June 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

சிபிஎம்கட்சியின்மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் :
தமிழக நிதியமைச்சர் சட்டப் பேரவை யில் பேசும்போது மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என்று தெரிவித்துள் ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறை வேற்றப்படும் என்று நம்பிக்கையுடன் இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பை யும் ஏற்படுத்தி உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க கூடுதல் நிதிச் செலவு ஏற்படும் என்றாலும் அரசின் திட்டங் களை அமல்படுத்தும் பணியில் பல் லாண்டு காலம் உழைத்த ஊழியர் களுக்கு உதவுவதை சுமை என்று கருதாமல், கடமையாகக் கருதி நிறை வேற்ற வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ் :
இந்திய ராணுவம், கடற்படை விமானப்படை, நீதித்துறை ஆகியவற் றில் புதிய ஓய்வூதியத் திட்டம் செயல் படுத்தப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்கள் ஆசிரியர் கள் மீது மட்டும் திணிப்பது நியாய மற்றது. பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்என்பதுதான் திமுகவின் தேர்தல் வாக்குறுதி. எனவே அதை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

Spread the love