May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பேராசிரியர் ஆர். ராமானுஜத்துக்கு ‘டைம்’ விருது

உலகம் முழுவதும் உள்ள கணித அறிஞர்கள், விஞ்ஞானிகள் ஒன்று கூடி விவாதிப்பதற்காக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘டைம்’ (கூஐஆநு -கூநஉhnடிடடிபல யனே ஐnnடிஎயவiடிn in ஆயவா நுனரஉயவiடிn) என்ற சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் கணித கல்வியில் சிறப்பான பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு ‘நளினி பாலா’ நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.
அதன்படி நடந்த 10-வது டைம் மாநாட்டில் புதுமையான கற்பித்தல் முறைகள், தொழில்நுட்பங்களுடன் கணிதத்தை ஒருங்கிணைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதன் ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், இந்த மாநாட்டில் சென்னை தரமணியில் உள்ள இந்திய கணித அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கணிதப் பேராசிரியர் ஆர். ராமானுஜத்துக்கு நளினி பாலா நினைவு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை வழிநடத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருபவர் ராமானுஜம். அவருக்கு புதிய ஆசிரியனின் வாழ்த்துகள் !

Spread the love