May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

2022 பிப்ரவரி 9 பதிவு…

காங்கிரஸ் கட்சியின் ஆணவம் குறையவில்லை ..

பிரதமர் கடும் விமர்சனம்

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 7 அன்று பதில் அளித்தார். 

   கொரோனா தொற்றுக்குப் பிறகு உலக நாடுகளின் அளவுகள் மாறி வருகின்றன. நாங்கள் ஒரு தலைவராக அங்கீகரிக்கப்படுகிறோம். உலகத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கத் தயாராகி வருகிறது.

ஏழைகளின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக சென்று சேர்கிறது. மத்திய அரசின் திட்டங்களால் ஏழைகள் லட்சாதிபதிகளாகி 

உள்ளனர். அரசுத் திட்டங்கள் மூலம் ஏழைகள் வீடுகளைக் கட்டி  

லட்சாதிபதிகள் ஆக மாறி வருகின்றனர். 

   ஏழைத் தாய்கள் சமையல் எரிவாயு திட்டம் மூலம் பயன் அடையும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சியினரில் சிலர் இன்னும் 2014 ஆம் ஆண்டு இருந்த மன நிலையிலேயே உள்ளனர். அவர்கள் யதார்த்தத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளனர் என்று நினைக்கிறேன்.

    மிகப் பழமையான காங்கிரஸ் கட்சி இன்று பல மாநிலங்களில் ஆட்சியில் இல்லை கண்மூடித்தனமான விமர்சனங்களை காங்கிரஸ் முன்வைக்கக் கூடாது. கரோனா காலத்திலும் காங்கிரஸ் கட்சி எல்லை மீறி அரசியல் செய்தது.               

   நேர்மையானவர்கள், சேவை செய்பவர்கள் யார் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர்.

   பல மாநிலங்களில் ஆட்சியை இழந்த பிறகும் காங்கிரஸ் கட்சியின் ஆணவம் குறையவில்லை. ஆனால் அடுத்த நூறு ஆண்டுகள் உங்களால் ஆட்சிக்கு வரவே முடியாது.

   இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

———————————————————————————————————-

நாம் கேட்க விரும்புவது.. இப்படி எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் பொய்களை அள்ளிவிடும் ஒரு பிரதமரை நாடு இதுவரை கண்டதுண்டா? உலகத் தலைமைப் பொறுப்பை ஏற்க (அப்படி ஒரு பதவி இருக்கிறதா என்ன?) இந்தியா தயாராகி வருகிறதாம்.! இவர் எதைச் சொன்னாலும் மக்கள் கேட்டுக் கொள்வார்கள் என்று நினைக்கும் இவருக்கு மக்கள் உரிய பதிலை விரைவிலேயே தர வேண்டும்!

Spread the love