September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பேரன்ட்ஸ்… பசங்களை ஃபாலோ பண்ணுங்க!


அ.குமரேசன்


குட் மார்னிங் சில்ரன். இப்ப என்ன கிளாஸ் தெரியும்ல?
யெஸ் மேம். ஸ்டோரி டெல்லிங் கிளாஸ்.
கரெக்ட். ஸ்டோரி உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்தானே?
யெஸ் மேம்.
ஓகே. இப்ப ஸ்டோரிக்குள்ள போவோமா? எல்லாரும் மியூட் பண்ணிட்டு ஸ்டோரிய லிஸன் பண்ணுங்க.

ஒன்ஸ் இன் எ வில்லேஜ், சம் ஃபார்மர்ஸ் வேர் டிஸ்கஸ்சிங் எபௌட் எ பிராப்ளம். உங்களுக்கெல்லாம் வில்லேஜ்னா தெரியும்ல? யாராச்சும் அன்மியூட் பண்ணிட்டுச் சொல்லுங்க பார்க்கலாம்
வில்லேஜ்னா கிராமம் மேம்.
வெரிகுட். அங்கே ஃபார்மர்ஸ் ஏதோ டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தாங்க. ஃபார்மர்னா சிங்குலர், ஃபார்மர்ஸ்னா புளூரல்னு தெரியும்ல?
யெஸ், மேம்.
குட். ஃபார்மர்ஸ்னா யாருன்னும் தெரியும்தானே?
….
என்ன எல்லாரும் சைலன்ட்டா இருக்கீங்க? தெரியலையா? நோ பிராப்ளம். தெரிஞ்சவங்க மட்டும் இப்ப ஆன்ஸர் பண்ணுங்க, ஓகேயா?… யாரு அது, ஹேண்ட் ரெய்ஸ் பண்ணியிருக்கிறது? மஞ்சுவா? உனக்கு ஆன்ஸர் தெரியுமா செல்லம்? எங்கே, சொல்லு பார்க்கலாம்.. ஃபார்மர்னா யாரு?
மேம். ஃபார்மர்னா விவசாயி மேம்.
சூப்பர் குட்டி. ஃபார்மர்ஸ் என்ன செய்வாங்க தெரியுமா?
தெரியும் மேம், டிவி-யில பார்த்திருக்கேன்.
எக்ஸலன்ட். இப்படித்தான் ஸ்டூடென்ட்ஸ் எல்லாருமே யூஸ்ஃபுல்லா டிவி பார்த்து நாலெட்ஜ் வளர்த்துக்கணும். சரி மஞ்சு, ஃபார்மர்ஸ் என்ன செய்றாங்க?
கேப்பிடல் சிட்டியில. ஆங். அது என்னது. ஆங், போராட்டம் நடத்திக்கிட்டிருக்காங்க மேம்.
அய்யய்யோ… பேரன்ட்ஸ் கவனிங்க. பசங்க டிவியில நல்ல விசயங்களைத்தான் பார்க்கிறாங்களான்னு ஃபாலோ பண்ணுங்க.
( [email protected])

Spread the love