August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தொடரும் தேடல்…

மனச்சாட்சியே இல்லாத
மரத்துப்போன நாக்குகளிலிருந்து
உதிரும் சொற்களுக்கு உயிரேது..?

கடந்துபோன எட்டாண்டுகளில்
குடிமக்கள் வெட்கித் தலைகுனியும்
செயலேதும் செய்யவேயில்லையாம்
நம் பாரதப் பிரதமர்.

ஆயிரங்களைக் கடந்து
விண்ணேறிப் பாய்கிறது…
காஸ் சிலிண்டர் விலையேற்றம்.

மதநல்லிணக்கத்தைச் சிதைத்து
மக்களுக்கிடையே விதைக்கப்படுகிறது…
மதவெறி அரசியல்.

இந்திய ரூபாயின் மதிப்போ
கட்டெறும்பாகத் தேய்ந்து தேய்ந்து
இப்போது கடுகாகி விட்டது.

எட்டாண்டுகளில்
ஏழு மாநில ஆட்சிகளைக் கவிழ்த்து,
மாநில சுயாட்சியை
மூச்சுத் திணற படுக்கையில்
கிடத்தியாகி விட்டது.

மரணப்படுக்கையில்
மனிதன் கிடக்கையிலும்,
தேசத்திற்கான தியாகத்தைச் செய்ய
ஐசியு-க்கும் ஜிஎஸ்டி வரி
போட்டாகி விட்டது.

Spread the love