# மோடி : தேசத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது.. இனி எல்லா மாநிலங்களிலும் இரட்டை எஞ்சின் ஆட்சிதான்.. புதிய இந்தியா பிறந்துவிட்டது.. உங்கள் வாழ்க்கை இனி பிரகாசமாக இருக்கும்…
சப்கா சாத்.. சப்கா விகாஸ்!
மக்கள் : ஐயோ.. ஆளை விடுங்களேன் ! .. என்று கதறிக் கொண்டே மக்கள் சிதறி ஓடுகின்றனர்.
# மோடி: எங்கள் ஆட்சியில் ஏழைகள் லட்சாதிபதிகள் ஆகப் போகிறார்கள்!
மக்கள் குரல்: கோடீஸ்வரர்களா இருந்தவங்களை லட்சாதிபதிகளா இறக்கிருக்கோம்கற உண்மையைச் சொல்ல மாட்டீங்களே..?
# மோடி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு டிக்கட் வாங்கிக் கொடுத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி கொரோனாவை நாடெங்கும் பரப்பிவிட்டதே காங்கிரஸ்தான்..
மக்கள் குரல் : அவங்க வேலைகளைப் பறிச்சு மாநகரங்கள்லே இருக்க இடம் இல்லாமல் செய்து பண்டபாத்திரங்கள், குழந்தைகளையெல்லாம் தலையிலே சுமந்துகிட்டு கிலோமீட்டர் கணக்கில் நடக்க வச்சு, பல பேரோட உயிரைப் பறிச்சது யாரோட வேலை..? சொல்லுங்க ஜீ,, !
# மோடி: விளம்பரப் பலகைகளில் உள்ள எனது படம் பாஜக தொண்டர்களைத்தான் சித்தரிக்கிறது.
மக்கள் குரல் : ஏமார்றவங்க இருக்கறவரை உங்க பாடு கொண்டாட்டம்தான்!
# மோடி: என்னை உலகமே பாராட்டுகிறது..
மக்கள் குரல் : யாரங்கே? ஜீ முன்னாலே உள்ள கண்ணாடியை வேற எங்கயாவது கொண்டுபோய் வைங்களேன்!
# மோடி: நான் விஷ்வகுரு ஆயிட்டேன்.. உலக நாடுகளுக்கெல்லாம் நான் தலைமை ஏற்கும் காலம் வந்தாச்சு..
மக்கள் குரல் : ஜீ.. கனவு கண்டது போதும்.. பொழுது விடிஞ்சாச்சு.. எந்திரிங்க!
# மக்கள் கேள்வி : தமிழக நகர்ப்புறத் தேர்தலின்போது ஒரு சலவைக் கடைக்குப் போயி, இஸ்திரிப் பெட்டியை வாங்க துணியைத் தேச்சுக் குடுத்தாரே உங்க அண்ணாமலை…
மோடி: அதிரடியாப் பேசறதிலே கில்லாடின்னுதான் அவரை அங்கே கொண்டுபோய் விட்டோம்.. நாடகம் ஆடறதிலேயும் தம்பி என்னை மிஞ்சிடுவார்னு நெனக்கறேன்!
# அமித் ஷா வாக்குறுதி : உ.பி.-யிலே பாஜக வெற்றி பெற்றால் ஹோலி பண்டிகைக்குள் அனைவருக்கும் இலவச கேஸ் சிலிண்டர்.. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவோம்!
மக்கள் குரல் : வாக்குறுதிகளை அள்ளி வீசறதில உங்க நம்பர் டூ உங்களை ஓவர்டேக் பண்ணிடுவார் போலருக்கு ஜீ..
என்னன்னு கவனிங்க..
# மக்கள் கேள்வி : ஹிஜாப் சர்ச்சை…
மோடி: அது உருவானதற்குக் காரணம் நாங்களே..
அதை ஊதிப் பெரிசாக்கினதும் நாங்களே..
வாலிபர்களை காவித் துண்டு போடவச்சு
விசிறிவிட்டு குளிர் காய்வதும் நாங்களே…
# அண்ணாமலை : தமிழ்நாடு நகர்ப்புறத் தேர்தல்கள்ல ரெண்டாவது பெரிய கட்சி நாங்கதான்னு ப்ரூவ் பண்ணிட்டோம்.. இப்ப என்ன செய்வீங்க.. இப்ப என்ன செய்வீங்க,,?
மக்கள் குரல் : அது சரிதான்.. முன்னால உங்களுக்கு ஒத்தை ஓட்டு பாஜகன்னு பேரு.. இப்ப அதை ஜீரோ ஓட்டு பாஜகன்னு சொல்ல வச்சிட்டீங்க.. வெல் டன் அண்ணாமலை!
# அண்ணாமலை : அனைத்து சாதி மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை..
மக்கள் குரல் : பொய் சொல்றதுதான் உங்க வகையறாவுக்கு லட்டு சாப்பிடறது மாதிரியாச்சே.. !
# மக்கள் கேள்வி : தமிழ்நாடு நகர்ப்புற தேர்தல்கள்ல தனியா நின்னு 308 வார்டுகள்லதானே ஜெயிச்சிருக்கீங்க?
அண்ணாமலை : அடுத்த சட்டமன்றத் தேர்தல்ல அதிமுகவை மிரட்டி அதிக இடங்களை வாங்கி அவங்க முதுகுல ஏறி ரெண்டாவது கட்சியா முதல்ல வளருவோம்.. பிறகு ஆளும் கட்சியாவே வருவோம். நிதிஷ்குமார் கதை தெரியும்ல?
# மோடி: தாய்மொழிவழிக் கல்விக்கும் குழந்தைகளின் மனவளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது..
மக்கள் குரல் : இதை நீங்க சொல்றீங்களா..? தேசியக் கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து தாய்மொழிகளையெல்லாம் ஆஸ்பத்திரி பெட்ல சேர்க்க முயற்சி பண்ணிட்டு இந்த ஜம்பம் வேறயா?
# மக்கள் கேள்வி : ஹரித்துவார்ல சாமியார்கள்லாம் கூடி நின்னு முஸ்லிம்களைக் கொல்லுவோம்னு கோஷம் போட்டாங்களே.. அது உங்க காதில விழலியா? வாய்வார்த்தைக்குக் கூட நீங்க அதைக் கண்டிக்கலியே?
மோடி: அது சம்பந்தமா எந்த டேட்டாவும் எங்க கிட்ட இல்லியே..?
# மக்கள் கேள்வி : தேச விரோதிகள் யாரு.. தேச பக்தர்கள் யாரு..?
மோடி: முஸ்லிம்களை இந்திய ஆட்சியிலேருந்து விரட்டியது யாரு? பிரிட்டிஷ்காரங்க..
அவங்களுக்கு எதிராப் போராடின காங்கிரஸ்காரங்களும் கம்யூனிஸ்டுகளும்தான் தேசவிரோதிங்க!
அந்தப் போராட்டத்தில கலந்துக்காதவங்கள்லாம் தேச பக்தர்கள்.. அவ்வளவுதான்! எங்க டெஃபனஷன் ரொம்ப சிம்பிள்!
சிறிதளவு கற்பனை : ராஜகுரு
(நன்றி .. தீக்கதிர் 05-03-2022)
More Stories
2022 மே 17 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 மே 16 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 மே 14 பதிவுக்கு மூன்று படங்கள்…