பள்ளி மாணவர்களிடம் பாடநூல்களுக்கு வெளியே மற்ற நூல்களையும் வாசிக்கும் வழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காகப் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் எடுத்துவரும் நடவடிக்கைகள் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் ஒரு புதிய உற்சாகத்தைத் தோற்றுவித்திருக்கின்றன.
பள்ளி நூலகங்களுக்கான தனி அறை ஒதுக்கீடு, அருகிலுள்ள நூலகங்களுடன் இணைந்த செயல்பாடு, இளம் வாசகர்கள் வட்டம், புத்தகங்களை நன்கொடையாகப் பெறுவது, நூலக நூல்களை வீட்டுக்கு எடுத்துச்செல்ல அனுமதிப்பது, வாசிப்பு சார்ந்த படைப்பாக்கங்களை ஊக்குவித்தல், வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள், நூலகப் பயணம், வாசிப்பு சார்ந்த உண்டு உறைவிடப் பயிற்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு வெளிநாடுகளுக்கும் தேசிய அளவிலும் அறிவுப் பயணம் செல்லும் வாய்ப்பு என்று ஆணையரின் சுற்றறிக்கை பள்ளிகளுக்கு வெளியில் பொது வாசகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பள்ளி மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை அறிமுகப்படுத்திவிட்டாலே போதும். ஒட்டுமொத்த சமூகத்தின் பண்பாடும் பலப்பட்டுவிடும். அறிவை வளர்ப்பதற்கான முதற்படி வாசிப்பு மட்டுமே.
- ராணிதிலக், கவிஞர், பள்ளி ஆசிரியர். தமிழ் இந்துவில் வந்த கட்டுரையிலிருந்து
More Stories
அண்ணன் பேச்சுக்கு மறுபேச்சு இருக்கப்பிடாது..!
கல்விக் கனவும், காலைச் சிற்றுண்டியும்
தண்டனை ஒரு தீர்வு அல்ல