September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நூல் அறிமுகம்

நம்பிக்கையை விதைக்கும் நாவல்
பெரணமல்லூர் சேகரனின் செவ்வானம் நாவல்.

கொரோனா தீநுண்மி பரவலால் உலகமே பேரிடரில் சிக்கித் தவித்த காலத்தில் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்ட பொதுவுடமை இயக்கத் தோழர்களின் அனுபவங்களை, களத்தில் கண்ட காட்சிகளை, மேற்கொண்ட நடவடிக்கைகளை, வெற்றிகளை.. கதையாக்கி பெரணமல்லூர் சேகரன் “செவ்வானம்” எனும் நாவல் வடிவில் தந்திருக்கிறார்.
திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் அழகுசேனை கிராமத்தைச் சேர்ந்த ரேவதி, சிவா, சங்கரன், மங்கை, செல்வி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் வழியே தோழர்களின் பணியை நாவல் சித்தரிக்கிறது. உதாரணமாக, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடைக்கலம் அளித்து பாதுகாத்தார்கள்…ரத்த தானம் செய்தார்கள்..எட்டுவழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்துப் போராடி தடுத்து நிறுத்தினார்கள்..100 நாட்கள் வேலை திட்டத்தில் தொடர்ந்து வேலை கிடைக்கவும் கூலி உரிய முறையில் கிடைக்கவும் போராடினார்கள்..என சொல்லிக் கொண்டே போகலாம். பிறர் நலனுக்காக தங்களைக் கரைத்துக் கொள்ளும் அற்புதமான மனிதர்களை நாவல் முழுவதும் காண முடிகிறது. விடிந்திருக்கிற செவ்வானம் அழகுசேனைக்கு மட்டுமல்ல அனைவருக்குமானது எனும் நம்பிக்கையை விதைக்கிறது நாவல். வாசிப்போம்.. வாழ்த்துவோம்….
– மா.விஜயபாஸ்கர்.
(வெளியீடு : பாரதி புத்தகாலயம், விலை ரூ. 370)

 

 

 

——————————————————————–
புதிய ஆசிரியன் நடத்தும் 8-வது இணையவழிக் கருத்தரங்கில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் தோழர் சுகந்தி `தேர்தல் கள அனுபவங்கள்’ என்ற தலைப்பில் ஜூன் 8 செவ்வாய் அன்று உரையாற்றுகிறார். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
ஆசிரியர் குழு

Spread the love