ஏர் முனையின்
கூர் தெரியாமல்
மோதி(டி)ய குள்ளநரிகள்
கூழைக் கும்பிடு போடும்!
கிழக்கு மட்டுமல்ல
இனி வடக்கு திசையின்
வானமும் சிவக்கும்…
உழவனை உரமேற்றிய
கதிரவனின் செங்கதிர்
காவி இருளை விரட்டும்…
துப்பாக்கியைத் தூக்கு
உன் பீரங்கியையும் தூக்கு
அத்தனையும் எதிர் கொள்ளும்
எம் கோதுமைப் படை…
கோடிக்கால் பூதத்தின்
காலடியில் மண்டியிட்டது
மோடி – ஷா படை…
தேசம் விழிக்கும் வரை
முழங்கிக் கொண்டே யிருக்கும்
சங்க நாதம்…
–இலமு
(நன்றி : தீக்கதிர்)
Spread the love
More Stories
என்னத்தைச் சொல்ல..?
நிர்வாணமாகிவிட்டது நீதிமன்றம்
சாமிகள்