1992-ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாளன்று பாரதீய ஜனதா கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான கர சேவகர்களால் அயோத்தியில் 16ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடெங்கிலும் ஏற்பட்ட கலவரங்களில் 2000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்திய மக்களுக்கு அளித்துள்ள உறுதிமொழி தகர்க்கப்பட்டது. அது இன்றளவும் சரி செய்யப்படவில்லை.திட்டமிட்டு தாக்கி உடைத்தவர்கள் எவருமே இன்றளவும் தண்டிக்கப்படவில்லை.
மாறாக அவர்களே இந்த நாட்டை ஆள்பவர்களாகவும் உயர்ந்துள்ளார்கள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம் என்று கூறிய உச்சநீதிமன்றம் மசூதியை இடித்த குற்றவாளிக்கே அந்த இடத்தை கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. நீதிக்கு புறம்பான இந்த தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கொகாய்க்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது
More Stories
2022 ஜுன் 18 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 ஜுன் 17 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 ஜுன் 16 பதிவுக்கு மூன்று படங்கள்…