January 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

2014ஆம் ஆண்டில் மோடி கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன

என்று நினைவிருக்கிறதா..?

தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்..

தற்கொலைகள் நின்றுவிடும்.,

சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவை விட 50 சதவீதம் கூடுதலாக விலை நிர்ணயிப்போம்.,

விதை உரம் வாங்க மானியம் கொடுப்போம்.,

பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு கொடுப்போம்..

விவசாய தொழிலாளர் கிராமப்புற வேலை திட்டத்தை இரு நூறு நாட்களுக்கு அதிகரிப்போம்..

அதிக கூலி தருவோம்..

பெண்களுக்கு எதிரான அக்கிரமங்களுக்கு முடிவு கட்டுவோம்..

ஆகாயத்தை எட்டும் விலைவாசியைக் குறைப்போம்..

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம்..

எல்லோருக்கும் நல்ல காலம் பிறக்கும்..

புதிய இந்தியா பிறக்கும்..

இவற்றில் எதெது நிறைவேறியிருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா?

ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக புதிய புதிய திட்டங்களை, புதிய புதிய இந்திப் பெயர்களில் அறிவித்துக் கொண்டே இருப்பதுதான் மோடி பாணி ஜனநாயகம்.

ஏற்கனவே ஆண்டவர்கள் நாட்டிற்கு எதுவுமே செய்யவில்லை என்றும் தான் பிரதமர் ஆக வந்தபிறகே நாட்டிற்கு நல்ல காலம் பிறந்தது என்றும் பிரச்சாரம் செய்வது அவரது இன்னொரு உத்தி.

Spread the love