அரசுப் பள்ளிகளைப் பழிப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று நாம் உணர வேண்டும். அரசுப் பள்ளிகளில் குறைகள் உண்டு. அவற்றைக் களைவதில் நம் அனைவருக்கும் பங்கும் உண்டு. எளிய மக்களின் ஒரே பற்றுக்கோடான அரசுப் பள்ளிகள் பலமிழந்தால், அவர்களின் வறுமையுடன் கல்லாமையும் சேர்ந்துகொள்ளும். கல்வியின் சாத்தியங்களை அறியாததால்தான் இந்தப் பிள்ளைகள் பெஞ்சுகளை உடைக்கிறார்கள், வன்முறையை நாடுகிறார்கள்.
அடுத்து, எல்லோரும் அவரவர் பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்குப் பங்களிக்க வேண்டும். மாணவர்களின் வளர்ச்சிக்கு அவரவரால் இயன்ற அளவுக்கு உதவ வேண்டும். ஆசிரியர்-பெற்றோர் உரையாடலை வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கு உள்ளூர்க்காரர்களால் உதவ முடியும். நம் கல்வி, நம் உரிமை, நம் சமூகம், நம் பள்ளி என்கிற உணர்வு மேலெழும்ப வேண்டும்.
– மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: [email protected]
(2022 மே 13 அன்று தமிழ் இந்துவில் வந்த கட்டுரையின் இறுதிப் பகுதி)
More Stories
2022 ஜுன் 18 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 ஜுன் 17 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 ஜுன் 16 பதிவுக்கு மூன்று படங்கள்…