September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பழைய கதையும் புதிய கூட்டணியும்…

வேண்டாத கேள்விகளை விட்டுத் தள்ளுங்க;
இப்ப நான்கு மாநிலத் தேர்தல் முடிவைக் கொண்டாடுங்க..

உ.பி-யிலே பொங்கியெழுந்துச்சே விவசாயிங்க போராட்டம்;
வேடிக்கை மட்டும் பார்த்துச்சே யோகி அரசு…
அதெல்லாம் பழைய கதை, வேலையப் பாரு,
இப்ப கிடைச்சிருக்கிற வெற்றியோ படுஜோரு…

உத்தராகண்டில் எழுந்ததே பாஜக எதிர்ப்பலை;
மூன்று முதல்வர்களை மாத்தினதே அவல நிலை…
முடிஞ்சிப்போனதைத் தூக்கிக் குப்பையிலே போடு,
நாங்க ஆட்சி செய்யப்போறோம்னு இப்ப ஆட்டத்தைப் போடு…

கோவா குளறுபடி ஊருக்கே தெரியுமே;
ஆளுங்கட்சி அமைச்சரும் கட்சி மாறி போனாரே…
ஆமாமா அதெல்லாம் அப்படித்தான் நடக்கும்..
ஆட்சிக் கட்டிலைத் தவிர மற்றதையெல்லாம் மறப்போமே…

மணிப்பூர்ல போன முறை குறுக்கு வழி ஆட்சி;
ஒரு திட்டமும் இல்லாம இப்ப மாநிலமே வீழ்ச்சி…
இந்தவாட்டி வந்துட்டோம் பெரும்பான்மை சீட்டு
இனி எல்லோருக்கும் இருக்குது எங்களோட வேட்டு…

மொத்த சீட்டுகளும் குறைஞ்சுப்போச்சே;
வாக்கு சதவீதமும் தேஞ்ச்சுப்போச்சே…
அதனாலே நட்டமேதும் எங்களுக்கில்லை
ஓட்டுப்போட்ட மக்களுக்கே இருக்கிது தொல்லை…

நான்கு மாடுக ஒண்ணாகச் சேர்ந்திருந்தது;
சிங்கத்தோட வாலைக் கொஞ்சம் அடக்கி வச்சது…
தனித்தனியாக விலகி நிற்கும் கட்சிக சேர்ந்து நிக்கணும்…
இந்த மாடுக கதைய கொஞ்சம் மனசிலே வைக்கணும்…

  • மு.முருகேஷ் (94443 60421)
Spread the love