சு.வெங்கடேசன்
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் 171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன என்கிறார் ஒன்றிய நிதி இணை அமைச்சர். அமைச்சரின் பதில்கள் பொதுத்துறை நிறுவனங்களின் நல்ல செயல்பாட்டை எடுத்துக் காட்டுகின்றன. தனியார்மயம், பங்கு விற்பனைக்கான நியாயங்களாக எப்போதுமே அரசாங்கம் கூறுவது என்ன? அவை நட்டத்தில் இயங்குகின்றன என்பதே. மக்கள் வரிப் பணத்தை குழியில் போட முடியுமா போன்ற வழக்கமான வசனங்கள் வேறு. 171 நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன என்பது மட்டுமின்றி 97 நிறுவனங்கள் ‘ரத்னா’-க்களாக உள்ளன என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்னாக்கள் என்றால் அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்கள் என்று பொருள். ஆனால் இந்த ரத்னாக்களும் தனியார்க்கு விற்கப்படும் என்றால் இவர்கள் சொல்லி வந்த நட்டக் கதையாடல் என்ன ஆனது? ஆட்சியாளர் சொல்வது போல குழிகளில் பணம் போடப்படவில்லை. பொதுத் துறை நிறுவனங்கள் தங்கக் குழிகளாக உள்ளன என்பதே உண்மை என்பது இப்பதிலில் தெளிவாகிறது. எதற்காகத் தனியார் மயம்?
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்
More Stories
நிறப்பிரிகை 4
உள்ளத்தோடு உரையாடுதல்
அம்பது நாளில் அம்பானி ஆவது எப்படி?
பலரது வாழ்வைச் சிதைக்கும் உபா சட்டம்