June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பூவிரியும், காவிரியின் .. 6

ஐவி. நாகராஜன்
விவசாயிகள் தாக்கல் செய்த மனுவை ஆதரித்து அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தனது அரசின் சார்பில் பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்தார். வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஒருபுறம் இருக்க 1990 மே மாதம் 4-ம் தேதி மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதி மன்ற அமர்வு காவிரி நதி நீர் தீர்ப்பாயம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பிரச்சனைக்கு தீர்வுகாண மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தை வி.பி.சிங் அரசு அமைத்தது. அது 1991-ல் ஒரு முக்கியமான இடைக்கால தீர்ப்பை வழங்கியது. அதாவது கர்நாடகம் காவிரியின் 205 டி.எம்.சி நீரை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றது. அந்த இடைக்கால தீர்ப்பை அமல்படுத்தாத வகையில் கர்நாடக அரசு பல்வேறு தடைகளை தொடர்ந்து ஏற்படுத்தி வந்தது. மேலும் புதிது புதிதாக பல்வேறு சட்டப் பிரச்சனைகளை எழுப்பி இடைக்கால தீர்ப்பை அமல்படுத்துவதில் காலதாமதம் செய்வதிலேயே குறியாக இருந்தது.
காவிரி நதி நீர் தீர்ப்பாயம் 2007-ல் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா 192 டி.எம்.சி தண்ணீரை பத்து மாத தவணையில் தமிழகத்திற்கு வழங்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்டாலும், மத்திய அரசிதழில் வெளியிடப்படாமல் இருந்தது. தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின் 2013-ல் தான் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

(தொடர்புக்கு : 9787368271 )

புதிய ஆசிரியன் இதழை நீங்கள் www.puthiyaasiriyan.com இணையத்திலும் படிக்கலாம்
ஹுமாயுன் கபீர் என்ற நண்பர் அதை அரசியல், கட்டுரை, சிறுகதை, கேள்வி-பதில், சினிமா என பல்வேறு தலைப்புகளாகப் பிரித்து அழகாக வடிவமைத்துத் தருகிறார். கூடுதலாக சில பொது விஷயங்களையும் ‘பொது’ என்ற பிரிவில் நீங்கள் படிக்கலாம்.. சில வீடியோக்களையும் பார்க்கலாம். இணைய இதழ் பற்றிய உங்கள் கருத்துகளையும் எதிர்வினைப் பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். – ஆசிரியர் குழு

Spread the love