September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தமிழ்நாடு கல்விக் குழுவிற்கு

புதிய ஆசிரியன் இதழ் அளிக்கும் பரிந்துரைகள்
உமா

  1. ஓராசிரியர் பள்ளிகளுக்கும் ஈராசிரியர் பள்ளிகளுக்கும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்க வேண்டும் .
  2. வகுப்பறைப் பற்றாக்குறையை சரி செய்ய புதிய வகுப்பறைகளை உடனடியாகக் கட்டித் தர வேண்டும் .
  3. கழிப்பறைப் பற்றாக்குறைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
  4. தூய்மைப் பணியாளர்களை நியமிக்கவும், அவர்களுக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டும் .
  5. பாடப் புத்தகச் சுமையைக் குறைக்க வேண்டும். பாடங்களையும் குறைக்க வேண்டும். உதாரணமாக, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு, சமூக அறிவியல் பாடங்கள் மிக அதிகமாக உள்ளன. பிற வகுப்புகளுக்கும் பாடங்களுக்கும் கள ஆய்வு செய்து பாடங்களைக் குறைக்க வேண்டும் .
  6. பதினொன்றாம் வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவுக்கு மாணவர்கள் சேர்க்கை குறைவாக நிகழ்வதால், அது குறையாமல் பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
  7. மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வு வகுப்பான 10 ஆம் வகுப்புக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்குத் தரப்படாததால் தரமான கல்வி கிடைப்பதில்லை. இந்த நிலை மாற வழிவகை செய்ய வேண்டும்.
  8. மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 2000 / 3000 என இல்லாமல் 750/800 என்ற அளவிற்குக் குறைக்க வேண்டும். பள்ளிகளால் அதிக எண்ணிக்கையுள்ள மாணவர்களை கவனிப்பது இயலவில்லை .
  9. வளரிளம் பருவக் குழந்தைகளைக் கையாள்வது சவாலாக இருப்பதால் ஒவ்வொரு பள்ளிக்கும் உளநல ஆலோசகர் கண்டிப்பாக நியமிக்க வேண்டும்.
  10. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இ.எம்.ஐ.எஸ். பணிக்கு தனியாக ஒருவரை நியமிக்க வேண்டும்.
  11. மருத்துவ விடுப்பில் , பிள்ளைப் பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்கு மாற்றாக ஒருவரை நியமித்து கற்றல்-கற்பித்தல் பணியில் ஈடுபடுத்துதல் அவசியம்.
  12. கல்விக்கான அனைத்துத் திட்டங்களும் எல்லாப் பள்ளிகளுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும்.
  13. தொடக்கப் பள்ளி, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விளையாட்டுத் திடல் கட்டாயம் தேவை. அதே போல விளையாட்டு ஆசிரியர்கள் நியமனமும் தேவை. ( முதல் வகுப்பு முதல் )
  14. மழலையர் வகுப்புகள் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் அவசியம் வேண்டும் .
  15. கற்றல்-கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும். உரையாடுதல், பகிர்தல் வகுப்பறைகளாக மாற்றம் பெற வேண்டும் .
  16. சி.சி.ஈ. மதிப்பீட்டில் புத்தக வாசிப்பு பகிர்வுக்கு மதிப்பெண் வழங்கி கிரேடு போடும் முறை வர வேண்டும்.
  17. நூலக வாசிப்பு 1 – 12 வகுப்புகளுக்கும் பழக்கப்படுத்த வேண்டும் .
  18. ஆசிரியர்கள் வாசிப்புக்குள் வருவது கட்டாயமாக்கப்பட வேண்டும் .
  19. 20 ஆண்டுகால பணி அனுபவம் மிக்க ஆசிரியர், தலைமை ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினர்களாக்கி அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.
  20. வருடத்தில் இரு முறை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கருத்தரங்கங்களை நடத்தி ஆசிரியர்களின் புதிய சிந்தனைகளைத் தொகுக்க வேண்டும்.
  21. அதிகாரிகள் கீழே உள்ளவர்களை அச்சுறுத்துவதற்கு மாறாக, கற்றல்- கற்பித்தல் குறித்த பகிர்வுகள், பிரச்சனை சார்ந்த கள எதார்த்தங்களைக் கண்டறியும் நபர்களாக இருக்க வேண்டும்.
  22. மாற்றுத் திறனாளி, சி.டபிள்யு.எஸ்.என். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தனியாக குறைக்கப்பட்ட பாடத்திட்டம் உள்ள புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் .
  23. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் நிர்வாகத்துக்குட்பட்ட ஆசிரியர்களின் தனித்திறன்கள், சாதனைகள் குறித்த விவரங்களை பள்ளியில் பராமரிக்க வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், இணை இயக்குநர், இயக்குநர், ஆணையர், கல்விச் செயலர் என அனைவரும் தங்கள் நிர்வாகத்திற்குட்பட்ட பணியாளர்களின் விவரங்களைப் பராமரிக்க வேண்டும் .
  24. மேற்சொன்ன விவரங்கள் வழி மட்டுமே ஆய்ந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் விண்ணப்பித்து விருது பெறும் நடைமுறை மாற வேண்டும்.
  25. தாய்மொழிவழிக் கல்வியை முதல் 5 வகுப்புகளுக்கு கட்டாயமாக்க வேண்டும்.
  26. ஆங்கில வழிக் கற்பித்தலுக்கு உரிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
  27. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை இணைத்து அரகப் பள்ளிகளாகவே நடத்த வேண்டும்.
  28. வாடகைக் கட்டிடங்களாக இயங்கும் அரசுப் பள்ளிகளை அரசு மீட்டு சொந்தக் கட்டடங்கள் உள்ள பள்ளிகளாக ஆக்க வேண்டும்.
  29. கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டபடி 25 சதவீத மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் முறை நீக்கப்பட வேண்டும்.
  30. பி.ஆர்.டி. ஆசிரியர்கள் தகவல் சேகரிக்கும் எந்திரங்களாக மட்டுமே செயல்படுவதால் அப்படிப்பட்ட பணிகளே தேவையில்லை. அவர்களை பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு நியமிக்க வேண்டும்.
  31. ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி சரியாகத் திட்டமிடப்பட வேண்டும் .
  32. பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    -அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு
    ([email protected] – 99769 86098)

தேனி சுந்தர்
அங்கன்வாடி :

  1. கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். அந்தந்த குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்பட வேண்டும். சொந்தக் கட்டிடங்களில் செயல்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
  2. மழலையர் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பராமரிப்பாளர்கள், சமையலர்கள் நிரந்தரப் பணியிடங்களில் நியமிக்கப்பட வேண்டும்.
  3. கற்றல் கற்பித்தல் கூடாது. உடலியக்கத் திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். குழந்தைகள் மகிழ்ச்சிகரமாக இருப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படல் வேண்டும்.
  4. மையத்திற்கு ஒரு ஆசிரியர் நியமிப்பை உறுதி செய்ய வேண்டும். 10 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் பின்பற்றப்பட வேண்டும்.
    தொடக்கக் கல்வி :
  5. அனைத்திற்கும் அடிப்படையான தொடக்க கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். வகுப்பிற்கொரு ஆசிரியர் அல்லது குறைந்தபட்சம் மொழிப்பாடங்களுக்கு மட்டுமாவது தனித்தனி ஆசிரியர்கள் நிரந்தரப் பணியிடங்களில் நியமிக்கப்பட வேண்டும்.
  6. அடிப்படை மொழித் திறன்களை வளர்ப்பதற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்க வேண்டும். பாடத்திட்டம் இன்னும் குறைக்கப்பட வேண்டும்.
  7. வீட்டுப் பாடங்கள் குறைந்த அளவே இருக்க வேண்டும்.
  8. நிர்வாகப் பணிக்கான ஆசிரியர்கள் அல்லது பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
  9. இது கணினி காலகட்டம். பெரும்பாலும் தகவல் சேகரிப்புப் பணிகள் நிறைய நடைபெறுகின்றன. எனவே செயல்பாட்டு நிலையில் இருக்கும் கணினிகள் வழங்கப்பட வேண்டும்.
  10. அனைத்துப் பள்ளிகளுக்கும் இணைய வசதி வழங்கப்பட வேண்டும்.
  11. குறைந்தபட்சம் பள்ளிக்கொரு திறன் வகுப்பறை உருவாக்கப்பட வேண்டும்.
  12. பள்ளிதோறும் கணினிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
  13. இங்கு வெறும் கண்காணிப்பு, மிரட்டல், பழி வாங்கும் நடவடிக்கைகள்தான் பள்ளிக் கல்வித்துறையின் அடையாளமாக இருக்கின்றன. கல்வி குறித்த புரிதலுடன் கூடிய செயலாக்கமாக இது மாற்றப்பட வேண்டும்.
  14. பள்ளிதோறும் நூலகர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவலர், ஏவலர், ஆயாக்கள் பணியிடங்கள் நிரந்தர அடிப்படையில் நிரப்பப்படல் வேண்டும்.
  15. பள்ளிப் பராமரிப்புப் பணிகள், நிர்வாகப் பணிகள் ஆசிரியர்கள் மீது சுமத்தப்படுதல் கூடாது.
  16. கற்பித்தல் பணிகள் சாராத பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துதல் கூடாது.
  17. ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் நேரடி கருத்தாளர்களைக் கொண்டு நடத்தப்படல் வேண்டும்.
  18. ஆசிரியர் பயிற்றுநர்களின் முக்கியமான பணி திட்டங்களின் தரத்தை மேம்படுத்துதல் ஆகும். எனவே அவர்களுக்கு அதற்குரிய பணிகள் மட்டும் அளிக்கப்படுதல் வேண்டும்.
  19. தொடக்கக் கல்விக்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்தக் கூடிய வகையில் உதவித் தொடக்கக் கல்வி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.
  20. ஆங்கிலவழி பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்ட பிறகு ஏராளமான பள்ளிகளில் இன்று தமிழ் வழி வகுப்புகளே இல்லை. எனவே அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் வழிப் பிரிவுகள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அந்தக் குழந்தைகளுக்கு இன்னும் கூடுதலான சலுகைகள் உயர்கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட வேண்டும்.
  21. ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் பாதிக்கப்படும் வகையிலும் குழந்தைகளின் கற்றல் இழப்பு அதிகரிக்கும் வகையிலும் பணிகள், கூட்டங்கள் திட்டமிடுதல் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
  22. அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு, கலை ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
  23. ஆசிரியர்களின் நிர்வாகம் சார்ந்த பணிகளில் ஏற்படும் தொய்வு அவர்களின் அன்றாட பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வெளிப்படைத் தன்மையுடன், விரைவான நிர்வாகம் இருக்க வேண்டும்.
  24. ஆசிரியர்கள் கண்காணிப்பில் இருக்கும் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவது ஏற்புடையது அல்ல. அவர்களுக்கு கற்பித்தல் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
  25. கண்காணிப்பிற்காக உருவாக்கப்படும் பதிவேடுகள் ஆசிரியர்களின் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்வதால் பதிவேடுகள் போதையில் இருந்து பள்ளிக் கல்வித்துறை விடுவிக்கப்பட வேண்டும்.
    26 பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்களுக்கான அனைத்துப் பொருட்களும் பள்ளியிலேயே வழங்கப்பட வேண்டும்.
  26. பணி மாறுதல், பதவி உயர்வு அடுத்த கல்வி ஆண்டு துவங்கும் முன்பு வழங்கப்பட வேண்டும்.
  27. தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்படுதல் வேண்டும்.
  28. படக் கதைப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.
  29. ஆண்டுதோறும் கலை, இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
  30. ஆசிரியர்களின் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த திட்டமிட வேண்டும்.
  31. சத்துணவு வழங்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்..
  32. மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

(9047140584 – [email protected])

சக.முத்துக்கண்ணன்

  1. ஆரம்பக்கல்வி (1-5ம் வகுப்புவரை) கட்டாய தாய்மொழி வழிக் கல்வி.
  2. பள்ளி வளாகங்களை ஒன்றிணைப்பதைத் தவிர்த்து அருகாமைப்பள்ளி முறைமையை கட்டாயமாக்குதல்.
  3. தற்போதைய பாடச்சுமையைக் கவனத்தில் கொண்டு முதலில் சரி செய்தல். (பாடப் புத்தகங்கள் சின்னச் சின்ன புத்தகங்களாகப் பிரித்து அச்சிட்டு வழங்குதல்.) 4. பாடத்திட்ட உருவாக்கத்தில் சாதி-மதச் சார்பற்ற அறிவியல் அணுகுமுறை.
  4. பாடத்திட்டக் குறிக்கோளை நிறைவேற்ற இந்திய அளவில் தரப்படும் பொதுவான உதாரணங்களை விடுத்து உள்ளூர் வளங்களை ஆதாரமாகக் கொள்ளுதல்.
  5. உள்ளூர் பாடத்திட்டங்களை மூத்த மாணவர்களைக் கொண்டு உருவாக்கி பள்ளியில் ஆவணம் செய்தல். முறையாக இவற்றை எஸ்.சி.ஈ.ஆர்.டி-யில் தொகுத்து பாடநூல் உருவாக்கத்தின்போது பரிசீலித்தல்.
    7.அனைத்துப் பாடங்களுக்கும் துணை நூல் கொண்டு வருதல். (குறைந்தபட்ச கற்றல் அடைவுக்கான செயலடிப்படையில் ஒரு நூல்)
  6. மேல்நிலைப்பள்ளிகளில் (6-12) நடுநிலை-உயர்நிலை-மேல்நிலை எனப் பிரித்து தனித்தனி தலைமையாசிரியர்களை நியமித்து நிர்வகித்தல்.
  7. பணிமூப்பு முறைமையை மாற்றி பத்தாண்டு ஆசிரியர் பணியனுபவத்தை தகுதியாகக் கொண்டு தலைமையாசிரியர் நியமனத்தில் (இடஒதுக்கீட்டின்படி) புதிய தேர்வு முறை கொணர்தல்.
  8. பொதுத்தேர்வு அழுத்தங்களிலிருந்து விடுபட மதிப்பெண் அற்ற கிரேடு அடிப்படையில் சான்றிதழ். அதில் விளையாட்டிற்கும் இணைச்செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் தருதல்.
    11 ஆசிரிய மாணவ விகிதாச்சாரம் தொடக்கநிலையில் 1:20 எனவும் உயர்நிலை மேல்நிலையில் 1:30 என்கிற நிலையில் நிர்ணயம் செய்தல்.
  9. எஸ்.எம்.சி. போன்ற மக்கள் தலையீட்டை வலுச்செய்து பள்ளி உட்கட்டமைப்பு மற்றும் மாணவ நலனில் ஊழலற்ற தன்மைக்கு வழிவகை செய்தல்.
  10. நிரந்தர துப்புரவாளர்கள், அலுவலகப் பணியாளர்களை உடனடியாக நியமித்தல்.
  11. பள்ளிப்பாடங்கள் மட்டும் போதாது. பல்வகை கலைகள்-பண்பாட்டு செயல்பாடுகளோடு கற்றலை விரிவான செயல்பாடாக மாற்ற சிறப்பாசிரியர் பணியிடங்களை பன்மடங்கு அதிகப்படுத்துதல்.
    15 அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களையும் அரசே நியமித்தல்.
    16 நூலக வாசிப்பை கற்றலில் ஒரு பகுதியாக மதிப்புறச் செய்தல். நிரந்தர நூலகரை நியமித்தல் மற்றும் ஆண்டு செயல்திட்டம் உருவாக்குதல்.
    17 பள்ளி விளையாட்டுப் போட்டிகளையும் அதன் அடைவுகளையும் கொண்டாட்டமாக்குதல்.
    (தொடர்புக்கு : 9944094428)
Spread the love