முனைவர் ச. மாடசாமி
மகள் கணினி வல்லுநராகி சென்னையில் பணியில் சேர்ந்ததால், 2000 முதல் மதுரையிலிருந்து சென்னை வந்து போய்க் கொண்டிருந்தோம். சென்னையில் எங்கள் முதல் துணையும் தோழனும் பாரதி புத்தகாலயம்தான்.
1980-ல் என் முதல் புத்தகம் ‘பாம்பாட்டிச் சித்தர்’ வந்தது. மறைந்த அருமை நண்பர் ஷாஜகான் கனியின் முயற்சி அது. முதல் புத்தகம் வந்த 10 ஆண்டுகள் கழித்து கவிஞர் மீரா, கவிஞர் வைரமுத்து இருவரின் தூண்டுதலால் ‘கூத்தாடிகள்’ என்ற நாடகத் தொகுப்பை வெளியிட்டேன். 1990-க்குப் பிறகு அறிவொளி எழுத்தில் மூழ்கிக் கிடந்தேன்.
புதிய ஆசிரியனிலும் எழுதியிருக்கிறேன். 2003-ல் ‘எனக்குரிய இடம் எங்கே?’, ‘பொதுவுடைமை இலக்கியம் – பார்வையும் பயணமும்’ என்ற இரு நூல்களை வெளியிட்டேன். எனக்குரிய இடம் எங்கே- என் எழுத்தில் ஒரு திருப்பம். தினசரி கடிதங்கள் வரும். எனக்குரிய இடம் எங்கே குறித்த முதல் விமர்சனம் புத்தகம் பேசுது இதழில் வந்தது. அன்புக்குரிய எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய விமர்சனம் !
அடிக்கடி தோழர் நாகராஜனைச் சந்தித்த நேரம் அது. எழுது எழுது என்பார். 2004 தொடங்கி, ஏமாளியும் திருடனும், பூமரப்பெண், தமிழர் திருமணம்- அன்று முதல் இன்று வரை- ஆகிய மூன்று சிறு நூல்களைப் பாரதி புத்தகாலயம் வழி கொண்டு வந்தேன்.
அதன்பின் நிறைய எழுதினேன். நான் எழுதிய பல நூல்கள் என் பணி ஓய்வுக்குப் பின் எழுதியவையே! அவற்றில் சில : * சொலவடைகளும் சொன்னவர்களும் * போயிட்டு வாங்க சார்! *ஆசிரிய முகமூடி அகற்றி * என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா * குழந்தைகளின் நூறு மொழிகள் * தெருவிளக்கும் மரத்தடியும் * வித்தியாசம்தான் அழகு * அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல * நிறத்தைத் தாண்டிய நேசம்
என் எழுத்துக்களை புத்தகம் ஆக்கிப் பல்லாயிரம் பேரின் கைகளில் சேர்த்தது பாரதி புத்தகாலயம். எப்போதும் என் எழுத்துக்குப் பின்னால் பாரதி புத்தகாலயம் நிற்கிறது. கம்பீரமாக நிற்கிறது. பாரதி புத்தகாலயம்- ஒரு பதிப்பகம் மட்டுமல்ல; அது ஒரு கல்விக் கூடம். அது – தோழமையின் அடையாளம்.
எழுதுவோர்க்கும் வாசிப்போர்க்கும் அது பிரியமான வீடு.
(94441 64836 – [email protected])
(ச.மா.வின் முகநூலிலிருந்து)
பாரதி புத்தகாலயத்துக்கு வயது 20

Spread the love
More Stories
“சின்ன (அக்)கவுண்டர்!”
இந்தியாவைத் தாக்கும் ஒரு புதிய வன்முறை வடிவம்
ஓடும் பேருந்திற்குள் ஒரு நூல்நிலையம்