January 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

வைணவ சமய ஆராய்ச்சியாளர் ஜாகிர் உசேனுக்கு ரெங்கநாதர் கோவிலுக்குள் அனுமதி மறுப்பு


திருச்சிராப்பள்ளி, டிச.12- திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவி லுக்குள் புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞரும் வைணவ சமய ஆராய்ச்சியாளரு மான ஜாகிர் உசேனை அனுமதிக்காதது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:  திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவி லுக்குள் புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞரும் வைணவ சமய ஆராய்ச்சியாளருமான ஜாகிர் உசேனை கோவிலுக்குள் அனுமதிக்காமல் ரெங்கா கோபுரம் அருகே தடுத்து நிறுத்தி, அவரது மதத்தை சொல்லி உள்ளே வரக்கூடாது எனக் கூறி தகாத வார்த்தை களால் பேசி திருப்பி அனுப்பியுள்ளனர்.  ஜாகிர் உசேன் குழந்தைப் பருவம் முதலே ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் வந்து ரெங்கநாதரை வழிபடும் பழக்கம் கொண்டவர். மேலும் வைணவ சமயம் குறித்து ஆராய்ச்சிகள் செய்து சில நூல்களை எழுதி யுள்ளார். பரத நாட்டிய கலையில் பல விருதுகளை பெற்றுள்ளார்.

எனவே இவ்வாறான ஒரு கலைஞரை மதத்தின் பெயரால் சமய நல்லிணக்கத்திற்கு பல நூறு ஆண்டுகாலம் பெயர் பெற்ற ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் மத வேற்றுமை உருவாக்கும் விதமாக பேசி தகராறு செய்த நபர்கள் மீது காவல்துறை உரிய சட்ட நட வடிக்கை எடுத்திடவும், ஜாகிர் உசேன் ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் செல்ல உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுகிறோம். மேலும் சென்ற மாதம் செப்டம்பர் 5-ந் தேதி பாஜக மாநிலத் தலைவர் 200 மேற்பட்ட கட்சியினரை அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு உள்ளே சென்று தொலைக் காட்சியை வைத்து பிரதமர் மோடியின் உரையை ஒலிபரப்பியுள்ளார்.  ஆலயங்களில் கட்சி அரசியல் நடத்துவதைக் கண்டித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இந்த விஷயத்தில் இதுவரை காவல்துறையும் அற நிலையத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மீண்டும் இது போல் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.

காவல்துறை ஏற்கனவே நடந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போதைய சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். கோவிலுக்குள் எல்லோருக்கும் சமமாக வழிபாட்டு உரிமையில்லை. ஆனால் பாஜகவுக்கு கட்சி கூட்டம் நடத்த உரிமை உண்டு என்பது எந்த விதத்திலும் சரியாகாது. எனவே இது குறித்து அரசும், காவல் துறையும் முறையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், “திங்கள்கிழமை விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், குற்றச்சாட்டுகள் உண்மை யாக இருந்தால் சம்மந்தப்பட்ட நபர் மீது  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனிடையே, இச்சம்பவத்தை உறுதி செய்த கோவில் அதிகாரிகள், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப உள்ளதாகக் கூறியுள்ளனர்.

Spread the love