June 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நீரின் ரௌத்திரம்…

“சோ” – வென
பெய்யும் மழை
சொர்க்கம் தான்.

“ஹோ” – வென
கொட்டும் அருவி
கொள்ளை அழகுதான்.

“சல சல” – வென
நீரோடையும், ஊற்றும்
உற்சாகம்தான்.

“சிலீர்” – என
ஆற்றுக் குளியல்
ஆனந்தம்தான்.

“ஜிவ்” – என
கடற்காற்று
ஆகா அருமைதான்.

அணைகளும்,
குளங்களும், ஊரணிகளும்
அற்புதம்தான்.

நீர் ….
எல்லா இன்பங்களும் தரும்;
நீங்கள் அதை
சீண்டாமலிருக்கும் வரை…!

நீரின்,
பாதை மறித்து
ஆக்கிரமித்து
கறைபடுத்தி
களங்கப்படுத்தி
அதன் கற்போடு
விளையாடினால்;
காண்பீர்கள்,
நீரின் ரௌத்திரம்…

வி.சகாயராஜா (9790471009)

Spread the love