September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

புனைவிலக்கிய நதியில் நீந்தி…

ஆசிரியர்: பேரா.பெ.விஜயகுமார்
வெளியீடு: கருத்து=பட்டறை, 2, முதல் தளம், நாகா வளாகம், 4-வது நிறுத்தம் திருநகர், மதுரை-625 006
கைபேசி : 98422 65884) .. விலை : ரூ.170/-
பேரா.பெ.விஜயகுமாரை மூட்டாவின் ஆளுமை மிக்க தலைவராக, ஆங்கிலத்துறை பேராசிரியராக, மூட்டா இதழின் ஆசிரியராக, புதிய ஆசிரியன் இதழின் இணை ஆசிரியராக அறிவோம். அவர் அண்மைக்காலமாக தமிழக வாசகர்களுக்கு பல இலக்கியப் படைப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறார். மிக சமீபத்தில்தான் ‘தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்-ஓர் அறிமுகம்’ என்னும் அருமையான நூலை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்நூல் வெளிவந்துள்ளது. உலக அளவில் பெரிதாகக் கொண்டாடப்பட்ட நாவல்கள், சிறுகதைகள் மற்றும் நாடகங்கள் ஆகியவற்றில் சிலவற்றை இப்புத்தகத்தில் நமக்கு அறிமுகம் செய்துள்ளார். மிக சிறப்பான சமூக அக்கறையுள்ள, சூழலியல் பிரச்சினைகளை வெளிப்படுத்தும், உழைப்பாளி மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்புகளே இந்நூலில் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு.
குறிப்பிட்டு சொல்லக்கூடிய படைப்புகள் என்று சொன்னால் ஆலிஸ் வாக்கர் எழுதிய ‘தி பர்ப்புள் கலர்’, ஆல்பர்ட் காம்யூ எழுதிய ‘தி ப்ளேக், நிக்கொலாய் கோகால் எழுதிய ‘ஓவர்கோட்’, பா.செயப்பிரகாசம் எழுதிய ‘மணல்’, பேரா.முரா எழுதிய ‘விடாது கறுப்பு’, பேரா.டி.சந்திரகுரு எழுதிய ‘தேசிய கல்விக்கொள்கை-பின்னணி மர்மங்கள்’ ஆகியவற்றைச் சொல்லலாம். மிக எளிய மொழிநடையில் சுவாரசியம் குறையாத வகையில் சொல்லிச் செல்கிறார் விஜயகுமார். இலக்கியத்தை விரும்புபவர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினருமே வாசிக்கக் கூடிய வகையில் இந்நூல் சுவையாக எழுதப்பட்டுள்ளது. விஜயகுமார் தொடர்ந்து இதுபோன்ற மேலும் பல நூல்களைப் படைத்து தமிழக வாசகர்களுக்கு இலக்கிய விருந்து வழங்கவேண்டும்.
-பேரா. ச.இராமசுந்தரம், மதுரை (94862 26502)

Spread the love