June 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பிற நாடுகளில் பகையைச் சேர்த்துள்ள பெருமை

75 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்தியாவுக்கு 54 நாடுகளினுடைய பகையை சேர்த்துள்ள பெருமை மோடி அரசுக்கே. ஒன்றிய அரசு அரசியல் சட்டத்தை இடைவெளி இல்லாமல் அமல்படுத்தியிருந்தால் மதக்கலவரங்கள் நடந்திருக்காது.

* *இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, அதன் அரசியலமைப்புச் சட்ட விதிகளை  அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றங்கள் நீதி வழங்கியிருந்தால் மதக்கலவரங்கள் நடந்திருக்காது.

* *ஆர்எஸ்எஸ், பிஜேபியினுடைய கொள்கையைத்தான், மத துவேசத்தைத்தான் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, நவீன் மிட்டல் ஆகிய 2 பேரும் பேசியிருக்கிறார்கள். அவர்களை பதவி நீக்கம் செய்துவிட்டால் மட்டும் யார் இவர்களை நம்புவார்கள்? இவர்களின் தொடர் வெறுப்பு அணுகுமுறையால் 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவுக்கு 54 நாடுகளில் பகையை சேர்த்துள்ள பெருமை மோடி அரசுக்கே.

* *மதச்சார்பற்ற அனைவரும் இதைக் கண்டிக்கிறோம்.

 – தோழர் டி.கே.ரங்கராஜன் மூத்த தலைவர், சிபிஎம்

Spread the love