September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பூவிரியும் காவிரியின்.. 2


ஐவி. நாகராஜன்


கடலைவிட கீழ்மட்டத்தில் இருந்து கடல்நீரை விரட்டும் இயற்கையின் அற்புதங்கள் தான் சதுப்பு நிலங்கள். நாம் அவற்றை இழந்து வருகிறோம். நாம் செயற்கையாக உருவாக்கும் துறைமுகங்கள் நாகை வரை உள்ள கடலோரத்தை பாதிக்கும். நாம் மட்டுமல்ல வங்கதேசம் வரையுள்ள கோரமண்டல் கடற்கரையில் எது நடந்தாலும் தமிழகத்தின் தென் எல்லையைத் தான் அதிகம் பாதிக்கும். காரணம் கடல் நீரோட்டம் அப்படி. இரு துருவங்களிலும் பனிமலைகள் உருகுகின்றன. அவற்றின் உருகும் தன்மை முன்பைவிட அதிகமாக இருப்பதால் அவற்றின் எதிர்கால நிலை பற்றி கணிக்க முடியாத நிலையில் ஆய்வாளர்கள் உள்ளனர். அந்த பனிமலைகளுக்குள் இருக்கும் மீத்தேன் மண்டலம் வெடிப்புற்றால் எவ்வளவு விரைவாக உருகும் அதனால் என்னவெல்லாம் நிகழும் என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.
கண்டிப்பாக 20 ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம் வெகுவாக உயரும் என்றும் கடற்கரை நிலப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை கடல் உள்வாங்கி கொள்ளும் என்றும் கணித்துள்ளனர். தமிழகத்தின் பெரும் பகுதி கடற்கரையால் ஆனது. சென்னையின் ஒரு பகுதி முழுக்க கடற்கரைதான். இந்நிலையில் நாம் நம் வளர்ச்சியில் எப்படி புரிந்து கொள்ள போகிறோம். அப்படி ஒரு நிலையில் கடல்நீர் அடையாறு கூவம் கொசஸ்தலை ஆறுகளில் புகும். மீண்டும் கடலுக்குள் சென்று விடும். அதேநேரம் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக ஊருக்குள் புகுந்து நிலத்தடி நீரை கெடுக்கும். அதுகுறித்து எந்த ஆராய்ச்சியை நம் நிறுவனங்கள் செய்துள்ளன அதுபற்றிய எந்த புரிதலை அரசுக்கு ஏற்படுத்தி உள்ளன. சென்னையில் கடலோர பகுதிகளில் ஆபத்தான பகுதிகளாகின்றனவா பாதுகாப்பானவையா ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன விஞ்ஞானிகள் விளக்க வேண்டும்.
-தொடரும்
(தொடர்புக்கு : 9787368271)

Spread the love