மனிதன் அறிவியல் வளர்ச்சி.. முன்னேற்றம் என்ற பெயரில் எத்தனையோ வேண்டாதவற்றைச் செய்கிறான். அவற்றில் ஒன்று.. மிதமிஞ்சிய பிளாஸ்டிக் பயன்பாடு.
பிளாஸ்டிக் கவரில் பொதிந்து வராத உணவுப் பொருட்களே இல்லை.
நீரைக் கூட பிளாஸ்டிக் பாட்டிலில் வாங்கித்தான் அருந்துகிறோம்.
சமீபத்தில் ஆய்வு ஒன்றில் கடலில் பிடிக்கப்பட்ட மீன் உடலில் 18 வகை பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மற்றொரு ஆய்வு.. கர்ப்பிணிப் பெண்களின் பனிக்குட நீர் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது. அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தக் காத்திராமல் நாமே அதன் பயன்பாட்டைக் குறைக்க முன்வரவேண்டும். இல்லையெனில் நமது ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அதற்கு விலையாய்த் தரவேண்டியிருக்கும்.
விதைப்பதைத்தானே அறுக்க முடியும்!
-நன்றி : நக்கீரன் இதழ்
விதைப்பதைத்தானே அறுக்க முடியும்!
Spread the love
More Stories
அசிம் பிரேம்ஜி என்ற ஆளுமை
கடற்கரை மேலாண்மைத் திட்டத்தில் தமிழகம் விடப்பட்டது ஏன்?
கூட்டிக் கழிச்சுப் பாருங்க…!!