேபியினுடைய கொள்கையைத்தான், மத துவேசத்தைத்தான் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, நவீன் மிட்டல் ஆகிய 2 பேரும் பேசியிருக்கிறார்கள். அவர்களை பதவி நீக்கம் செய்துவிட்டால் மட்டும் யார் இவர்களை நம்புவார்கள்? இவர்களின் தொடர் வெறுப்பு அணுகுமுறையால் 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவுக்கு 54 நாடுகளில் பகையை சேர்த்துள்ள பெருமை மோடி அரசுக்கே. * *மதச்சார்பற்ற அனைவரும் இதைக் கண்டிக்கிறோம்.  – தோழர் டி.கே.ரங்கராஜன் மூத்த தலைவர், சிபிஎம்
சிதம்பரம் இரவிச்சந்திரன்நவி மும்பை முனிசிபல் கார்பரேஷன் நீண்டதூர பேருந்தில் நூல்நிலைய வசதியைத் தொடங்கியுள்ளது. இதனால் இனி நீண்டதூரப் பேருந்துப்...
சிபிஎம்கட்சியின்மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் :தமிழக நிதியமைச்சர் சட்டப் பேரவை யில் பேசும்போது மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை...
புதிய ஆசிரியன் இதழ் சில அரசு நூலகங்களில்…கடந்த 2010-ம் ஆண்டில் புதிய ஆசிரியன் இதழ் தமிழ்நாடு மாவட்ட நூலகங்களுக்கு...

புதிய ஆசிரியன் இதழ் 10-ம் தேதிக்குள் கிடைக்கவில்லையெனில் நிர்வாக ஆசிரியருக்கு ஃபோன் செய்யுங்கள் (94430 37138). இதழை நீங்கள்...
கருப்புப் பணத்தை மீட்டு,மக்கள் கணக்கில் சேர்ப்பேனென சூளுரைத்தவர்,டீக்கடைக்காரர்கள் கைகளிலிருந்தசில்லறைகளையும் திருடிக்கொண்டதைஎன்ன சொல்ல..? வறுமையை விரட்டுவேன்என்று வீர வசனம் பேசியவர்,ஏழைகள்...
உமாகடந்த மாதத்திற்கு முன்பு பள்ளி மாணவர்களில் சிலர் பள்ளி வளாகங்களில் வன்முறைச் சம்பவங்கள், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதாக காணொளிகள்...
1975-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி நாட்டையே அச்சத்தில் ஆழ்த்தினார். இன்று அத்தகு அறிவிப்பு ஏதுமில்லாமலேயே...
1 min read
அடுத்து “சிறு வயதில் எப்போதாவது நீங்கள் பிரதமராகும் கனவு கண்டதுண்டா? உலகம் முழுவதும் அறியமுடிந்த ஒருவராய் இருப்போம் என நினைத்ததுண்டா?” ஒரு மாணவனின் குரல் ஒலித்தது. லேசாக சிரித்துக் கொண்டே “நான் நினைத்ததே இல்லை. பள்ளியில் லீடராகும் போட்டியில் கூட கலந்து கொண்டது இல்லை” என்றார் மோடி. ”நான் நினைத்ததே இல்லை.” என்பது வரைக்கும் உண்மை. இந்திரா காந்தியிடமோ, ராஜீவ் காந்தியிடமோ, ராகுல் காந்தியிடமோ இந்தக் கேள்வி கேட்டிருந்தால் வேறு பதிலை எதிர்பார்க்கலாம். 2001 அக்டோபர் 1-ம் தேதி, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அழைத்து, “நீங்கள் குஜராத் முதலமைச்சராக பணியாற்ற வேண்டும் “ என்று சொல்லும் வரைக்கும் அப்படியொரு எண்ணம் மோடிக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அதற்காக பள்ளியில் லீடராகக் கூட ஆசைப்பட்டதில்லை என்று சொன்னதுதான் நெருட வைத்தது. சேட்டன் பகத்தின் நிகழ்ச்சியில் மோடியின் நண்பர் சொன்னதற்கும், பள்ளிக் குழந்தைகளிடம் மோடி சொன்னதற்கும் உள்ள முரண்பாடு வெளிப்பட்ட இடமாக அந்த பதில் இருந்தது. ஒன்று, பிரதமர் நரேந்திர மோடி சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது அவரது பள்ளி நண்பர் சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். பள்ளி நண்பர் மிகச் சாதாரணமானவர். அவர் மோடி குறித்து பொய் சொல்லத் தேவையில்லை. மோடியைப் பற்றி அவருக்குத் தெரிந்தவர்களின் இயல்பான உரையாடல்களின் மூலம் ஒரு பிம்பத்தை கட்டி எழுப்பவே சேட்டன் பகத் போன்ற ஒரு எழுத்தாளர் முயன்றிருப்பார். ஆக, பொய் பேசியது மோடி என்பதை உணர முடியும். அது குறித்து பொதுவெளியிலும், இணையத்திலும் விவாதங்கள் எழுந்தன. ‘இது ஒரு பெரிய விஷயம் போல ஏன் பேச வேண்டும்’, ’ஒரு சாதாரண விஷயத்தை ஏன் கிளறுகிறீர்கள்”, ‘மோடியின் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்புத்தான் தெரிகிறது” என மோடியின் ஆதரவாளர்கள், திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அவர்கள் எல்லாம் பெரிய மனுஷன்கள் போலவும், இதுகுறித்து பேசுகிறவர்கள் அல்பர்கள் போலவும் காட்டிவிட்டு கடந்து விட முனைந்தார்கள். நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இந்த நாட்டின் பிரதமர் என்பதையும், அவர் வகிக்கும் பதவிக்கும் பொறுப்புக்கும் இருக்க வேண்டிய தன்மை குறித்தும் அவர்கள் கவலைப்படவில்லை. “பிரதமரின் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படைத்தன்மையும், உண்மையும் இருக்க வேண்டும்” என தேசத்தின் சாமானிய மக்கள் எதிர்பார்க்கவே செய்வார்கள். அந்த பிரக்ஞையற்றவர்களாய் அவர்கள் மோடிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு இருந்தார்கள். மிகச் சிறிய விஷயத்தில் கூட இப்படி பொய் சொல்கிறவர், இந்த தேசத்தின் மிக முக்கிய காரியங்களிலும், பிரச்சினைகளிலும் எவ்வளவு பொய்களைச் சொல்வார் என்ற கேள்விகள் இயல்பாக எழத்தான் செய்யும்....
1 min read
ஜா. மாதவராஜ் (புக் டே இணையதளத்தில் வந்தது) “நீ பொய்யன் என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு பொய் போதும். கடந்த காலத்தில் நீ செய்தவைகளை மக்கள் மறப்பதற்கும் எதிர்காலம் முழுவதையும் அந்த மக்கள் சந்தேகத்தோடு பார்ப்பதற்கும் பொய்கள் உதவுகின்றன.” – நிஷான் பன்வார். எழுத்தாளர் சேட்டன் பகத் முதன்முறையாக ஏ.பி.பி செய்தி சேனலில், ‘7 RCR’ என்னும் அந்த தொடரை 2014-ம் வருடம் ஜனவரி மாதம் முதல் நடத்தியதற்கு காரணங்களும், பின்னணியும் இருந்தது. இந்திய மத்திய வர்க்கத்தின் இளைய தலைமுறையால் நெருக்கமாக அறியப்பட்டவர் சேட்டன் பகத். 2010-ம் ஆண்டு உலகின் மிக செல்வாக்கு பெற்ற நூறு பேரில் ஒருவராக அவரை டைம் பத்திரிகை அறிவித்திருந்தது. 2014 பாராளுமன்ற தேர்தலில் டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில். 7-ம் நம்பர் வீட்டை அடையக் கூடிய முக்கிய அரசியல் தலைவர்களின் பிம்பங்களை காவியமாக்கும் தன்மையில் அந்த தொடரின் அத்தியாயங்கள் அமைந்திருந்தன. பரந்து விரிந்த இந்திய நிலப்பரப்பின் மீதும் மக்களின் மீதும் செல்வாக்கும், அதிகாரமும் செலுத்தக் கூடிய மனிதர் இவர்களில் ஒருவர் என்று ஆவலைத் தூண்டுவதுதான் அந்த நிகழ்ச்சியின் சாராம்சம். மொத்தம் பதினைந்து எபிசோட்களில், நரேந்திர மோடிக்கு ஆறு, ராகுல் காந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தலா இரண்டு, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, மாயாவதி, முலாயம்சிங் யாதவ், ஜெயலலிதா ஆகியோருக்கு தலா ஒன்று என முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தங்கள் உள்ளமும் அறிவும் கவர்ந்த எழுத்தாளரின் உள்ளக் கிடக்கையை வாசக பெருமக்கள் பார்த்தார்கள். ஒரு மனிதர் எல்லோரும் பார்க்கிற மாதிரி வெளிச்சத்துக்கோ, உயரத்துக்கோ அல்லது முன்னுக்கோ வருகிறபோது, அவர் மட்டும் வருவதில்லை. அவரது கடந்த காலமும் சேர்ந்தே வருகிறது. அதுவரைக்கும் அவரைப் பற்றி அறியாதவர்கள் அவரது கடந்த காலத்தை தெரிந்து கொள்ள முற்படுகிறார்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தடயங்கள் அங்குதான் இருக்கின்றன. அவ்வகையில் நரேந்திர மோடியின் கடந்த காலம் பலருக்கும் அறியப்படாமல் இருந்ததால் அல்லது அதிகமாக சொல்லப்பட வேண்டி இருந்ததால் அவருக்கு மட்டும் ஆறு எபிசோட்கள் என்றும் அந்த முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். தாமோதர்தாஸ் மோடி என்பவர் குஜராத்தில் இப்போதும் ஒரு டீக்கடை நடத்திக்கொண்டு இருப்பவராக வைத்துக் கொள்வோம். அசாமிலோ, தமிழ்நாட்டிலோ உள்ள டீக்கடைகளில் யாராவது அவரைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கப் போகிறார்களா? அவர் என்ன படித்தார், யசோதா பென்னோடு ஏன் சேர்ந்து வாழவில்லை என்றெல்லாம் யாராவது சிந்திக்கப் போகிறார்களா? அவரது கடந்த காலம், நிகழ்காலம் எல்லாமே அவருக்கும், அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்தவையாக இருக்கும். அவர்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்டவையாகவும் இருந்திருக்கும். ‘அவரே இனி இந்தியாவின் பிரதமர்’ என பெரும் சத்தத்தோடு சங்கு ஊதப்பட்டது. எல்லோருக்கும் சம்பந்தப்பட்ட மனிதராகிவிட்டிருந்தார். அவரை கடுமையாக எதிர்த்தும், கடுமையாக ஆதரித்தும் எங்கும் பேசப்பட்டது. அவரது கொள்கைகள், பார்வைகள், சிந்தனைகள், தத்துவங்கள், அனுபவங்கள் எப்படிப்பட்டவை என ஆராயாமல், அவரது தனிப்பட்ட குண நலன்கள்கள், இயல்புகள், வாழ்க்கை குறித்த அலசலாக மாற்றி, அவரை நாயகனாக்கும் காரியங்கள் கார்ப்பரேட் மூளைகளில் இருந்து அரங்கேறிக் கொண்டு இருந்தன. அதில் ஒரு எபிசோட்தான் சேட்டன் பகத்தின் ’7...
1 min read
கே.ராஜு- முன்னாள் தலைவர், மூட்டா # மூட்டா மாநாட்டில் பேச ஒரு தொழிற்சங்கத் தலைவரை அழைத்திருந்தோம். மதியம் 12 மணிக்குப்...
ஆபத்தான ஆயுதங்களைக் கைகளில் ஏந்தி சமூகத்திற்கெதிராக வன்முறையைப் பிரயோகிப்போரை பயங்கரவாதிகள் என்கிறோம். அப்படி ஏதும் ஆயுதங்களைக் கைகளில் ஏந்தாமலேயே...
1 min read
அரசுப் பள்ளிகளைப் பழிப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று நாம் உணர வேண்டும். அரசுப் பள்ளிகளில் குறைகள் உண்டு. அவற்றைக் களைவதில் நம் அனைவருக்கும் பங்கும் உண்டு. எளிய மக்களின் ஒரே பற்றுக்கோடான அரசுப் பள்ளிகள் பலமிழந்தால், அவர்களின் வறுமையுடன் கல்லாமையும் சேர்ந்துகொள்ளும். கல்வியின் சாத்தியங்களை அறியாததால்தான் இந்தப் பிள்ளைகள் பெஞ்சுகளை உடைக்கிறார்கள், வன்முறையை நாடுகிறார்கள். அடுத்து, எல்லோரும் அவரவர் பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்குப் பங்களிக்க வேண்டும். மாணவர்களின் வளர்ச்சிக்கு அவரவரால் இயன்ற அளவுக்கு உதவ வேண்டும். ஆசிரியர்-பெற்றோர் உரையாடலை வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கு உள்ளூர்க்காரர்களால் உதவ முடியும். நம் கல்வி, நம் உரிமை, நம் சமூகம், நம் பள்ளி என்கிற உணர்வு மேலெழும்ப வேண்டும். – மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: [email protected]  (2022 மே 13 அன்று தமிழ் இந்துவில் வந்த கட்டுரையின் இறுதிப் பகுதி)
1 min read
க.சிவசங்கர் ஒரு தொழிலாளி தன் இளமைக் காலம் முழுவதும் செலுத்திய உழைப்பின் பலனை உடலில் வலு இல்லாத தன் இறுதிக் காலத்தில், தன் வாழ்க்கையை யாருடைய உதவியும் இன்றி குறைந்தபட்ச கௌரவத்துடன் அமைத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டமே (Social Security Scheme) ஓய்வூதியம். 1982-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்தியாவில் ஓய்வூதிய நடைமுறை குறித்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பில், “ஓய்வூதியம் என்பது அரசின் கருணைத்தொகையோ, நன்கொடையோ அல்ல. ஓர் அரசு ஊழியர் பல ஆண்டு காலம் அரசாங்கத்துக்கும், பொதுமக்களுக்கும் பணியாற்றியமைக்காக அவர் பெறும் உரிமைத் தொகையாகும். அரசு ஊழியர் ஓய்வுபெற்ற பின்னர் அவர் அமைதியாகவும், கௌரவமாகவும் வாழ்வதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. ஓய்வூதியம் வழங்குவதால் அரசிற்கு நட்டம் வருமா? ஓய்வூதியம் கொடுப்பதால் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் நொடிந்து போய் நட்டத்தில் சென்று விடும் என்று பரப்பப்படும் செய்திகளில் துளி உண்மையும் இல்லை. அந்த நிறுவனத்தின் லாபக் குவிப்பில் ஒரு சிறிய அளவு குறையும்; அவ்வளவே. மற்றபடி அது நட்டத்தில் போவதற்கு வேறு பல காரணங்கள் இருக்கலாமே ஒழிய, ஓய்வூதியம் கொடுக்கப்படுவதே காரணம் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மேலும் ஓய்வூதியம் வழங்குவதால் அரசிற்கு நட்டம் ஏற்படுகிறது என்ற கருத்தும் அதிகமாக முன்வைக்கப்படுகிறது. அரசிற்கு வருவாயை ஈட்டக்கூடிய லாபம் கொழிக்கும் கேந்திரமான துறைகளை ஒவ்வொன்றாக தனியாருக்குத் தாரை வார்த்து விட்டு, அரசிடம் பணம் இல்லை என்று சொல்வது எவ்வாறு சரியாக இருக்கும்? மாறாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வருவாய் ஈட்டும் துறைகள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் மிகச்சில தனி நபர்களிடம் குவிந்துள்ள செல்வம் அரசின் கஜனாவிற்கு வந்து சேரும். இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அல்ல, அமைப்பு சாரா பணிகளில் இருக்கும் வயது மூத்தோர்களுக்கும் கூட  ஓய்வூதியம் வழங்க இயலும். புதிய ஓய்வூதிய திட்டமா? பழைய ஓய்வூதிய திட்டமா? ஒரு தொழிலாளி ஓய்வு பெற்ற காலம் முதல் தான் இறக்கும் காலம் வரை மாதம்தோறும் முறைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட தொகையைப் (Defined pension) பெறுவதற்கு வழிவகுப்பது பழைய ஓய்வூதிய திட்டம் மட்டுமே. மாறாக தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி ஒரு தொழிலாளி பணியில் இருக்கும் காலம் முழுவதும் சேகரிக்கப்படும் பணத்தின் பெரும்பகுதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. எக்காலத்திலும் நிலையான மதிப்பைக் கொண்டிருக்காத, மதிப்பிழக்கும் ஆபத்தை அதிகம் கொண்ட பங்குச்சந்தையினால் தன் வாழ்நாள் முழுவதும் சேகரித்த பணம் எப்போது பறிபோகுமோ என்ற அச்சத்துடன், எந்த வகையிலும் தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத மிகக் குறைந்த அளவிலான மாதாந்திர தொகையை ஓய்வூதியம் என்ற பெயரில் வாங்க வேண்டிய அவல நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர். பாதுகாப்புத்துறை ஊழியர்கள் (Defense Employees) இத்தகைய நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்ற காரணத்தினால் தான் அரசு அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்கிறது....

2022 மே 11 பதிவுக்கு மூன்று படங்கள்…
நமது மண்வாசம் இன்றைய ஒரு பொழுது ஒரு பதிவு பகுதியில் கடந்த நமது மண்வாசம் இதழில் 21ஆம் நூற்றாண்டுக்கான...
*மூதாதையர்கள்  சிந்திய**ரத்தம் முழுவதையும்**முதலில் அளந்தவன் அவனே !**உற்பத்திப் பொருட்களின்**ஓரத்தில் படிந்த**ரத்தத்தை பார்த்த**முதல் மனிதன் அவனே !**அவன்**மின்சாரத்தைப்**புத்தகங்களில்* *அடைத்து**மனிதனிடம்* *கொடுத்தான்**பிடித்தவர்கள்* *தலைகளில்**பல்புகள் எரிந்தன ..**பனித்துளிகளை* *எல்லாம்**சேகரித்து**பாலருவியாய்* *ஓடவிடும்**பொறுமை* *அவனுக்கிருந்தது…**அவனுக்கு**விரக்தி வந்திருந்தால்**விரக்திக்கு மருந்து**கிடைத்திருக்காது ….**பழைய சமூக அமைப்பிற்கு**சவப்பெட்டி ஒன்றை**தன் கையாலேயே**செய்து முடித்த* *பின்தான்**மானுடம் அவனது* *சவப்பெட்டியில்**மங்காத* *ஒளிவிளக்கை**ஏற்றிவைத்தது ..**அவனுக்கு**இரண்டு பெயர்கள்**ஓன்று மார்க்ஸ்**மற்றொன்று உண்மை !!*                – *கவிஞர் கந்தர்வன்* 
சினிமாத்தனமே இல்லாத அனுபவமாகஒரு போலீஸ் சினிமா…சோழ. நாகராஜன்எளிய மக்களின் மனங்களில் நீண்ட நெடுங்காலமாகப் பதிந்துவிட்ட போலீஸ் எனும் பெரும்...
ஆசிரியர்: சேது ஆனந்தன்செல்: 94420 22301 விலை: ரூ.175/-தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் திரு....
சி.அ.முருகன், திருவண்ணாமலை1)ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித் ஷாவின் கருத்து பற்றி…?அட்டைப்படக் கட்டுரையில் மதுக்கூர் இராமலிங்கம்...
எஸ்.வி. வேணுகோபாலன்அன்பர்கள் சிலர் அடுத்தவர்களிடம் நிறைய கேட்டுக் கொண்டிருப்பார்கள். துருவித் துருவிக் கூடக் கேட்பார்கள். ஆனால் தாங்கள் எதுவும்...
கணினித் துறையில் முதன்முதலாக நுழைந்தவர்களில் தலையானவர் அசீம் பிரேம்ஜி அவர்கள். அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தை நிறுவியவரும் அவரே, அப்பல்கலைக்கழகம்...
ம. மணிமாறன்எல்லாம் சரியாகத்தான் போகிறது. பழுதில்லை.. முன்ன பின்ன இல்லாமலா இருக்கும்? .. அப்படியே இருந்தாலும் சரியாகிவிடும்.. என்ன...
லோ. விக்னேஷ்கால்களால் பூமியை மிதித்துப் பிளக்க வேண்டுமென்று துடிப்பவள் போல் தரையை ஓங்கி அடித்து வேகமாக நடந்து கொண்டிருந்தாள்...
உமாமத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையின் கூறுகள் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்து சுமார் 3 வருடங்கள் ஆகிவிட்டன....
மதுக்கூர் இராமலிங்கம்உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.இது நாடாளுமன்ற...
கே. பாலபாரதி1995-களில் கேரளாவின் அரசுப் பள்ளிகளில் 4000 ஆசிரியர்கள் பணியிழந்தார்கள்.காரணம், எந்தக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத அரசுப் பள்ளிகளில்...
சமீபத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் திமுக தென்சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்...
மனிதன் அறிவியல் வளர்ச்சி.. முன்னேற்றம் என்ற பெயரில் எத்தனையோ வேண்டாதவற்றைச் செய்கிறான். அவற்றில் ஒன்று.. மிதமிஞ்சிய பிளாஸ்டிக் பயன்பாடு.பிளாஸ்டிக்...
ஜனநாயகத்தின் வெற்றி சிறுபான்மைச் சமூகத்தின் பாதுகாப்பில் உள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மைச்...
1 min read
கே.ராஜு- முன்னாள் தலைவர், மூட்டா # What is evaporation? .. என்பது கேள்வி. எவாபரேஷன் கடினமான வார்த்தை. அதோட ஸ்பெல்லிங்க சரியா...
1 min read
புதிதாக வர இருக்கும் கழிப்பறைகள் அழகியலுடன் வடிவமைக்கப்பட்டவை.. சிறந்த பொறியியல் நுணுக்கத்தோடு தயாரிக்கப்பட்டவை.. திடக் கழிவுகளிலிருந்து சாம்பலைத் தவிர...
1 min read
எங்கள் தோழரின் அடுத்த நூல் தயாராகி விட்டது. ச. மாடசாமி  தோழரின் முகநூல் பதிவுகளில் நாம் கற்க  ஒன்று இருந்து கொண்டே இருக்கும். ஒன்றை தெரியப்படுத்துவார்; ஒன்றை பகுத்துக் காட்டியிருப்பார்; மிக முக்கியமாக ஒன்றைப் புரிய வைத்திருப்பார். இந்த மூன்றும் பாடநூலுக்கு முக்கியம்.  முகநூலிலிருந்து நூலாக அச்சாகியிருப்பதால் இவை அடையப் போகும் கைகள் ஆயிரமாயிரம். முகநூலே புழக்கமில்லாத கைகள் அதில் முக்கியமானவை.  இந்நூல் நமக்கு ஒரு மருந்துச் சீட்டு போல ;  கனக்காத ஒரு பாட நூல் போல.  சமகாலத்தை மேலும் புரிந்து கொள்ள வாசிப்போம். வாங்கிப் பகிர்வோம்.  -சக.முத்துக்கண்ணன். பாரதி புத்தகாலயம். வாட்சப் தொடர்பு எண்: 9443066449
அசல் வாழ்க்கையிலிருந்துஒரு அசல் சினிமா அனுபவம்…சோழ. நாகராஜன்சினிமாத்தனம் எதுவும் இல்லாத சினிமா ஒன்று வந்தால் எப்படியிருக்கும்? அண்மையில் வெளியான...
மாணவர்கள் அகல்யா, மாரிஸ்வரி, கிஷோர் கண்ணன், யோகிதாஅருப்புக்கோட்டை வாசகர் வட்டம்சதாம் உசேன் இராக்கில் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கின்றார் என்று...
ஆசிரியர்: உமா மகேஸ்வரிவெளியீடு: சுவடு பதிப்பகம், சேலையூர், சென்னை- 73 விலை: ரூ.300/-9551065500, 9791916936அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியராகத் தமிழகத்தில்...
நிறப்பிரிகை 3எஸ்.வி. வேணுகோபாலன்நண்பர் ஓர் ஆங்கில வாக்கியம் அனுப்பிவைத்து அதைத் தமிழில் மொழி பெயர்த்து அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார்....
டாக்டர் ஜி. ராமானுஜம்கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு எல்லாம் ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டோ, புத்தகங்களைப் படித்தோ...