ஐவி. நாகராஜன்
காவிரி நீருக்கான சட்டப்போராட்டம் 1983-ல் துவங்கி 2018 வரையிலான 35 ஆண்டுகள் நடந்தது. இதை நினைக்கும்போது கவலையும்,வருத்தமும் உண்டாகிறது. அத்துடன் 35 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகும் தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்கவில்லையே என்பதை நினைத்தால் மேலும் வருத்தமாக உள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்த தமிழக விவசாயிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் இந்த தீர்ப்புகள் வெறும் ஏட்டுச் சுரைக்காய் போல் மாறிவிடக்கூடாது என்ற அச்சம் கலந்த கவலையைத் தெரிவித்தனர்.
அது மட்டுமல்ல, தமிழக விவசாயிகளுக்கும் தமிழக நலன் விரும்பும் அனைவருக்குமே சட்டத்தால் கிடைத்த வெற்றி வெறும் காகித வெற்றியாக அமைந்துவிடக் கூடாது என்று எதிர்பார்க்கின்றனர்.
இதில் பெரும்பாலானோர் கூறுவது, இரு மாநில அரசுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை பரஸ்பரம் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான். தமிழகத்தின் முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது இரண்டு முறை மேட்டூர் அணைக்கு உரிய முறையில் தண்ணீர் வரவில்லை. ஒரு முறை கர்நாடகாவில் குண்டுராவும் மற்றொரு முறை ராமகிருஷ்ண ஹெக்டேயும் முதல்வர்களாக இருந்தபோது அவர்களுடன் எம்ஜிஆர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டு தமிழகத்திற்குரிய நீரைப் பெற முடிந்தது. பிரச்சனைகள் வரும்போதெல்லாம் இந்த சம்பவங்களைத்தான் பலரும் உதாரணமாகக் கூறுகின்றனர். இதுபோன்ற அணுகுமுறையைத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் கடைப்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(தொடர்புக்கு : 9787368271)
(தொடரும்)
More Stories
மனித வாசனைகள்
வாக்கு கடன்
அறைகூவல்