May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

2022 பிப்ரவரி 3 பதிவு…

இது ஒரு இளைஞர் விரோத பட்ஜெட்.

# 20 கோடி வேலைகளைக் காணவில்லை. நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் இல்லை.

கிராமப்புற உழைப்பாளிகளின் உயிர்நாடியான  MGNREGA திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு சென்ற ஆண்டு ரூ. 73,000 கோடி என்பது அதிகரிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட மேலும் ரூ. 50,000 கோடிக்கான பணிகளுக்கு உழைப்பாளிகள் பதிவு செய்திருந்தனர். அது நிறைவேற்றப்படவில்லை.

இளம் தலைமுறையினருக்கான எந்த உருப்படியான திட்டமும் இல்லை. இந்த பட்ஜெட் இளம் தலைமுறையினரின் வாழ்வாதாரம் மீது கடும் தாக்குதல்!

இது ஒரு விவசாயி விரோத பட்ஜெட்.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு என வாயால் வடை சுடுகிறது இந்த பட்ஜெட்.

இந்த ஆண்டு 2.37 லட்சம் கோடி விவசாயிகளின் நேரடி கணக்கில் நெல் மற்றும் கோதுமைக்காக குறைந்தபட்ச ஆதாரவிலை போடப்பட்டது என கூறுகிறார் நிதி அமைச்சர். ஆனால் சென்ற ஆண்டு அளிக்கப்பட்ட 2.478 லட்சம் கோடியைவிட இது குறைவு. குறைந்தபட்ச ஆதார விலை என்பதை சட்டபூர்வமாக்க மறுக்கும் இந்த பட்ஜெட் ஒரு விவசாயி விரோத பட்ஜெட்.

இது ஒரு மக்கள் விரோத பட்ஜெட். கடந்த இரு வருடங்களாக பெருந்தொற்று காரணமாக மக்கள் சொல்ல முடியாத துன்பத்தில் உள்ளனர். ஆனால் இந்த பட்ஜெட் உணவு மானியத்தை ரூ 2,86,469 கோடியிலிருந்து  2,06,831 லட்சம் கோடியாக குறைக்கிறது.

உர மானியத்தை 1,40,122 கோடியிலிருந்து 1,05,222 கோடியாக குறைக்கிறது

பெட்ரோல் மானியத்தை 6,517 கோடியிலிருந்து 5813 கோடியாக குறைக்கிறது. மக்கள் வாழ்வாதாரத்தின் மீது கொடூரமான தாக்குதல்.

இந்த பட்ஜெட் யாருக்கானது?

முதல் பணக்கார 10% பேர் தேசத்தின் செல்வத்தில் 64.6% அபகரித்துள்ளனர்.

அடிமட்ட 60% பேரிடம் உள்ள செல்வம் 6%க்கும் குறைவு!

இந்த பெருந்தொற்று காலத்தில் வேலையின்மை/பட்டினி/வறுமை அதிகரித்துள்ளது.

ஆனால் மெகா பணக்காரர்களின் செல்வம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஏன் இந்த மெகா பணக்காரர்கள் மீது கூடுதலான வரி விதிக்கப்படுவது இல்லை? யாருக்கான பட்ஜெட் இது? உள்கட்டமைப்புக்கான மூலதன செலவினத்தில் 35.4% உயர்வு

Spread the love