May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பேரன்பு மிக்க புதிய ஆசிரியன் வாசகர்களுக்கு, வணக்கம்.

எனது எண்ணங்களை வெளிப்படுத்த புதிய ஆசிரியன் இதழ் எனக்கு சிறப்பான வாய்ப்பினை நல்கியது. தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்துள்ளேன். கட்டுரைத் தொகுப்பொன்றும் வெளிவந்துள்ளது எனக்குப் பெருமை சேர்த்தது. விரைவில் 91 வயதைக் கடக்க உள்ளேன். கல்வி உலகில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவை விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். மூப்பின் காரணமாக அப்பணியினை ஏற்க என்னால் இயலவில்லை. பணியில் இருக்கும் ஆசிரியர்கள் இப்பணியினை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனாலும் அவ்வப்போது எழுதுவேன்.
புதிய ஆசிரியன் மேலும் பொலிவோடு வெளிவர எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாசகர்களுக்கு எனது நன்றி மிக்க வணக்கம்.
அன்புள்ள,
ச.சீ. இராஜகோபாலன்

Spread the love