September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஸ்டேன் சுவாமி

“தரித்திரர்களுக்கு உணவு நல்கும்போது நீங்கள் என்னைப் புனிதர் என்கிறீர்கள். அவர்கள் எப்படி தரித்திரர் ஆனார்கள் என்று கேட்கும்போது கம்யூனிஸ்ட் என்கிறீர்கள்”. சேரிகளின் பிஷப் எனப் போற்றப்பட்ட ஹெல்தர் காம்ரா அவர்களின் வார்த்தைகள்தான் இவை. இவற்றைத்தான் காலஞ்சென்ற ஸ்டேன் சுவாமி அவர்கள் தாரக மந்திரமாகக் கொண்டார். சிறையிலிருக்கும் போது சுவாமி அவர்கள்,”கூட்டில் அடைக்கப்பட்ட பறவைக்கும் பாட இயலும்”… பாதிரியார் ஒருவருக்கு எழுதிய கடிதத்தின் கடைசி வரிதான் இது. அவரது மரணச் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் ராஞ்சி ஆர்ச் பிஷப்,”கூட்டில் அடைக்கப்பட்ட பறவை சொர்க்கத்தில் பாடுகிறது. நம்முடைய கைகளில் இரத்தம் புரண்டுள்ளது”என்றார். மனிதர்களுக்காகப் பாடியவர் அவர். மனித உரிமைகளுக்காக அவர் அனுபவித்த துன்பங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. யுஏபிஏ மூலம் குற்றம் சுமத்தப்பட்டு 84 வயதில் ஜூலை 5 அன்று சிறைக்கைதியாகவே மரித்துப் போன ஸ்டேன் சுவாமிக்கு மனித உரிமை செயல்பாட்டாளர்களின் மனதில் என்றும் உரிய இடம் உண்டு. ஆனால் பிரதமர் மோடி இவரது மரணத்திற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

படம் : Stan Swamy

Spread the love