மு. முருகேஷ்
உரிமை காக்கப் போராடுபவரே
கொஞ்சம் கேளுங்க…
நம்மை ஆள்பவர்கள் செய்யிற
அக்கிரமத்தைப் பாருங்க…
எவ்வளவு காலம் போராடினாலும்
கண்டுக்க மாட்டாங்க…
ஆளுக மேலே காரை ஏத்தி
அடக்கப் பார்ப்பாங்க…
விமானமேறி கையை ஆட்டி
வெளிநாடு போவாங்க…
உள்நாட்டிலே பெட்ரோல் விலையை
பறக்க விடுவாங்க…
எல்லாத்தையும் அரசியலா பார்க்காதே
உபதேசம் செய்வாங்க…
மதவாத அரசியல மட்டும்
செய்யாம விடமாட்டாங்க…
மனித உரிமை காப்போமுனு
கூட்டத்திலே பேசுவாங்க…
நாம கூட்டமா கூடி நின்னாக்கூட
அடிச்சு விரட்டுவாங்க…
ஆட்சியிலே ஊழலே இல்லையினு
அழகாகச் சொல்றாங்க…
இப்படி மக்களை நம்ப வச்சே
ஊழல்பெருச்சாளி ஆகிட்டாங்க…
இவரைப் போல யோக்கியரு
யாருமில்லேன்னு சொல்றாங்க….
இவரு இருக்கிறவரை நாடு முன்னேறாதுன்னு
நல்லவங்க சொல்றாங்க…
Spread the love
More Stories
நிர்வாணமாகிவிட்டது நீதிமன்றம்
சாமிகள்
பழைய கதையும் புதிய கூட்டணியும்…