September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தேர்தல் வரப்போவுது.. பட்டியல் தயாராகிறது!

ந்து மாநிலத் தேர்தல்கள் நெருங்குகின்றன. பிரதமர் மோடியும் அவரது சகா அமித் ஷாவும் சுறுசுறுப்பாகின்றனர். அவிழ்த்துவிட வேண்டிய பொய்களின் பட்டியல் தயாராகிறது. ஒத்திகையும் செய்து பார்க்கின்றனர். சங் பரிவாரத்தினரைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. ஊடகங்களை மிரட்டுவதற்கு செய்ய வேண்டியவை..சமூக ஊடகங்களில் செய்ய வேண்டிய கண்காணிப்பு வேலைகள், தயாரிக்க வேண்டிய காணொலிக் காட்சிகள்.. என ஏராளமான வேலைகள் காத்திருக்கின்றன. ஆர்எஸ்எஸ் “சர்சங்சாலக்” மோகன் பகவத்தும் வலம் வரத் தொடங்கிவிட்டார். மோடியும் ஷாவும் உரையாடுகின்றனர்.

   மோடி : காஷ்மீர் போனீங்களே.. அங்கே என்ன பேசினீங்க?

   ஷா : எல்லாம் நீங்க கத்துக் கொடுத்த வித்தைதான்.. 70 வருஷமா அங்கே வளர்ச்சிக்குக் குறுக்கே நின்னவங்களையெல்லாம் வெரட்டி விட்டுட்டோம். “நேருவின் பாதை-எங்கள் பாதை”ன்னு நின்ன தலைவர்களையெல்லாம் செமத்தியா கவனிச்சுட்டோம். எங்ககிட்ட யாராவது வாலாட்டினா தொலைச்சுப்பிடுவோம் ஜாக்கிரதைன்னு மிரட்டிட்டு வந்தேன்.

அது சரி.. கோவா போனீங்களே.. நீங்க என்ன பேசினீங்க?

   மோடி : நாம வேற எதைப் பத்திப் பேசப் போறோம்? வளர்ச்சி பற்றித்தான். அதைப் புதுசா எப்படி சொல்லலாம்னு யோசிச்சேன். கோவா முன்னேறணும்னா அங்கே இரட்டை எஞ்சின் ஆட்சி தொடரணும்னு பேசினேன்,,

   ஷா : இரட்டை எஞ்சின்னா ரெட்டை மாட்டு வண்டின்னு நெனச்சுர மாட்டாங்களா..?

   மோடி : அப்படி நெனச்சாலும் தப்பில்லையே.? நம்மோட பாரம்பரிய ஆட்சி.. ராமபிரானோட ஆட்சின்னு நெனச்சா நல்லதுதானே? 

(அமித் ஷா சிரிக்கிறார்)

   மோடி :  இரட்டை எஞ்சின் ஆட்சிக்கு விளக்கம் சொல்லாம இருப்பேனா? சொன்னேன். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சிதான் இரட்டை எஞ்சின் ஆட்சி. நீங்க எல்லாரும் பிஜேபிக்கே ஓட்டுப் போடணும்னேன். எல்லாரும் ரெண்டு கைகளையும் சேர்த்துத் தட்டினாங்க!

   ஷா : ஆமாமா.. ஒரு கையால தட்ட முடியாதே?

     (இப்ப மோடி சிரிக்கிறார்)

   மோடி : நம்மோட வளர்ச்சியை நேரு வந்து பார்க்கணும்னா, அண்ணாந்து பார்க்கோணும்.. அவருக்குத் தலை வலிக்கோணும்.. இப்படி ஒரு வளர்ச்சியான்னு அவரு பிரமிக்கோணும்னு அள்ளி விட்டேன்,,

   ஷா : சூப்பர்! இதே மாதிரி உ.பி., உத்தராகண்ட், மணிப்பூர்ல எல்லாம்  பேசிடலாம். பஞ்சாபிலே..?

   மோடி : பஞ்சாபிலேதான் அம்ரீந்தர் சிங் மாட்டப் போறாரே? பாவம், நம்ம கிட்ட வந்து தலையைக் கொடுத்துட்டு நிதிஷ் குமார் மாதிரி காணாமப் போகப் போறாரு!

   ஷா : நிதிஷ் குமார், ஈபிஎஸ்-ஓபிஸ்ஸையெல்லாம் பாத்தும் பாடம் கத்துக்கலேன்னா நாம என்ன செய்ய முடியும்?

   மோடி : ஆந்திராவிலே சந்திரபாபு நாயுடு நம்ம கிட்ட கோவிச்சுட்டு வீராவேசமாப் போனாரே.. இப்ப என்ன ஆச்சு? ஒய்எஸ்ஆருக்குக் குடைச்சல் குடுக்கணும்னா நாம இல்லாம முடியுமா? அதான் போன மச்சான் திரும்பி வராரு..! ஷா : அவரைப் கட்டிப் புடிச்சு ஆறுதல் சொல்லி குளோஸ் பண்ணிருவோம்!

       (இருவரும் சிரிக்கின்றனர்

   ஷா : கட்டிப்புடி வைத்தியம்னதும் எனக்கு ஞாபகம் வருது.. ரோமுக்குப் போய் போப்பையே கட்டிப் புடிச்சீங்களே.. அவர் என்ன நெனச்சுருப்பாரு?

   மோடி : ஜுலியஸ் சீசர்-புரூட்டஸ் ஞாபகம் வந்திருக்கும்.. ஆனா வெளிப்படையா ஒண்ணும் சொல்லலை. எல்லாரையும் கூப்பிடற மாதிரி அவரையும் நீங்க கண்டிப்பா இந்தியா வரணும்.. உங்க பாதம் இந்திய மண்ணிலே படணும்னு கும்பிடு போட்டுக் கேட்டுக்கிட்டேன். சரி, வரேன்னுருக்காரு..

   ஷா : மூணு வருஷம் முன்னாலே அவர் கேரளாவுக்கு வர இருந்ததை தடுத்து நிறுத்தினோம். இப்ப நாமே அவரைக் கூப்பிடறோம். முஸ்லிம்களுக்கு அடுத்தபடியா கிறித்தவர்களைத்தான் ஓரமா உட்கார வைக்கப்போறோம்கறதை எப்படி புரிஞ்சுக்காம இருக்காங்க, ஆச்சரியமா இருக்கே..?

   மோடி : இங்கே தலித்துகள் மட்டும் புரிஞ்சுக்கிட்டாங்களா என்ன? அவங்கள்லே சில பேருக்கு ஒண்ணு ரெண்டு போஸ்ட் குடுத்து மடக்கிட முடியுது… நன்கொடைகள் வாங்க அம்பானி-அதானி-டாட்டா வகையறாக்களை கைலே போட்டுக்கோங்கன்னு நாக்பூர் கத்துக் கொடுத்த பாடம் நமக்கு அருமையா கைகொடுக்குது..

   ஷா : மதத் தீவிரவாதத்தை எதிர்த்து உலகமே ஒண்ணா நின்னு முறியடிக்கணும்னு பேசினீங்களே, இந்து தீவிரவாதத்தைப் பத்தி அவங்க எதுவும் கேட்கலையா?

   மோடி : அதைக் கேட்க விடுவேனா? நம்மோட தடுப்பூசி புராணத்தை அவிழ்த்துவிட்டு டைவர்ட் பண்ணிட்டேன். அதோட, அவங்களுக்கு இந்தியாவோட மார்க்கெட் வேண்டியிருக்குல்ல? அதுனாலே நமைப் பத்தி தெரிஞ்சாலும் ஒண்ணும் கேட்காம இருக்காங்க..

   ஷா : பசிக்குறியீட்டில நாம 101-வது இடத்தில இருக்கறதைப் பத்தி யாராவது கேட்டாங்களா?

   மோடி : பசி-பட்டினி, வேலையின்மை, பெட்ரோல்-டீசல்-சிலிண்டர் விலை எல்லாம் தலைவிரிச்சு ஆடற இங்கேயே வளர்ச்சி, வளர்ச்சின்னு கூப்பாடு போட்டு நம்மால டைவர்ட் பண்ண முடியும்போது அயல்நாட்டிலே டைவர்ட் பண்றதா கஷ்டம்..? அதையெல்லாம் வெற்றிகரமாப் பண்ணிட்டேன்!

   ஷா :  பெகாசஸ் ஒட்டுக் கேட்பு பற்றி…?

   மோடி : இங்கே சுப்ரீம் கோர்ட்லயே ஒரு கமிட்டி போடறாங்களே தவிர, நம்மைப் பாத்து ஒட்டுக் கேட்டீங்களா, இல்லியா,, ஸே எஸ் ஆர் நோ-ன்னு கேக்கலியே? அப்படி கேட்டிருந்தா நாம என்ன பதில் சொல்லித் தப்பிச்சிருக்க முடியும்?

(அறைக் கதவு படாரெனத் திறக்கிறது. சுதிஷ் மின்னியும் சிவம் சங்கர் சிங்கும் உள்ளே நுழைக்கின்றனர். மோடியும் அமித் ஷாவும் திடுக்கிட்டு பேச்சை நிறுத்துகின்றனர்). 

   சுதிஷ் மின்னி : நாங்க ரெண்டு பேரும் உங்களைப் பத்தியும் ஆர்எஸ்எஸ் பத்தியும் நல்லாத் தெரிஞ்சவங்கன்னு உங்களுக்குத் தெரியும். சுப்ரீம் கோர்ட் கேக்காட்டா என்ன? ஸே எஸ் ஆர் நோ-ன்னு  இப்ப நாங்க கேக்கறோம். உங்களால பதில் சொல்ல முடியாது. இதையெல்லாம் நாங்க மக்கள்கிட்ட சொல்லப் போறோம். கேட்டடாங்கன்னா உங்ககிட்டேயிருந்து தப்பிச்சுக்குவாங்க.. மக்கள் என்ன செய்யப் போறாங்கன்னு பார்ப்போம்!

(இருவரும் வெளியேறுகின்றனர். மோடியும் ஷாவும் அதிர்ச்சியில் உறைந்துபோய் அமர்ந்திருக்கின்றனர்).

Spread the love