September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நம்பினால் நம்புங்கள்…

நம்பினால் நம்புங்கள்…
இன்னும் பத்தாண்டுகள்
மோடியின் நல்லாட்சி தொடர்ந்தால்
வல்லரசாகி விடுமாம் இந்தியா.

ஆமாம், நம்பிட்டோம்;
எட்டாண்டு மோடி ஆட்சியில்
இந்தியா கடன் தொகையை
மும்மடங்காக உயர்த்திவிட்டதிலிருந்தே
நாடு போற போக்கைத் தெரிஞ்சுக்கிட்டோம்.

பொற்கால மோடியின் ஆட்சியில்
வறுமை நிலை ஒழிந்து,
ஏழைகளே இல்லாத நிலையில்
வளமான நாடாகுமாம் இந்தியா.

ஆமாம், நம்பிட்டோம்;
பெருமுதலாளிகளின்
1.45 இலட்சம் கோடி
வாராக் கடனைப்
பாரத ஸ்டேட் வங்கி
தள்ளுபடி செய்துவிட்டு,
பணம் கட்டாதவர்கள்
யாரென்றுகூட
சொல்ல மறுப்பதிலிருந்தே
இது யாருக்கான
தள்ளுபடின்னு புரிஞ்சுக்கிட்டோம்.

நிர்வாகத் திறன் படைத்த
மோடியின் தலைமையில்
இந்தியப் பொருளாதாரம் சீரடைந்திருப்பதாக
உலக நாடுகளெல்லாம் பாராட்டாம்.

Spread the love