ஸ்காட்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் ஜனவரி 16 ஞாயிறன்று தொடங்கிய உலகப் பொருளாதார மாநாட்டில் இந்தியாவில் அதிகரித்து வரும் சமத்துவமற்ற சமூகம் குறித்த அறிக்கையை ஆக்ஸ்பாம் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் பல விவரங்கள் உள்ளன. நாட்டில் உள்ள 55.5 கோடி பேரின் ஒட்டுமொத்த சொத்துக்கு இணையான சொத்தை வெறும் 98 பெரும்பணக்காரர்கள் மட்டும் வைத்திருக்கின்றனர். இந்தியாவிலுள்ள வெறும் 10 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பை வைத்து, அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டில் அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வியை இலவசமாக வழங்கலாம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் பெரும்பணக்காரர்கள் பலரின் சொத்து இரு மடங்காக உயர்ந்துள்ளது. 142 பெரும்பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு ரூ. 53 லட்சம் கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. கல்வி, சுகாதாரம், சமூகபாதுகாப்புக்கு அதிகமான அரசு நிதியை திருப்பிவிட வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் சமத்துவமின்மையை குறைக்க முடியும், இந்தத் துறைகளை தனியார்மயமாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மிகப்பெரும் கோடீஸ்வரர்களுக்கு சொத்து வரியை அல்லது புதிய வரியை விதித்து வருவாயைப் பெருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரும் பணக்காரர்களுக்கு சொத்து வரி விதிக்க வேண்டும்
Spread the love
More Stories
அசிம் பிரேம்ஜி என்ற ஆளுமை
கடற்கரை மேலாண்மைத் திட்டத்தில் தமிழகம் விடப்பட்டது ஏன்?
விதைப்பதைத்தானே அறுக்க முடியும்!