September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

2022 பிப்ரவரி 12 பதிவு…

உடையும் – தடையும் 

கர்நாடகாவில் தற்போது திட்டமிட்டு மதவெறி தீ பற்ற வைக்கப்பட்டு, அது பற்றி எரியத் துவங்கியிருக்கிறது. இதனை உரிய முறையில், உரிய நேரத்தில் அணைக்காவிட்டால் காட்டுத் தீயாய் பரவி தேசத்தையே நாசமாக்கிவிடும்.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு செல்வது திடீரென பிரச்சனையாக மாறுவதன் பின்னணியை புரிந்து கொண்டால்தான்; இதன் பின்னாலிருக்கும் மதவெறி அரசியலையும் புரிந்து கொள்ள முடியும். 

தற்போது பிரச்சனை வெடித்திருக்கும் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் 2013 லிருந்து பாஜக தனது ” மத வெறி கலவர அரசியல் ” மூலமே காலூன்றியி ருக்கிறது. பாஜக ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருந்தாலும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளைக் கூட தீர்க்க முடியவில்லை. அனைத்திலும் தோல்வியைத்தான் தழுவிநிற்கிறது. இதனால் பாஜக மீது மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. 

சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் 42.06 விழுக் காடு வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. ஆளுங்கட்சியான பாஜக 36.90 சத விகித விழுக்காடு வாக்குகளைப் பெற்று பின்னடைவைச் சந்தித்தது. இந்நிலையிலேயே அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற விருக்கிறது. 

தற்போதிருக்கும் சூழலில் பாஜக படு தோல்வியை தழுவும் என்பதே கள எதார்த்தம். இதனை மாற்றி மக்களைத் திசை திருப்பி வழக்கம்போல் தனது மதவெறி கலவர அரசியல் மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே தற்போதைய ஹிஜாப் விவகாரம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்து கொள்ளவும், கிறித்தவர்கள் சிலுவை அணியவும், இந்துக்கள் பல வகையான திலகங்கள், திருநீறு பூசிக் கொள்ளவும் அனுமதிக்கிறது. 

அதன் நீட்சியாகவே ஹிஜாப் அணியும் முறையும் இருக்கிறது. கர்நாடக அரசின் சீருடை குறித்த உத்தரவு எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பதாகவே இருக்கிறது. காரணம் உத்தரவில் சமத்துவத்தை, பொது அமைதியைக் குலைக்கும் உடைகள் வேண்டாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது. 

இத்தனை காலமும் சமத்துவத்தையும், பொது அமைதியையும் ஏற்படுத்திய அதே உடை இப்போது மட்டும் எப்படி அதற்கு நேர் எதிராக மாறியது.? அப்படி மாற்றியவர்கள் யார்.? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்.? மேலும் கல்லூரி வளர்ச்சிக் குழுக்கள் நிர்ணயிக்கும் சீருடையை ஏற்க வேண்டும் என்கிறது அந்த உத்தரவு. கல்லூரி வளர்ச்சிக் குழுவில் பெரும்பாலும் பாஜக எம்.எல்.ஏ – க்களே தலைவராக இருக்கின்றனர். 

அப்படியிருக்கையில் எப்படி ஓநாய் ஆட்டை பாதுகாக்கும் என்பதை நம்ப முடியும்.? 

ஹிஜாப் பெயரைச்சொல்லி இஸ்லாமிய மாணவிகளிடமிருந்து கல்வியைப் பறிப்பதுதான் பாஜகவின் நோக்கம். இது ஹிஜாப் மீதான வெறுப்பல்ல , இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பே ஆகும். இதனை ஒரு போதும் மக்கள் அனுமதிக்கக் கூடாது . இந்தியாவின் மதநல்லிணக்கத்தை  பாது காக்க பாஜகவைத் தனிமைப்படுத்திட வேண்டும்..

நன்றி..

தீக்கதிர் 

10.02.2022

Spread the love