May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பதட்டம்.. மனஉளைச்சல் வேண்டாம்!

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் ஆப்பிரிக்க தனிச்சிறையில் அடைத்து வைத்தது.


அவரைப் பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையைக் கொடுத்து ‘இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும்.. தனிமையைப் போக்கும்’ என்று கூறிவிட்டுச் சென்றார். ஆனால் சிறைப்படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு அதன் மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.


பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்தபோது அந்த அட்டையின் நடுப்பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால் நெப்போலியன் மன உளைச்சலில் இருந்த காரணத்தால் இந்தக் குறிப்பு அவர் கண்ணில் புலப்படவில்லை.


அதைப் போல் உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி, அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கிக் கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்தப் பொறியை உடைக்கும் வழியை விட்டுவிடும். பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று தப்பிக்கத் தெரியாமல் முழிக்கும்.


மாவீரனுக்கும் சரி, சாதாரண எலிக்கும் சரி… பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது…
மனிதர்களோட பல பிரச்சனைகளுக்கு காரணம், மன உளைச்சல்தான்!

Spread the love