August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பு.ஆ.கருத்தரங்கில் பேரா.ச.மாடசாமி

தொகுப்பு : உமா,


குழந்தைகளுக்காக சிந்திக்கக்கூடியவர், வகுப்பறை மாற்றங்களால்தான் கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என நம்புகின்ற சிந்தனையாளர் கல்வியாளர் பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள். இவர் எழுதிய கல்வி சார்ந்த நூல்களே இவரைப்பற்றிக் கூறும். கடந்த 14.06.2022 அன்று நடந்த புதிய ஆசிரியன் இணையவழிக் கருத்தரங்கத்தில் “வகுப்பறை – கவனிக்கிற கண்களும் பேசும் வாய்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். கலந்து கொண்டவர் ஒவ்வொருவரையும் இதயம் தொட்டு நெகிழ வைத்த பகிர்வு அது. புதிய ஆசிரியன் வாசகர்களுக்காக இங்கே…
கரும்பலகை
எல்லாக் கேள்விகளுக்கும் விடை என்னிடம் இல்லை என்பதுதான் அறிவின் தொடக்கம். என் உரையின் தொடக்கமும் அதுதான். அப்போதெல்லாம் வகுப்பறையில் ஆசிரியர் வாய் வழியாகப் பேசுவதை மாணவர்கள் காதால் கேட்க வேண்டும் என்பதே நடைமுறை. 1801-ல் ஸ்காட்லாந்தில் ஒரு பூகோள ஆசிரியர் கண்டுபிடித்ததுதான்-கரும்பலகை. ‘கறுத்த தேவதை’ என்று கல்வி உலகம் கொண்டாடியது. வகுப்பறை ‘வாயில்’ இருந்து ‘கண்ணுக்கு’ போய்விட்டது என்றார்கள். உண்மையில் போய்விட்டதா என்பது முக்கியமான கேள்வி.
நீதிபோதனை வகுப்புகள்
குழந்தைகள் சிலரின் நடத்தை மட்டும் வகுப்பறையின் கண்ணை உறுத்துகிறது. எனவே ‘நீதிபோதனை’ வகுப்புகளை அறிவித்திருக்கிறார்கள். நீதி போதனை வழி மதமும், கடவுளும், மூடநம்பிக்கையும் வகுப்பறைக்குள் சுலபமாக நுழையும். இதை நாம் அறிவோம். வகுப்பறை எது குறித்தும் முணுமுணுக்காது. சத்தமில்லாமல் ஏற்றுக் கொள்ளும். படு அபத்தமான கதைகள் பாடப்புத்தகத்தில் இருந்தபோது கூட வகுப்பறையில் எந்தச் சத்தமும் இல்லை. ஆசிரியர்கள் அதற்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லை என்பதுதான் வேதனை. சத்தம் வந்ததெல்லாம் வெளியில் இருந்துதான்! அப்படியானால் ஆசிரியர்களின் பொறுப்பு என்ன? பல ஆண்டுகளாக ஆசிரியர்களை நோக்கி எழுப்பப்படும் கேள்வி இது- ஆசிரியர்கள் யார்? அதிகாரிகளின் ஊழியர்களா? வகுப்பறையின் படைப்பாளிகளா? விதிவிலக்கான ஆசிரியர்கள் பற்றி நான் இங்கே பேசவில்லை.
தற்போதைய நீதி போதனை வகுப்புகளைப் போல, பொத்தாம் பொதுவான முடிவுகளையே அதிகாரம் எடுக்கும். ஒரு முறை 2014-ல் பாடநூல் தயாரிப்பின்போது திரு. உதயச்சந்திரன் அவர்களிடம் பத்தாம் வகுப்புப் பாடநூல்கள் பற்றி பேசினேன். அப்போது கிருபானந்த வாரியார் கூறிய ஒரு படு அபத்தமான கதை பாடத்தில் இடம் பெற்றிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது அவருக்கும் அது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
பாடப் புத்தகங்களிலிருந்த வழக்கிலிருந்து மறைந்த சொற்களையெல்லாம் நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இருந்து போராடினோம். நான்காம் வகுப்பு குழந்தைகளுக்கு வைத்த ‘இல்லறம்‘ குறித்த திருக்குறள்.. ஐந்தாம் வகுப்பிற்கு ‘துறவறம்‘ குறித்த திருக்குறள்.. என்று வைத்திருந்தனர். சண்டை போட்டு அதை நாங்கள் மாற்றினோம். எந்த குப்பையைக் கொணர்ந்து கொட்டினாலும் இங்கு ஏற்கக் கூடியது வகுப்பறை ஒன்று மட்டுமே. கோட்சே குழுக்கள் இங்கே இருக்கின்றன என்று தேனி சுந்தர் ஒருமுறை சொல்லியிருந்தார். நல்ல ஆசிரியர் பாடப் புத்தகங்களுக்காகப் பேச வேண்டும் அல்லவா? முதன்முதலாக மதுரை காமராசர் பல்கலைக் கழக அகடமிக் கவுன்சிலில் நாங்கள் இடம் பெற வாய்ப்பு கிடைத்தபோது, கல்லூரி தமிழ்ப் பாடங்களில் இருந்த கேவலங்கள் குறித்துப் பேசினேன். அகடமிக் கவுன்ஸில் வழியாக ‘புதிய காற்று‘ படத்தை நாங்கள் பாடமாக்கினோம். ஒவ்வொரு மாற்றத்திற்கும் நாங்கள் போராட வேண்டி இருந்தது.
எங்களைக் கவனித்த கண்கள்
60 ஆண்டுகளுக்கு முன் பெரியகுளத்தில் நான் படித்த வகுப்பறை என் ஞாபகத்துக்கு வருகிறது. அது வாய்களின் காலம்! ஆசிரியர்கள் பேசுவார்கள். எங்களைக் ‘கவனி’ என்பார்கள். இன்றும் தமிழாசிரியர் பாண்டியராஜன் மட்டும் ஞாபகத்தில் இருக்கிறார். அவர்தான் முதன்முதலில் எங்களைக் கவனித்தவர். உன்னிடம் நல்ல எழுத்துநடை இருக்கிறது என்று என்னிடம் சொன்னவர். முதன்முதலாய் எங்களைக் கவனித்த கண்கள் அவை!
செயல்பாட்டுவழிக் கல்வி
அடுத்த இருநூறு ஆண்டுகளில் கல்வி குறித்துப் பல தீவிர விவாதங்கள் நடந்தன. உலகம் முழுவதும் தொடர்ந்து பல பரிசோதனை முயற்சிகள் கற்பித்தல் சார்ந்து நடந்திருக்கின்றன. அதில் முக்கியமானது-கல்வி ‘வாயில்’ இருந்து ‘கைக்கு’ப் போகவேண்டும் என்பது.
தமிழகத்தில் நடந்த சோதனை முயற்சிகளில் முக்கியமானது – செயல்பாட்டு வழிக் கற்றல் (ஹஉவiஎவைல க்ஷயளநன டுநயசniபே). திரு விஜயகுமார் இ.ஆ.ப. என்ற சர்வ சிக்ஷா அபியான் இயக்குநர் மூலம் 2003-ல் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 1 முதல் 4ஆம் வகுப்புக் குழந்தைகளுக்குத் தொடங்கப்பட்ட திட்டம் அது. பாடப் புத்தகங்களுக்குப் பதில் படங்கள், கல்வி அட்டைகள் வழியாகக் குழந்தைகள் கற்றனர். குழந்தைகள் மிக விரும்பிக் கற்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். இத்திட்டத்தை மதிப்பிட்ட முனைவர் வசந்திதேவியும் முனைவர் எஸ்.எஸ். இராஜகோபாலனும் ஒவ்வொரு குழந்தைக்குமான வெளியும், ஒவ்வொரு குழந்தையும் தன் வேகத்தில் முன்னேறுவதற்கான சுதந்திரமும் இத்திட்டத்தில் இருப்பதாகப் பாராட்டினர். செயல்பாட்டின்போது வகுப்பறையில் புறப்பட்ட சத்தத்தைப் பின்வருமாறு கொண்டாடினர்: “சூடிளைந ளை nடிற யளளடிஉயைவநன றiவா யஉவiஎவைல யனே டநயசniபே”.
ஒவ்வொரு மாணவரிடத்திலும் ஒரு நட்சத்திரம்
ஒவ்வொரு மாணவரிடத்திலும் ஒரு நட்சத்திரம் இருக்கும். ஆனால் அதைக் காணும் கண்கள் ஆசிரியர்களுக்கு வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்குமான கற்றலுக்கான சுதந்திர வெளியை இந்த ஏபிஎல் கொடுத்தது. அத்திட்டத்தின் சிறப்பம்சங்களாக சிலவற்றை நாம் கூறலாம். அதில் ஒவ்வொரு குழந்தைக்கும் அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்லக்கூடிய படிநிலைகள் இருந்தன.
படிப்படியாக ஏபிஎல் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவு செய்யப்பட்டபோது 2008-ல் தோல்வி தவிர்க்க முடியாதது ஆயிற்று. அதிகாரத்தைக் குறை சொன்னார்கள் சிலர். ஆசிரியர்களுக்கு ஆர்வம் இல்லை என்றார்கள் வேறு சிலர். எப்படியோ குழந்தைகளின் கைக்கு வந்த கல்வி மீண்டும் வாய்க்கே சென்றது.
பகிரும் வகுப்பறைகள்.. தலைகீழ் வகுப்பறை
பகிரும் வகுப்பறைகளுக்கு இங்கு வாய்ப்புகள் தரப்பட வேண்டும். குடiயீயீநன ஊடயளளசடிடிஅ அல்லது ஐnஎநசவநன ஊடயளளசடிடிஅ மற்றொரு முக்கியமான சோதனை முயற்சி. அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக சில பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் முயற்சி இது. ஆசிரியர் மைய வகுப்பறை மாணவர் மைய வகுப்பறை ஆவதுதான் ‘தலைகீழ் வகுப்பறை’. சுநயஉh நுஎநசல ளுவரனநவே in நுஎநசல ஊடயளள நுஎநசல னுயல-என்பது தலைகீழ் வகுப்பறையின் முழக்கம். புரிந்து கொள்ளத் தடுமாறும் மாணவர்களுக்காகவும், கலை, விளையாட்டு போன்ற திறன்கள் காரணமாக அடிக்கடி வகுப்புக்கு ஆப்சென்ட் ஆகும் மாணவர்களுக்காகவும் உருவாக்கப்பட்ட வகுப்பறை இது.
கணிதம், அறிவியல் பாடங்களை ஒவ்வொருவர் வேகத்துக்கு ஏற்றபடி கொண்டு செல்வதே இதன் நோக்கம். பெரும்பாடுபட்டு-பல மணி நேரம் செலவழித்து-ஆசிரியர் பலர் கூடி ஒவ்வொரு பாடத்திலும் வீடியோ உருவாக்குகிறார்கள். வீடியோக்களை மாணவர்கள் சாவகாசமாக வீட்டில் பார்க்கிறார்கள். வகுப்பில் ஆசிரியரை ‘நிறுத்து’ என்று சொல்ல முடியாது. ஆனால் வீட்டில் வீடியோவை நிறுத்தி நிறுத்திப் பார்க்கிறார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
சில வீடுகளில் பெற்றோரும் சேர்ந்து பார்க்கிறார்கள். “இது அவ்வளவு தெளிவாக இல்லை; ஆசிரியரைத் திருத்தச் சொல்லு” என்கிறார்கள். இப்படி கல்வியில் சமூகமும் பங்கேற்கிறது. வீடியோவில் பார்த்துத் தெரிந்தவற்றை மாணவர்கள் வகுப்பில் பேசுகிறார்கள். பலர் பேசுகிறார்கள். தடுமாற்றம் வரும்போது ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.
ஆசிரியர் பேசுவது மிக அளவாக இருக்கிறது. கூhந சடிடந டிக வாந வநயஉhநச in வாந உடயளளசடிடிஅ ளை வடி hநடயீ ளவரனநவேள- nடிவ வடி னநடiஎநச iகேடிசஅயவiடிn என்கிறது தலைகீழ் வகுப்பறை. தலைகீழ் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவரும் பங்கேற்கிறார்; கற்றல் லகுவாக இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் சொன்னபோதும், இப்பரிசோதனை முயற்சி இன்னும் பரவலாகவில்லை. தொழிற்புரட்சி காலத்தில் உருவானது-வாய் வகுப்பறை. மீள்வது அத்தனை சுலபமல்ல.
மாணவர் மைய வகுப்பறை
வகுப்பறையில் இன்றும் பிரதானமாக இருப்பது எது?.. வாயா? கையா? கண்ணா? இது என் உரையின் முக்கியமான கேள்வி. கல்வியை எது தீர்மானிக்கிறது? யார் தீர்மானிக்கிறார்கள்? கொரோனா காலத்து வறுமை- குழந்தைகள் பலர் குழந்தைத் தொழிலாளிகள் ஆனது-பெண்குழந்தைகள் பலருக்குச் சிறு வயதில் திருமணம் நடந்தது-எதுவும் அதிகாரத்தின் கவனத்தில் இல்லை. இங்கே இன்னமும் அதிகாரம்தான் முடிவெடுக்கின்றது. சடங்காக மாறிப்போன வகுப்பறைகள் குறித்து நாம் இப்போதாவது விவாதம் நடத்த வேண்டும். ஆசிரியர்கள் என்பவர்கள் அதிகாரிகளுக்கானவர்களா அல்லது குழந்தைகளுக்கானவர்களா என்பதை நாம் கண்டறிய வேண்டியுள்ளது. ஏபிஎல் ஏன் கைவிடப்பட்டது என்று ஒரு ஆய்வு நடத்த வேண்டும்.
மாணவர் மைய வகுப்பறையை உருவாக்க அடிப்படையான தேவை- பொறுமை! சில்வியா என்பவர் எழுதிய ‘டீச்சர்’ புத்தகம் இதை விளக்கும். நியூசிலாந்தில் ஒரு மாவோரிப் பள்ளியில் ஆசிரியை ஆகப் பணி புரிந்தவர் சில்வியா. மாவோரி என்பது நியூசிலாந்தின் பூர்வீக குடி. போர்வீரர்கள் வம்சம். அது ஆரம்பப் பள்ளி. மாணவர்கள் தினசரி சொல்லும் வார்த்தைகளில் இருந்து பாடத்தை ஆரம்பிப்பார் சில்வியா. மாணவர்கள் சொன்ன ஆரம்ப வார்த்தைகளில் நிரம்பி இருந்தவை ‘ளுநஒ யனே குநயச என்கிறார்’ சில்வியா. தினசரி முத்தம், பேய் இரண்டும்தான். இல்லாவிட்டால் குடி, அடி! பொறுமையாக இருந்தார் சில்வியா. மனம் தளரவில்லை. படிப்படியாக மாற்றம் ஏற்பட்டது. வார்த்தைகள் வந்து குவிந்தன. சில்வியா கண்ட வெற்றியைக் கல்வி உலகம் கொண்டாடியது.
அறிவொளி என்னை விடுவித்தது
என்னுடைய ஒரு அனுபவத்தோடு உரையை முடிக்க விரும்புகிறேன். அறிவொளிக்கு முன் வகுப்பறை என் வாயின் சுவாரஸ்யத்துக்குள் சிக்கிக் கிடந்தது. அறிவொளி என்னை விடுவித்தது. அறிவொளிக்குப் பின் என் வகுப்பறையை மாணவர் மைய வகுப்பறையாக்க முயன்றேன்.
தோப்பில் முகமது மீரான் எழுதிய நாவலான ‘கடலோர கிராமத்தின் கதை’ மாணவர்களுக்குப் பாடமாக இருந்தது. வகுப்பில் 64 மாணவர்கள். நாவலைப் பல முறை படித்து 64 தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்பு. “நீங்களே நடத்துங்கள். நான் கவனிக்கிறேன்” என்றேன். பின்வரிசை மாணவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டேன். மாணவர்கள் வகுப்பெடுத்தார்கள். நான் கவனித்தேன். கடைசி 10 நிமிடங்கள் மாணவர்கள் பாடம் நடத்திய சிறப்பைப் பாராட்டினேன். இடையிடையே தங்களுக்குத் தரப்பட்ட தலைப்பை மாற்றச் சொல்லி மாணவர்கள் கேட்பார்கள். மீண்டும் ஒரு முறை நாவலை வாசித்துத் தலைப்பைத் தேர்ந்தெடுப்பேன். என்னால் ஒருபோதும் மறக்கமுடியாத வகுப்பறை அது.
“பேசும் வகுப்பறை” “கவனிக்கும் வகுப்பறை”-யாக மாறினால் மறப்பதேது?
([email protected] – 99769 86098)

Spread the love