June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

யார் வீட்டு சொத்து..?

கடந்த சில நாட்களில் வந்த இரண்டு செய்திகள் பெரிதும் கவனம் பெறாமல் போயின , ஒன்று திவாலாகி (bankrupt) ஆகி விட்ட வீடியோகான் நிறுவனத்தை விற்பது  குறித்தது. மற்றொன்று மத்திய பொதுத்துறை நிறுவனமான CEL ( Central Electronics Limited ) ஐ தனியார் மயமாக்குவது குறித்தது . 

வீடியோக்கான் நிறுவனம் சரியாக நடத்த முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வந்திருக்கிறது .தற்சமயம் பல்வேறு வங்கிகளிடம் 65,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி வைத்திருக்கிறது . கடனை கட்ட முடியாமல் வீடியோகான் திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது . அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்த நிறுவனத்தை விற்று அதில் வரும் பணத்தை கடன் வழங்கிய வங்கிகளுக்கு பிரித்து அளிக்க வேண்டும் . 

வீடியோகான் நிறுவனத்தை  தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT ) Twin Star technologies எனும் நிறுவனத்துக்கு விற்பதாக முடிவு செய்கிறது  65  ஆயிரம் கோடி கடன் வாங்கிய ஒரு நிறுவனத்தை வெறும் 3 ஆயிரம் கோடிக்கு விற்கலாம் என்று NCLT முடிவு செய்கிறது . 

வங்கிகள் இழக்கும் ஒவ்வொரு ரூபாயும் எப்படியோ சுற்றி வளைத்து பொது மக்கள் தலையில்தான் விடியும், வரிகளாக.

மற்றொரு நிகழ்வு மேலே சொன்ன் CEL நிறுவனம் தனியாருக்கு விற்கப்படுவது  குறித்தது . இந்த பொதுத்துறை நிறுவனம் தற்சமயம் லாபத்தில் இயங்கிக்கொண்டிருப்பது , வருடம் ஒன்றுக்கு தோராயமாக 730 கோடி அரசுக்கு லாபம் அளிக்கக்கூடிய நிறுவனம். கைவசம் 1500 கோடிக்கு மேல்  ஆர்டர்களை வைத்துள்ள நிறுவனம். .இந்த நிறுவனம் வெறும் 250 கோடிக்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டுள்ளது.

நல்ல முறையில் லாபத்துடன் இயங்கிவரும் ஒரு முக்கிய பொதுத்துறை நிறுவனத்தை இவ்வளவு குறைவான விலைக்கு விற்க வேண்டிய அவசியம் என்ன ? இது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த முக்கிய R&D நிறுவனங்களை அரசு கைகழுவி விட்டால் பின எப்படி தொழில்நுட்ப தன்னிறைவு சாத்தியமாகும் ?

நாட்டில் இதுதான் நடக்கிறது  தேசத்தின் சொத்துக்கள் எல்லாம் கூறு போட்டு அடிமாட்டு விலைக்கு வேண்டியவர்களுக்கு விற்கப்படுகிறது . இன்னொரு பக்கம் தேசபக்தி , பிரதமர் உயிருக்கு ஆபத்து என்று கவனத்தை திசைதிருப்பிவிட்டு விம்மிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய நிலையில் இந்தியா பெருமுதலாளிகளுக்கும் , பெரும் தொழிற்குழுமங்களுக்கும் சொர்க்கபூமியாக திகழ்கிறது . ஆடித்தள்ளுபடி விலையில் national assets !  

-(IC : Business India )

Spread the love