May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பூமியின் எதிர் காலம் நம் கைகளில்

அறிவியல் புத்தகம் பற்றி ஆயிஷா நடராசன்      பேராசிரியர் ராஜுவின் எட்டாவது அறிவியல் நூல் இது. தலைப்பே எவ்வளவு அற்புதமாக உள்ளது! அறிவியல் தகவல்களை தனது விமர்சன பூர்வமான பார்வைக்கு உட்படுத்தி இரண்டு மூன்று பக்க அளவில் அறிவியல் கட்டுரையாக்கி வெளியிடும் அவரது அடங்கா தேடல் நம்மை திகைக்க வைக்கும் ஒன்று.     இந்த நூலின் அறிவியல் கட்டுரைகளை மூன்றாகப் பிரிக்கலாம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்டிருக்கும் வியத்தகு மாற்றங்கள் பற்றியவை முதல்வகை. அவற்றால் விளைந்த சிக்கல்கள், ஆபத்துகள் பற்றியவை அடுத்த வகை. மூடநம்பிக்கை, காவி அறிவியல் போலிகளை தோலுரிப்பது மூன்றாம் வகை.     ஒவ்வொரு அறிவியல் எழுத்தாளரும் அறியவேண்டிய நடை. எந்த வகை அறிவியலையும் நம் தமிழில் தர முடியும் எனும் நம்பிக்கை தரும் பாணி அவருடையது.    டாக்டர் ஜி ராமானுஜம் (உளவியல் மருத்துவர்) இந்த நூலுக்கு சிறப்பான ஒரு முன்னுரை வழங்கி இருக்கிறார். -புத்தகம் பேசுது இதழில் “நான் வாசித்தேன்.. நீங்கள்?” என்ற தலைப்பில் கல்வியாளர்.. எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன் புதிய புத்தகம் பேசுது இதழில் எழுதி வரும் தொடரில் மே மாதம் இடம் பெற்ற விமர்சனம். நூல்  ஆசிரியர் : பேராசிரியர் கே ராஜூ  வெளியீடு : மதுரை திருமாறன் வெளியீட்டகம் ப.எண். 35, பு.எண். 21 சாதுல்லா தெரு, தி. நகர், சென்னை 600 017 தொடர்புக்கு : 78717 80923   பக்கம் 174 …ரூபாய் 180  ஒரு பிரதி மட்டும் எனில், கூரியர் சார்ஜ் சேர்த்து 210 ரூபாய் அனுப்பவும். 10 பிரதிகளுக்கு மேல் வாங்குவோர் ஒரு பிரதிக்கு ரூ. 120 வீதம் அனுப்பினால் போதும். தொகையை எம்.ஓ. அல்லது நெட் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே அனுப்புங்கள்.   வங்கிக் கணக்கு விவரம் : பெயர் : T. Nehru SB Acc No 419409010 – Indian Bank, Guindy Branch – IFS code : IDIB000G020) தொடர்புக்கு : 78717 80923 மாவட்டம், பின்கோட் உள்ளிட்ட தெளிவான முகவரியையும் கைபேசி எண்ணையும் வாட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தி மூலம் தெரிவியுங்கள். முனைவர் ச.சீ. இராஜகோபாலன் எழுதிய “கல்வி – நேற்று, இன்று, நாளை” என்ற புத்தகம் வேண்டுவோர் பதிப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்
Spread the love