திருவள்ளுவர் இன்று இருந்து தமிழகத்தை உலுக்கிய மழை வெள்ளத்தை அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார் என்று ஒரு கற்பனை :
மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
‘போட்’டினில் பின் செல்பவர்
மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார்
இளைத்தோர் கீழ்போர்ஷனில் குடி இருப்போர்
நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக
ஜலம் உள்ளே வருமாவென !
இல்லாமை தந்திடுமே துன்பம் புயல்மழையால்
மின்சாரம் போயினும் அஃதே !
வெள்ளத்தால் வந்திடும் துயரம் நல்ல
உள்ளத்தோர் உதவா விடின்
நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்
ஊர்வனவால் பெருந்தொல்லை காண்
ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்
நாறிடும் பிழைப்பு என்றறி
தண்ணீராய் செலவழித்து கட்டிய வீடுதனில்
தண்ணீரே நுழைந்தது பார்
ஆஸ்தியென ஆசையாய் கட்டின வீடெல்லாம்
நாஸ்தி ஆனதே சோகம்
இருளில் தவிப்பது துன்பமதனினும் துயரம்
பொருள்கள் பாழாகும் நிலை
(வாட்ஸ்அப்பில் கிடைத்தது)
More Stories
2022 ஜுன் 18 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 ஜுன் 17 பதிவுக்கு மூன்று படங்கள்…
2022 ஜுன் 16 பதிவுக்கு மூன்று படங்கள்…