May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நான் ஏன் 28,29 அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறேன்.*

*1) துறைச் சங்க மாநில நிர்வாகி என்பதாலா?*

*2) பொதுச் சங்க மாவட்ட நிர்வாகி எனபதாலா?*

*இதைத் தாண்டி இந்த தேசத்தின் குடிமகன் என்ற அடிப்படையில் நடப்புகள் என்னை இப்போராட்டத்தில் பங்கேற்க தள்ளியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.*

*நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நான் எனது நிர்ணயிக்கப்பட்ட வருமானத்திற்குள் திட்டமிட்டு வாழ வேண்டிய நிலையில் வாழ்கிறேன்.*

*எனக்கு நிர்ணயிக்கப்பட்ட காலமுறை ஊதியத்தில் ஊதியம் பெறுகிறேன்,பழைய பென்சன் திட்டத்தின்படி ஓய்வுக்கு பிறகும் ஓய்வூதியம் பெறுவேன் என நம்பிக்கொண்டிருக்கிறேன்.*

*ஆனால் என்னால் பொருளாதாரச் சுமையை ஈடுகொடுப்பதற்கு கடும் போராட்டத்தைச் செய்ய வேண்டியுள்ளது.*

*இந்நிலையில் காலிப்பணியிடங்களை நிரந்தர ஏற்பாட்டில் பூர்த்தி செய்ய முன் வராத நிலையில் இலட்சகணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்களே அதில் ஒருவராக எனது எதிர்கால சந்ததியர் இனைய மாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதம் ஏதேனும் உண்டா.*

*அத்துக் கூலியில் அஞ்சுக்கும் பத்துக்கும் தாம் படித்த படிப்பிற்கு தொடர்பில்லாத பணிகளை 24 மணி நேரமும் செய்ய முன்வரும் இளைஞர்கள் பட்டாளத்தை பார்க்கும்போது மனசு வலிக்கிறது.பதைபதைக்கிறது.*

*மாதம் ஒருமுறை ஏற்றப்படும் எரிவாயு விலையும் தினந்தோறும் ஏறும் பெட்ரோல் டீசல் விலையும் விலைவாசியை சாமானியனிடமிருந்து எட்டாத தூரத்திற்கு இட்டுச் சென்ற பிறகு அன்றாடம் பல இலட்சக்கணக்கான மக்களின் உணவும் உறைவிடமும் கேள்விக்குறியாகும் நிலையில் நான் மட்டும் கிடைத்தவரை உண்டு கொழுத்து காலம் தள்ளிவிடலாம் என நினைக்க மனம் குற்ற உணர்ச்சியில் குன்றுகிறது.*

*விவசாயமும் விவசாயியையும் முழுமையாக அழித்தொழித்த பின்பு காகிதங்களையா திங்க முடியும்.*-?

*எனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஊதிய மாற்ற மற்றும் அகவிலைபடி நிலுவையையே அரசு என்னிடமிருந்து பறித்துவிட்டது. பிசாத்து இரண்டு நாள் ஊதியம் எம்மாத்திரம்…ஏதோ வியாதி வெக்கைக்கு செலவிட்டதாக நினைத்துக் கொள்வேன்.* 

*என் தேசம் காக்கும்,கருத்தாலும்,கரத்தாலும் உழைக்கும் இலட்சக்கணக்கானதொழிலாளர் கோரிக்கையைப் போற்றும்  போராட்டத்தில் பெருமையுடன் பங்கு கொள்வேன். என்னோடு இணைபவர்களுக்கு வந்தனம்,வாழ்த்துக்கள்.* 

*ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால் நீயும் என் தோழனே என்ற சே வின் வார்த்தைகளோடு அழைக்கிறேன்.*

 *ஒன்றுபடுவோம்,வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுவோம்,தேசத்தையும் மக்களையும் காப்போம்.* 

-திருவரங்கன்

Spread the love