கொளுத்தும் வெயிலில்
சுடுகின்ற மணல் சாலையில்
கனவுகளைத் தேக்கிய விழிகளில்
குடும்பச் சுமைகளைச் சுமந்த மனதில்
செங்கல் பாரங்களை தலையில்
ஏற்றி நடக்கின்ற துன்ப நிலையில்
எண்ணிரண்டு பதினாறு வயதில்
காதல் வரும் பருவ இளமையில்
ஆசை ஒதுக்கி வெறுத்த உறவில்
கல்வி கற்றதில்லை பள்ளியில்
வறுமை துன்பம் சூழ்ந்த பொழுதில்
உழைக்கப் புறப்பட்டேன் சிறுவயதில்
கலவை கொண்டுவா அவசரப்படுத்துறான்
கொத்தனாரு தினுசா சிரிக்கிறான்
தட்டை வாங்கும்போது கையிலே கிள்ளுறான்
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது
மனம் மேலும் கீழும் புரளாது
கரம் குவித்து வணங்குகிறேன்
அண்ணா மனதை பக்குவப்படுத்திடு..
மனதை நல்லா பக்குவப்படுத்திடு !
எம்.ஆர்.வி. ஜீவா ( 9944087578)
Spread the love
More Stories
என்னத்தைச் சொல்ல..?
நிர்வாணமாகிவிட்டது நீதிமன்றம்
சாமிகள்