May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

2022 பிப்ரவரி 8 பதிவு…

சிலை வைப்பதும் சித்தாந்தத்தின் மீது தாக்குதலும்

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல்

வேளாண் சட்டங்களை ரத்து செய்தது ஏன்?
புதுதில்லி, பிப்.5- வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்தாததற்கான காரணங்கள் என்ன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா கேள்வி எழுப்பினார் 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125 ஆவது ஆண்டு தினத்தையொட்டி ‘இந்தியா கேட்’ முன்பு அவருக்கு சிலை வைத்திட இருக்கிறீர்கள். நான் வரவேற்கிறேன். ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திர போசின் சித்தாந்தத்தை நீங்கள் வரவேற்கவில்லை.  

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சிறுபான்மையினர் மதிக்கப்பட வேண்டும் என்று மட்டும் கூறவில்லை, அவர்களுக்கு சம பங்கு அளித்திட வேண்டும் என்றும் கூறினார். அதனை அவர் நடைமுறைப்படுத்தினார். நீங்கள் நடைமுறைப்படுத்துகிறீர்களா? வெறுமனே சிலையை நிறுவுவதன் மூலம்  மட்டும், அவர் உயர்த்திப்பிடித்த சித்தாந்தங்களை நீங்கள் மறு தலித்திட முடியாது. அவருக்கு உண்மையிலேயே நீங்கள் மதிப்பு அளித்திட விரும்பினால் அவர் நடைமுறைப் படுத்திய சித்தாந்தங்களையும் பின்பற்றுங்கள்.  

ஓர் உதாரணத்தை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர் கொல்கத்தா மாநகராட்சியின் தலைமை அதிகாரியாக இருந்தபோது, வேலை வாய்ப்பில் முஸ்லீம்கள் எவரும் இல்லாததைக் கண்டார். வேலைவாய்ப்பில் 50 சதவீதத்தினர் முஸ்லீம்களாக இருந்திட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி னார். ஏனெனில் அவர்களும் இந்நாட்டின் ஓர் அங்கமாகும். அவர் எந்தக்காலத்திலும் சிறுபான்மையினரை, அவர்கள் முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, அல்லது கிறித்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது ஜைனர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தேசத்திற்கு விரோதமானவர்கள் என்று  கருதிடவில்லை.  அவர்கள் அனைவருமே இந்தியர்கள்தான். அதுதான் நேதாஜி போதனை செய்த சித்தாந்தம். துரதிர்ஷ்டவசமாக அந்த சித்தாந்தத்தின்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.

இது இந்தக் குடியரசுத்தலைவர் உரையில் பிரதிபலித்திடவில்லை. 

Spread the love